ather https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:42:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! https://www.91mobiles.com/tamil/ather-energy-plans-to-install-2500-plus-fast-charging-grids-by-end-of-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ather-energy-plans-to-install-2500-plus-fast-charging-grids-by-end-of-2023 Fri, 17 Feb 2023 07:19:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5884 திட்டங்கள் நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் விஷயத்தில் தனது எதிர்கால திட்டங்களையும் அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முதன்மையான பிராண்ட்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி முன்னிலை வகிக்கிறது. எலக்ட்ரிக் […]

The post இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! first appeared on .

]]>

Highlights

  • க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது
  • இந்த மையங்களின் எண்ணிக்கையை 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது.

திட்டங்கள்

நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் விஷயத்தில் தனது எதிர்கால திட்டங்களையும் அறிவித்துள்ளது.

அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முதன்மையான பிராண்ட்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி முன்னிலை வகிக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை கடந்த பல வருடங்களாகவே மெல்ல மெல்ல தான் வளர்ந்து வருகிறது. வேகமாக இந்த மாற்றம் நிகழாததற்கு முக்கிய காரணம் சார்ஜிங் வசதி போதிய அளவில் இல்லாமை ஆகும்.

 

ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடனும் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்யக்கூடியவைகளாக உள்ளன. இதனால் அன்றாடம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதில் சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரிச்செய்யும் விதமான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்காத நிறுவனங்கள் கூட சார்ஜிங் மையங்கள் உருவாக்கி அதன் மூலம் புதியதொரு வணிகத்தை துவங்க தயாராகி வருகின்றன.

1000+ மையங்கள்

அதேநேரம் சில இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக நேரடியாக சார்ஜிங் வணிகத்திலும் ஈடுப்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கு மிக சிறந்த உதாரணம் ஏத்தர் எனர்ஜி ஆகும். க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது. தற்போதுவரையில் மட்டும் 1000க்கும் அதிகமான ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் உள்ளன.

 

2500 + மையங்கள்

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 80 நகரங்களில் ஏத்தர் க்ரிட் நிலையங்கள் உள்ளன. தற்போது உள்ள 1000க்கும் அதிகமான க்ரிட் மையங்களின் எண்ணிக்கையை நடப்பு 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது. இதனை ஏத்தர் நிறுவனமே தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. இதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பிரச்சனை இருக்காது என ஏத்தர் நிறுவனம் நம்புகிறது. ஏத்தர் எனர்ஜியின் க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பெரிய மற்றும் வேகமான சார்ஜிங் நெட்வொர்க் ஆக உள்ளன.

இந்தியாவின் 3வது நிறுவனம்

இருப்பினும் தற்போதைக்கு ஏத்தர் க்ரிட் நிலையங்கள் 40% முக்கிய டயர்-1 நகரங்களிலேயே உள்ளன. மீதி 60 சதவீதம் தான் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் உள்ளன. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 12,419 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் 3வது மிகப் பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி உருவெடுத்துள்ளது. க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் மட்டுமின்றி, சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையையும் 2023 மார்ச் மாதத்திற்கு உள்ளாக, 100 நகரங்களில் 150 ஆக அதிகரிக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

உற்பத்தி அதிகரிப்பு

விற்பனை ஒருபக்கம் இவ்வாறு இருக்க, மறுப்பக்கம் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முனைப்புடன் உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் கடந்த 2023 ஜனவரி மாதத்தில்தான் 1 லட்சம் என்ற மைல்கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! first appeared on .

]]>
ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! https://www.91mobiles.com/tamil/ather-electric-scooter-sales-record-in-jan-2023-marked-1-lakh-production/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ather-electric-scooter-sales-record-in-jan-2023-marked-1-lakh-production Thu, 02 Feb 2023 08:40:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5497 ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரிக்க 35 மாதங்களை எடுத்துக்கொண்டது. அதன் தனது தயாரிப்பை அதிகப்படுத்திய நிலையில் அடுத்த 5 மாதத்தில் 20 ஆயிரம் என்ற மைல் கல்லையும், அடுத்த 5 மாதத்தில் 30 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எப்படிப் பிடித்தது. இந்த நேரத்தில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இதனால் அந்நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்தது. அடுத்த 3 […]

The post ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! first appeared on .

]]>

Highlights

  • ஏத்தர் நிறுவனம் தனது 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துக் கடந்த ஜனவரி மாதம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
  • இதைக் கொண்டாடும் விதமாக ஏத்தர் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தி ட்ரூ ரெட் ஏத்தர் 450எக்ஸ் என்ற கலர் ஆப்ஷனை காட்சிப்படுத்தியது.
  • தற்போது இந்த கலரில் ஸ்கூட்டர்கள் தயாராகத் துவங்கிவிட்டன.

ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரிக்க 35 மாதங்களை எடுத்துக்கொண்டது. அதன் தனது தயாரிப்பை அதிகப்படுத்திய நிலையில் அடுத்த 5 மாதத்தில் 20 ஆயிரம் என்ற மைல் கல்லையும், அடுத்த 5 மாதத்தில் 30 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எப்படிப் பிடித்தது.

இந்த நேரத்தில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இதனால் அந்நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்தது. அடுத்த 3 மாதத்திலேயே10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 40 ஆயிரம் என்ற மைல் கல்லையும் அடுத்த 2 மாதத்தில் அடுத்த 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 50 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எட்டி பிடித்து தனது தயாரிப்பைத் தீவிரப்படுத்தியது.

 

50,000 ஸ்கூட்டர்

இந்த 50 ஆயிரம் என்ற மைல் கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி தான் எட்டி பிடித்தது. தற்போது 6 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் அடுத்த 50 ஆயிரம் இல்லை எட்டி பிடித்து 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்துவிட்டது. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது. புதிய ஆலையில் அதிக உற்பத்தித் திறன் காரணமாக இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

வளர்ச்சி

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக ஏத்தர் நிறுவனம் ஒரே மாதத்தில் 12 ஆயிரம் ஸ்கூட்டர்களையும் தாண்டி தயாரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12,149 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இவே கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 2825 ஸ்கூட்டர்களை தான் தயாரித்திருந்ததது. ஒரே ஆண்டில் 9324 ஸ்கூட்டர்களை அதிகம் தயாரித்து 330.05 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

 

இதுவே கடந்த டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதம் 9187 ஸ்கூட்டர்களை தான் இந்நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது அதை விடக் கூடுதலாக 2962 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இது 32.24 சதவீத வளர்ச்சியாகும். ஏத்தர் நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

ஷோரூம்கள்

2022ம் ஆண்டு இறுதியில் ஏத்தர் நிறுவனம் 70 நகரங்களில், 89 ஷோரூம்களை அனுபவ மையங்களாகத் திறந்துள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்தே கடந்த ஜனவரி மாதம் தான் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான விற்பனையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிப்1ம் தேதி ஆட்டோ ஹோல்டு வசதியைத் தனது ஜென்3 ஸ்கூட்டர்களில் அப்டேட் செய்தது. இது சரிவான பகுதிகளில் ஸ்கூட்டரை நிறுத்தும்போது சரியாமல் இருக்கும்.

திட்டம்

ஏத்தர் நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் மாவட்டத்தில் துவங்கிய ஆலை தான். தற்போது இந்த ஆலையில் மொத்தம் 4.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஆண்டிற்குத் தயாரிக்க முடியும். இந்நிலையில் இந்நிறுவனம் தனது 3வது ஆலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இது தயாரானால் அந்த ஆலையில் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க முடியும் அத்துடன் தற்போது உள்ள 4.2 லட்சம் ஆலையையும் சேர்த்து மொத்தம் ஆண்டுக்கு 14.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்றுமதி

அடுத்த 2-3 ஆண்டுகளில் ஏத்தர் நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் தனது விற்பனையை அதிகரிக்க 250 நகரங்களில் 350 அனுபவ மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்களை 1400 இடங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

The post ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! first appeared on .

]]>
குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது ஏத்தர் https://www.91mobiles.com/tamil/new-ather-electric-scooter-spied-testing/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-ather-electric-scooter-spied-testing Wed, 07 Sep 2022 13:34:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2127 ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டரின் சோதனை நடைபெற்று வருவதை உணர்த்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவை தவிர்த்து குறைந்த விலை ஸ்கூட்டர் மாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. […]

The post குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது ஏத்தர் first appeared on .

]]>
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • இந்த ஸ்கூட்டரின் சோதனை நடைபெற்று வருவதை உணர்த்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவை தவிர்த்து குறைந்த விலை ஸ்கூட்டர் மாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டர்களை போன்றே காட்சியளிக்கிறது. குறைந்த விலையின் காரணமாக 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும்.

    இது தவிர ஏத்தர் நிறுவன வழக்கப்படி இந்த ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும். புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒலா S1 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்த சூழலில் புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவன விற்பனை சரிவதை தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஏத்தர் நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் அந்நிறுவனம் ஒரே ஆண்டில் 3 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. ஏராளமான மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஏத்தர் தயாரித்து வெளியிடும் ஸ்கூட்டர்களின் டிசைன், ஸ்டைல், அதில் உள்ள அம்சங்கள் எல்லாம் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரின் விற்பனை படு வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் தனது 50,000வது ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க புனே, சென்னை, ராஞ்சி பகுதியில் தனது எக்ஸ்பிரியன்ஸ் சென்டரை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 6410 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளது இது கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 297 சதவீதம் விற்பனை அதிகம்.

    இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் தனது விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 34 சதவீத மார்கெட் பங்கை வைத்து முதலிடத்தில் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதன் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.

    இது குறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை பிஸ்னஸ் அதிகாரி ரவ்நீட் எஸ் போக்கேலா கூறும் போது : “நாங்கள் அதிகபட்சமாக 6410 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம். எங்கள் வாகனங்களுக்கான டிமாண்ட் மார்கெட்டில் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி செய்வதில் சப்ளை செயின் சிக்கல் இருக்கிறது. சப்ளை செயின் பிரச்சனைகளைச் சரி செய்யச் செய்ய எங்கள் விற்பனை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் தயாரிப்பையும் வேகப்படுத்தியுள்ளோம். இதனால் காத்திருப்பு காலமும் குறையும். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் விநியோக திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்” எனக் கூறினார்.

    The post குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது ஏத்தர் first appeared on .

    ]]>