coming soon https://www.91mobiles.com/tamil Fri, 13 Jan 2023 12:37:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தது. https://www.91mobiles.com/tamil/oneplus-nord-ce-3-smartphone-photos-leaked-online-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-nord-ce-3-smartphone-photos-leaked-online-specs-features Fri, 13 Jan 2023 12:37:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4992 சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த […]

The post ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தது. first appeared on .

]]>

சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு இதன் முந்தைய மாடலைப் போன்றே மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போனை சார்ஜ் செய்யும் நேரம் நிமிடங்களிலேயே இருக்கும். இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி நீட்டிப்பு

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன்மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கனெக்டிவிட்டி

புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

The post ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தது. first appeared on .

]]>
50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜ் வசதியோட ஒரு பட்ஜெட்போன்! https://www.91mobiles.com/tamil/infinix-note-12i-might-launching-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12i-might-launching-soon-in-india Fri, 13 Jan 2023 08:26:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4975   டிஸ்ப்ளே Infinix Note 12i ஸ்மார்ட்போன் செப்டம்பர் 2022 இல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இதன் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். Infinix Note 12i 2022 ஸ்மார்ட்போனானது முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 100% DCI-P3 கவரேஜ், 92% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.   சிப்செட் Infinix Note 12i ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் […]

The post 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜ் வசதியோட ஒரு பட்ஜெட்போன்! first appeared on .

]]>

Highlights
  • Infinix Note 12i ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்.
  • 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜ் போன்ற வசதிகளோடு இந்த போன் வருகிறது.
  • இந்தியாவில் இம்மாதம் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


 

டிஸ்ப்ளே

Infinix Note 12i ஸ்மார்ட்போன் செப்டம்பர் 2022 இல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி இதன் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். Infinix Note 12i 2022 ஸ்மார்ட்போனானது முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 100% DCI-P3 கவரேஜ், 92% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

 

சிப்செட்

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போனானது வெப்பச் சிதறலுக்காக 3D 6-லேயர் கிராபெனின் குளிரூட்டும் அமைப்பைக் கொண்டிருக்கிறது.

 

மெமரி

இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 2டிபி வரை இதன் சேமிப்புத்திறனை விரிவாக்கம் செய்யலாம்.

 

கேமரா

Infinix Note 12i ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி பிரைமரி ஷுட்டர், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான XOS 10.6 ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது.இதன் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி VoLTE, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS ஆடியோ, FM ரேடியோ மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. 5000mAh பேட்டரி ஆதரவுடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் தவறு! ரூ.10,000 விலையில் இந்தியாவுக்கு வரும் Infinix Note 12i.

 

விலை

Infinix Note 12i 2022 மொபைல் இந்தோனேசிய ரூபாய் மதிப்பில் 2,299,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதன் இந்திய விலை மதிப்பு ரூ.12,500 ஆகும். இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனானது Force Black, Alpine White மற்றும் Metaverse Blue வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இதே அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ரூ.10,000 விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம்.

 

ஒரே ஒரு குறை

இதில் உள்ள குறை என்னவென்றால், இது ஒரு 4ஜி மொபைல். சமீபகாலமாக வெளியாகும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் கூட 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வாடிக்கையாளர்களின் கவனம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது இருக்கும் சமயத்தில் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் எவ்வளவு வரவேற்பு பெறும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The post 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜ் வசதியோட ஒரு பட்ஜெட்போன்! first appeared on .

]]>