bajaj https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:53:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/bajaj-chetak-premium-edition-electric-scooter-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bajaj-chetak-premium-edition-electric-scooter-launched Fri, 03 Mar 2023 09:25:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6214 ‘சேத்தக்’ பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த சேத்தக் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேத்தக் பிரீமியம் எடிசன் புத்துணர்ச்சியான பெயிண்ட் தேர்வில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களைப் பார்க்கலாம். விலை 2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை […]

The post அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய பிரீமியம் எடிசனை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சேத்தக்’ பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த சேத்தக் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேத்தக் பிரீமியம் எடிசன் புத்துணர்ச்சியான பெயிண்ட் தேர்வில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களைப் பார்க்கலாம்.

விலை

2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப புதிய சேத்தக் பிரீமியம் எடிசன் ஸ்கூட்டரில் பல்வேறு இடங்களில் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஊடக அறிக்கையிலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய பிரீமியம் எடிசனுக்கு மேலும் சில புதிய பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறங்கள்

மேட் கோர்ஸ் கிரே, மேட் கரீபியன் நீலம் மற்றும் சாடின் கருப்பு என்பவை அந்த புதிய பெயிண்ட் தேர்வுகளாகும். புதிய சேத்தக் பிரீமியம் எடிசனுக்கான முன்பதிவுகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்க துவங்கியுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.22 லட்சம் என்ற அளவில் உள்ளது.

 

கூடுதல் வசதி

அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பிரீமியம் எடிசனின் விலை ஆனது ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் அதிகமாகும். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன உள்ளது என கேட்டால், வண்ண நிறத்திலான பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வண்ண நிறங்களில் வழங்கும். இதனுடன் ஸ்கூட்டரின் இருக்கை ஆனது இரு நிறங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், சாடின் கருப்பு நிற க்ராப் ரெயில் மற்றும் அதற்கு பொருத்தமான பில்லன் ஃபுட்ரெஸ்ட் கேஸ்டிங், பிளிங்கர்ஸ் மற்றும் மைய ட்ரிம் பாகங்கள் உள்ளிட்டவை மற்ற அப்டேட்களாகும். ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லேம்ப்பை சுற்றிலும் கருப்பு நிறத்தில் கேசிங் பொருத்தப்பட்டுள்ளது. புதிய சேத்தக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராக்கேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

The post அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india Wed, 01 Mar 2023 12:06:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6160 பேட்டரி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவின் ஜெமோபாய் (Gemopai) நிறுவனம் ரைடர் சூப்பர்மேக்ஸ் (Ryder Supermax) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
  • எலெக்ட்ரிக் ப்ளூ, கிராபைட் க்ரே, பிளாசிங் ரெட், ஸ்பார்க்கிளிங் ஒயிட், ஜாஸி நியான் மற்றும் ஃப்ளோசரண்ட் யெல்லோ என 6 கலர்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

பேட்டரி

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் நமக்கு போதுமான ஒன்றாக இருக்கும். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.

 

விலை

அத்துடன் பேட்டரி, வேகம் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்? என்ற நினைவூட்டல்களையும் இது வழங்கும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பி வழியில் ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முன்பதிவு

அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. ஜெமோபாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் (Dealerships) மூலமாகவோ வெறும் 2,999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம்.

யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தனிநபர் பயன்பாடு மற்றும் டெலிவரிக்காக தனித்தனி மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.

மிராகில் GR & டெக்ஸ் GR

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் யுலு நிறுவனத்தின் ஏஐ சார்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவற்றை செட்டாக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. மிராகில் GR தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதனை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 150 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.

வசதிகள்

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை இயக்க ஆயத்தமாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை பத்து மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி மூலம் யுலு நிறுவனம் செலவீனங்களை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலான்மையை மேம்படுத்தி, உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது.

 

பேட்டரி

யுலு ஃப்ளீட்டில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவை யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன. 2024 வாக்கில் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகப்படுத்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>