citroen https://www.91mobiles.com/tamil Thu, 15 Sep 2022 13:01:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/3-upcoming-affordable-electric-cars-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-upcoming-affordable-electric-cars-in-india Thu, 15 Sep 2022 12:58:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2356 இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தை பங்குடன் முன்னணியில் உள்ளது. ஆனால் வரும் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். ஏனெனில் நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சிட்ரோன் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது […]

The post விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தை பங்குடன் முன்னணியில் உள்ளது.

ஆனால் வரும் காலங்களில் இந்த நிலைமை மாறலாம். ஏனெனில் நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சிட்ரோன் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.

இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் 3 எலெக்ட்ரிக் கார்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலையும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV)

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை (Tata Nexon EV) விற்பனை செய்து வருகிறது. இதில், டிகோர் எலெக்ட்ரிக் காரில் 26kWh பேட்டரி தொகுப்பும், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2kWh பேட்டரி தொகுப்பும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றுதான் டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மிகவும் விலை குறைவான மாடல் என்பதால், அனேகமாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் 26kWh பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் சுமார் 300 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதாலும், விலை மிகவும் குறைவு என்பதாலும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் (Citroen-C3 EV)

சிட்ரோன் சி3 கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் கார் சந்தைகளுக்காக சி3 காரின் அடிப்படையிலான இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை சிட்ரோன் நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் அனேகமாக வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரில் பல்வேறு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 50kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாக இருக்கலாம். இந்த பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 362 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் இதை காட்டிலும் சிறிய பேட்டரி ஆப்ஷன்தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 300 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையில் இந்த பேட்டரி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை போலவே, சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் கார் (MG Small EV)

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்ட வுல்லிங் ஏர் எலெக்ட்ரிக் காரின் (Wuling Air EV) அடிப்படையில் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறிய எலெக்ட்ரிக் காரில் 20kWh அல்லது 25kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரின் காரின் டிரைவிங் ரேஞ்ச் 200 முதல் 250 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விலை குறைவான இந்த 3 புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளதால், இவை விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

The post விரைவில் வர இருக்கும் விலை குறைந்த எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>
இந்தியாவில் அறிமுகமாகிறது சிட்ரோனின் முதல் எலெக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/citroen-c3-ev-india-launch-before-march-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=citroen-c3-ev-india-launch-before-march-2023 Tue, 13 Sep 2022 14:34:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2282 இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் C3 மாடலை தழுவி எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோயன் C3 EV மாடல் புதிதாக இணைய இருக்கிறது. இந்த […]

The post இந்தியாவில் அறிமுகமாகிறது சிட்ரோனின் முதல் எலெக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் C3 மாடலை தழுவி எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோயன் C3 EV மாடல் புதிதாக இணைய இருக்கிறது. இந்த சிட்ரோயன் C3 EV மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் தான் சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் எஸ்யுவி சார்ந்த பி பிரிவு ஹேச்பேக் மாடலாக அறிமுகமானது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஹேச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் ஒருபக்கம் பெருகிக் கொண்டு இருக்கும் நிலையில், அதனை சார்ஜ் செய்வதற்கான பாஸ்ட் சார்ஜிங் மையங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மற்ற நிறுவனங்களைப் போல ஆடி நிறுவனமும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து ஆடி விற்பனை மையங்களில் 22 கிலோ வாட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஆடி, இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்து இருக்கிறது. ஆடி விற்பனை மையங்கள் மற்றும் வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 கிலோ வாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. 16 விற்பனை மையங்களில் 50 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் ஆடி இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது ஆடி நிறுவனம் இ-டிரான் எஸ்யுவி, இ-டிரான் ஸ்போர்ட் பேக், இ-டிரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி போன்ற எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. “மாற்று எரிசக்தி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய தெளிவான திட்டம் தீட்டி இருக்கிறோம். நாங்கள் நாடு முழுக்க 100-க்கும் அதிக சார்ஜர்களை இன்ஸ்டால் செய்து இருக்கிறோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம். எதிர்காலம் எலெக்ட்ரிக் தான், அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது,” என ஆடி இந்தியா நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான் தெரிவித்து இருக்கிறார்.

The post இந்தியாவில் அறிமுகமாகிறது சிட்ரோனின் முதல் எலெக்ட்ரிக் கார்! first appeared on .

]]>
இந்தியாவிற்கு வரும் சிட்ரோயனின் எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/newautomobile-citroen-c3-electric-hatchback-car-to-launch-in-december/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=newautomobile-citroen-c3-electric-hatchback-car-to-launch-in-december Sat, 13 Aug 2022 10:10:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1600 சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் தனது குறைந்த விலை காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிட்ரோயன் நிறுவனம் மற்றொரு புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டெலாண்டிஸ் நிர்வகிக்கும் சிட்ரோயன் பிராண்டு சமீபத்தில் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 மாடல் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து புதிய சிட்ரோயன் C3 […]

The post இந்தியாவிற்கு வரும் சிட்ரோயனின் எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

  • சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் தனது குறைந்த விலை காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
  • சிட்ரோயன் நிறுவனம் மற்றொரு புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டெலாண்டிஸ் நிர்வகிக்கும் சிட்ரோயன் பிராண்டு சமீபத்தில் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 மாடல் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து புதிய சிட்ரோயன் C3 கார் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் மீண்டும் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் C3 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. சிட்ரோயன் C3 காரை தழுவி உருவாகும் எலெக்ட்ரிக் கார் டிசம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனை ஏப்ரல் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டு இருக்கும். இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் மாட்யுலர் CMP பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த கார் வழக்கமான ICE மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பாகங்களை உள்நாட்டில் இருந்தே பயன்படுத்த இருக்கிறது.

சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடெட் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களோடு வெளிவற இருக்கிறது.

விலையைப் பொருத்தவரை இந்திய சந்தையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 13 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த கார் டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக அமையும்.

The post இந்தியாவிற்கு வரும் சிட்ரோயனின் எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>