BYD https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:02:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! https://www.91mobiles.com/tamil/byd-launches-atto-3-special-edition-limited-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-launches-atto-3-special-edition-limited-car Fri, 13 Jan 2023 13:16:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4998 நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது. தோற்றம் இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் […]

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>

Highlights

  • பிஒய்டி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசனை உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளது.
  • இந்த ஸ்பெஷல் எடிஷனில் வெறும் 1200 கார்களை மட்டுமே உருவாக்க இருக்கிறது.
  • இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.
  • இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது.

தோற்றம்

இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் மட்டும் கருப்பு நிறத்திலும், வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஒய்டி அட்டோ 3 கார் அந்நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & மைலேஜ்

அட்டோ 3 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மிகப்பெரிய மோட்டாரை கையாளும் திறன் கொண்டது. மேலும் இந்த காரில் வெஹிகில் – டூ-லோடு பங்ஷன் இருக்கிறது. இந்த பேட்டரி 3.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

அம்சங்கள்

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி அம்சங்களை உள்ளடக்கியது. இதுபோக இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்பக்க சீட்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் டெயில் கேட், ஆகியஅம்சங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் 7-ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

விலை

இந்த கார் ஒரு லிமிட்டட் எடிசன் கார் என்பதால் வெறும் 1200 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ34.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>
டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! https://www.91mobiles.com/tamil/byd-plans-to-showcase-seal-electric-suv-in-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-plans-to-showcase-seal-electric-suv-in-auto-expo-2023 Fri, 06 Jan 2023 07:58:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4769 பிஒய்டி (BYD)- சீல் (Seal) முழு சார்ஜில் 700 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட தனது ‘சீல்’ எலக்ட்ரிக் காரை டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறக்க பிஒய்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம். சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இ6 என்ற எம்பிவி, மற்றும் அட்டோ 3 என்ற எஸ்யூவி கார்கள் […]

The post டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! first appeared on .

]]>

பிஒய்டி (BYD)- சீல் (Seal)

முழு சார்ஜில் 700 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட தனது ‘சீல்’ எலக்ட்ரிக் காரை டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறக்க பிஒய்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இ6 என்ற எம்பிவி, மற்றும் அட்டோ 3 என்ற எஸ்யூவி கார்கள் இரண்டும் எலெக்ட்ரிக் கார்களாகும். இந்நிலையில் இந்நிறுவனம் இன்னும் சில தினங்களில் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடக்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இன்னொரு புதிய காரை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

வடிவமைப்பு

இந்த பிஒய்டி (BYD)- சீல் (Seal) எலெக்ட்ரிக் செடான் கார் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை ஓசன் எக்ஸ் கான்செப்டில் ஓசன் அஸ்தெட்டிக்ஸ் ஃபிலாசஃபியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதற்கான பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4.80 மீட்டர் நீளமும், 1.87 மீட்டர் அகலமும், 1.46 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் வீல் பேஸ் மட்டும் 2.92 மீட்டர் நீளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற டிசைனை பொருத்தவரை இதன் பானட் பகுதியில் சரிவாக இருக்கும்படி கொடுத்துள்ளனர்.

வசதிகள்

இது போக ஷார்ப்பான ஹெட்லைட் கிளஸ்டர், கூபே வடிவ ரூஃப்லைன், பக்கவாட்டு பகுதிகளில் ஸ்டிராங்கான கேரக்டர் லைன்கள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஷார்ட் ஓவர் ஹேங்க்ஸ், அக்ரஷிவ் பம்பரின் கீழ்ப் பகுதியில் பெரிய ஏர் இன்டெக்கிற்கான இடம், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள், முழு அகலமான எல்இடி லைட் பார். இது போக பிஒய்டி அட்டோ 3 காரில் உள்ளதைப் போல இந்த காரிலும் சுழலும் 15.6 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், குறைவான ஃபிசிக்கல் பட்டன், டிரைவ் மோட்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர்கள், பெரிய ஏசி வென்ட்கள், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், மற்றும் இரண்டு டோன்களால் ஆன கேபின் தீம் ஆகியன இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை பிளோடு பேட்டரி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 82.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டது. குறைந்த திறன் பேட்டரியில் இந்த கார் முழு சார்ஜில் 550 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிக திறன் கொண்ட பேட்டரியில் முழு சார்ஜில் 700 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் தொழிற்நுட்ப ஆப்ஷன்கள் உள்ளன. டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வேரியன்டை பொருத்தவரை 530 எச்பி பவரை வெளிப்படுத்தும், இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 650 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரும் அட்டோ 3 மற்றும் இவி6 ஆகிய கார்களுடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும்.

The post டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! first appeared on .

]]>
சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! https://www.91mobiles.com/tamil/byd-atto3-wins-award/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-atto3-wins-award Mon, 12 Dec 2022 08:34:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4244 பிஒய்டி அட்டோ3 சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் […]

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>

பிஒய்டி அட்டோ3

சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பென்ஸ், ஆடி போன்ற சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் இந்தியர்களே இந்த காரை அதிகளவில் புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருது

இந்த அட்டோ 3, தற்போது ‘விஏபி எலெக்ட்ரிக் ஃபேமிலி கார் ஆஃப் தி இயர் 2023’ (VAB Electric Family Car of the Year 2023) விருதை வென்றிருக்கின்றது. 15 நடுவர்கள் அடங்கிய குழுவே இந்த விருதை எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியிருக்கின்றது. இந்த 15 நடுவர்களும் மோட்டார் வாகன உலகைச் சேர்ந்த கை தேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள். இவர்களின் நற்மதிப்புடன் சேர்த்து 74 க்கும் அதிகமானோர் தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற காராக இந்த எலெக்ட்ரிக் கார் இருப்பதாக வாக்களித்திருக்கின்றனர்.

போட்டியில் பிஒய்டி அட்டோ 3 உடன் சேர்த்து ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், சிட்ரோன், நிஸான், சியூப்ஆர்ஏ, எம்ஜி, ஐவேஸ், செரஸ் மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களும் இந்த போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் தயாரிப்புகளைக் காட்டிலும் மிக சிறப்பானதாக பிஒய்டி அட்டோ3 காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே பல கட்ட ஆய்விற்கு பின்னர் அக்காருக்கு மிக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டிசைன், அதிக கம்ஃபோர்ட், தரம் என அனைத்திலும் இந்த கார் மிக தரமானது என்று மக்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வாரண்டி, லாபம், அதிக இட வசதி, உயர் தர சிறப்பம்சங்கள் ஆகியவைகள் விஷயத்திலும் இந்த கார் நற் மதிப்பையே பெற்றிருக்கின்றது.

ஐந்து ஸ்டார்

பிஒய்டி ஏற்கனவே அதிக பாதுகாப்பான வாகனம் என்கிற விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பான கார் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு விருதுகளை இந்த கார் வெகு விரைவில் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 33.99 லட்சம். இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஏராளமான இந்தியர்கள் எலெக்ட்ரிக் காரை புக் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

மைலேஜ்

இந்த காரில் ஓர் ஃபுல் சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வாயிலாககூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட 10 மணி நேரங்களை அட்டோ 3 எடுத்துக் கொள்ளும்.

திறன்

இந்த மின்சார காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரையே பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

வசதிகள்

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவையே பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>