Electric Car https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 08:54:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! https://www.91mobiles.com/tamil/citroen-ec3-electric-car-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=citroen-ec3-electric-car-launched-in-india Tue, 28 Feb 2023 09:24:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6111 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). மிகவும் குறைவான விலையில் வரும் என வெளியான தகவல்கள்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தன. இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகியவற்றை எல்லாம் வைத்து […]

The post விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! first appeared on .

]]>

Highlights

  • சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது
  • இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). மிகவும் குறைவான விலையில் வரும் என வெளியான தகவல்கள்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தன. இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல், ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், சிட்ரோன் நிறுவனம் சிறப்பான விலை நிர்ணயத்தை செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

 

பேட்டரி & மைலேஜ்

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 29.2 kWh திறனுடைய பேட்டரி (Battery) ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 56 பிஹெச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 320 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள முடியும். சிறப்பான ரேஞ்ச் பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

அம்சங்கள்

இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 10.2 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதுதவிர உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கையை சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும் 4 ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள் ஆகிய அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 9 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும், 4 மோனோ டோன் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

வேரியண்ட் & விலை

லைவ் மற்றும் ஃபீல் என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது லைவ் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் ஃபீல் வேரியண்ட்டின் விலை 12.13 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஃபீல் வைப் பேக் மாடலின் விலை 12.28 லட்ச ரூபாய் ஆகவும், ஃபீல் ட்யூயல் டோன் வைப் பேக் மாடலின் விலை 12.43 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

போட்டி

இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காருக்கும் (MG Air EV) சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது. இதில், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 

 

 

 

The post விற்பனைக்கு வந்தது சிட்ரோன் EC3! first appeared on .

]]>
குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? https://www.91mobiles.com/tamil/renault-might-introduce-kwid-all-electric-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=renault-might-introduce-kwid-all-electric-in-india-soon Tue, 14 Feb 2023 10:45:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5823 இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பிரிமியம் செக்மெண்டில் மட்டுமே கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.   […]

The post குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.
  • அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பிரிமியம் செக்மெண்டில் மட்டுமே கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

டாடா இவி

டாடா நிறுவனம் முதன் முறையாக ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாடா டியாகோ இவி கார் தான் தற்போது மார்கெட்டில் குறைந்த விலை இவி காராக இருக்கிறது. இந்நிலையில் மார்கெட்டில் கார் தயாரிப்பு நிறுவனம் அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்டில் இவி கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

 

ரெனால்டும் களம் இறங்குகிறது

எம்ஜி, சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் விரைவில் குறைந்த விலையில் இவி கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் ரெனால்ட் நிறுவனமும் இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை களம் இறக்கப்போவதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதற்காகத் தனது என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரை பயன்படுத்தப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

க்விட் இவி

ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரித்து இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இது தற்போது உள்ள க்விட் காரை விடப் பார்க்கச் சிறப்பானதாகவும், அதிகமான அம்சங்கள் நிறைந்ததாகவும், அதிக பேட்டரி லைஃப் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ரெனாலட் க்விட் எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே வெளிநாடுகளில் வேறு வேறு பெயர்களில் விற்பனையாகி வருகிறது. ஐரோப்பாவில் டேக்கியா ஸ்பிரிங் இவி என்ற பெயரிலும், சீனாவில் ரெனால்ட் சிட்டி கே-ஸிஇ என்ற பெயரிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் தான் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாற்றங்கள்

இந்த ரெனால்ட் க்விட் இவி காரின் டிசைனை பொருத்தவரை தற்போது உள்ள க்விட் காரின் பெரும்பாலான அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. ஆனால் சில சின்ன சின்ன ஆல்ட்ரேஷன்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சில டெக்னிக்கல் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் எலெக்ட்ரிக் காரின் தேவைகளுக்குத் தகுந்தார் போல மாற்றப்படும் எனத் தெரிகிறது.

மைலேஜ்

இந்த காரின்பேட்டரி குறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் ரெனால்ட் நிறுவனம் முழு சார்ஜில் 230-305 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட வாகனமாக இதை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மட்டுமல்ல இந்த காரின் அதிகபட்ச வேகமாக 125 கி.மீ வேகம் செல்லும் மோட்டாரை ஃபிட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டும் என எதிர்பார்க்கலாம்.

 

திறன்

இது 0-80 சதவீத சார்ஜை வெறும் 30 நிமிடத்தில் ஏற்றும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இந்த காரின் விலை தான். இந்த காரை ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. அப்படி இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தால் குறைந்த பட்ஜெட் கார் செக்மெண்டில் மாருதி நிறுவனம் தற்போது பெருவாரியான கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் விற்பனையில் பலத்த அடி ஏற்படும். மேலும் குறைந்த பட்ஜெட்டில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ரெனால்ட் நிறுவனம் மாறும் என எதிர்பார்க்கலாம்.

The post குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? first appeared on .

]]>
இந்தியாவில் 2 எஸ்யூவி எலக்ட்ரிக் கான்செப்ட் கார்களை காட்சிப்படுத்தியது மஹிந்ரா! https://www.91mobiles.com/tamil/mahindra-showcased-xuv-e9-and-be05-electric-suv-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mahindra-showcased-xuv-e9-and-be05-electric-suv-in-india Mon, 13 Feb 2023 08:32:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5774 அறிமுகம் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிக மும்முரமாக இருக்கிறது. எப்படியாவது டாடா நிறுவனத்திற்குப் போட்டி போட பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்குத் தகுந்தார் போல வரிசையாகத் தனது இவி லைன்அப்களை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாகத் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எல்லாமே எஸ்யூவி மஹிந்திரா […]

The post இந்தியாவில் 2 எஸ்யூவி எலக்ட்ரிக் கான்செப்ட் கார்களை காட்சிப்படுத்தியது மஹிந்ரா! first appeared on .

]]>

Highlights

  • மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கைளை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இவை எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
  • இந்த கார்கள் 2024 மற்றும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அறிமுகம்

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிக மும்முரமாக இருக்கிறது. எப்படியாவது டாடா நிறுவனத்திற்குப் போட்டி போட பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்குத் தகுந்தார் போல வரிசையாகத் தனது இவி லைன்அப்களை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாகத் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எல்லாமே எஸ்யூவி

மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 ஆகிய இரண்டு வாகனங்களுமே கான்செப்ட் கார்கள் தான் இது பார்க்க ஆம்பிள் லுக்கில் இருக்கிறது. இந்நிறுவனம் எஸ்யூவி பாடி டைப்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட தனது புதிதாக ஸ்கார்பியோ என், மஹிந்திரா தார் அப்டேட், எக்ஸ்யூவி 700, புதிய பொலேரோ ஆகிய எஸ்யூவிகளை வரிசையாக அப்டேட் செய்தது.

மஹிந்திரா தற்போது முழு எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதில் தீவிரமான கவனத்தைச் செலுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 ஆகிய மாடல்கள் அந்நிறுவனத்தின் முக்கியமான மாடல் கார்களாக கருதப்படுகிறது. இதில் எக்ஸ்யூவி.இ ரேஞ்சில் மொத்தம் 2 கார் வரவுள்ளன அதில் ஒன்று தான் எக்ஸ்யூவி.இ9, அதே போல எக்ஸ்யூவி.பிஇ ரேஞ்சில் மொத்தம் 3 கார்கள் வரவுள்ளன அதில் ஒன்று தான் பிஇ.05

எப்போது வெளியாகும்

இந்த கார்கள் எல்லாம் மஹிந்திராவின் புதிய இன்குலோ என்ற ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி.இ ரேஞ்ச் கார்கள் வரும் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கே வந்துவிடும் என்றும், பிஇ ரேஞ்ச் கார்கள் 2025ம் ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்யூவி.இ9 (E 9)

இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரும் ஏப்ரல் 2025ல் தயாரிப்பு ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முற்றிலும் புதிய கார். எந்த பழைய மாடலின் தழுவலும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீளத்தைப் பொருத்தவரை 4790 மிமீ, கொண்டது. அகலம் 1905 மிமீ, உயரம் 1690 மிமீ, வீல் பேஸ் 2775 மிமீ அளவுகளைக் கொண்டது.

எக்ஸ்யூவி பிஇ.05 (BE 05)

மஹிந்திரா எக்ஸ்யூவி பிஇ.05 காரை பொருத்தவரை சற்று சிறிய காராகும். இது நீளம் 4370 மிமீ, அகலம் 1900 மிமீ, உயரம் 1690 மிமீ, இந்த கார் பிரிமியம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கார்கள் குறித்த தொழிற்நுட்ப தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. காருக்குள் இருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

அம்சங்கள்

ஆனால் டிஸ்பிளே செய்யப்பட்ட எக்ஸ்யூவி பிஇ.05 கான்செப்ட் எஸ்யூவி காரில் காரின் உள்ள பெரிய ஸ்கிரின் பொருத்தப்பட்டுள்ளது. இது இன்ஃபோடெயின்மெண்ட், மற்றும் டிரைவர் சீட்களில் இந்த டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக டிஜிட்டல் ஸ்பீடு டிஸ்பிளே காரின் ஸ்டிரிங் வீலில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உட்புறம் பிளஷ் ஃபேப்ரிக்-லேய்டு டேஷ்போர்டு மற்றும் கர்வ்டு சென்டர் கன்சோல் ஆகிய அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 2 எஸ்யூவி எலக்ட்ரிக் கான்செப்ட் கார்களை காட்சிப்படுத்தியது மஹிந்ரா! first appeared on .

]]>
ஷாவ்மி உருவாக்கும் எலக்ட்ரிக் கார்! எப்போ வருது தெரியுமா? https://www.91mobiles.com/tamil/xiaomi-ms11-electric-car-pics-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-ms11-electric-car-pics-leaked Mon, 06 Feb 2023 09:17:00 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5579 [hightlights] ஷாவ்மி நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சி அளிக்கிறது. [/hightlights]   சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செல்போன் உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி (Xiaomi),  ஸ்மார்ட் போன் மட்டுமின்றி  பல்வேறு  பொருட்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி […]

The post ஷாவ்மி உருவாக்கும் எலக்ட்ரிக் கார்! எப்போ வருது தெரியுமா? first appeared on .

]]>
[hightlights]

  • ஷாவ்மி நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சி அளிக்கிறது.
  • [/hightlights]

 

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செல்போன் உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி (Xiaomi),  ஸ்மார்ட் போன் மட்டுமின்றி  பல்வேறு  பொருட்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி டிவி, புரஜெக்டர், வேக்யூம் க்ளீனர், ப்ளூடூத் ஸ்பீக்கர், இன்டர்நெட் ரவுட்டர், பேக்-பேக்குகள், இயர்போன், இயர்பட்ஸ், எல்இடி மின் விளக்கு, சூட்கேஸ், செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட எக்கசக்க வீட்டு உபயோக பொருட்களை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

 

எலக்ட்ரிக் கார்

இவற்றுடன் சேர்த்து நிறுவனம் மின்வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இ-பைக்குகள் சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தைத் தொடர்ந்து அந்நிறுவனம் மின்சார கார் உற்பத்தி பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் வெகு விரைவில் உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது ஷாவ்மியின் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது.

 

எம்எஸ் 11

ஷாவ்மி எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஷாவ்மி நிறுவனம் எம்எஸ் 11 (Xiaomi MS11) எனும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வருகின்றது. இதன் படங்களே இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றது. உற்பத்திக்கு தயாராக இருக்கும் ஷாவ்மி எம்எஸ்11-இன் படங்களே இணையத்தில் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தோற்றம்

இந்த படங்களை வைத்து பார்க்கையில் ஷாவ்மி தனது முதல் எலெக்ட்ரிக் காரை பிஒய்டி நிறுவனத்தின் சீல் எலெக்ட்ரிக் கார் மாடலையும், போர்ஷேவின் டேகேன் கார் மாடலையும் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சியளிக்கிறது. அதேவேளையில் சில மாற்றங்களையும் இந்த ஷாவ்மியின் எம்எஸ் 11 எலெக்ட்ரிக் காரில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, அதிகப்படியான கட்டுமஸ்தான பாடி பேனல்களை நம்மால் இதில் காண முடியவில்லை. தொடர்ந்து அலங்கரிப்பு விஷயத்திலும் கணிசமான மாற்றங்களை நம்மால் காண முடிகின்றது. இதன் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.

 

வடிவமைப்பு

ஹெட்லைட்டுக்கு கீழ் பகுதியில் ஏர் ஸ்கூப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாகவே பிரேக்குகளுக்கான காற்று கடத்தப்படும். பிரேக்குகளில் ஏற்படும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சி வடிவ அணிகலன்கள் முன்பக்க பம்பரில் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்துமே ஷாவ்மி எம்எஸ்11 எலெக்ட்ரிக் காருக்கு தனித்துவமான தோற்றத்தையும், கவர்ச்சியான லுக்கையும் வழங்கும் வகையில் இருக்கின்றன. ஷாவ்மி எலெக்ட்ரிக் கார் இருந்தாலும் அட்டகாசமா இருக்கு இந்த கார்களில் ஃப்ளஷ் ரக ஹேண்டில்களே அனைத்து கதவுகளிலும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மேற்கூரை முழுவதும் ஒற்றை பேனல் ரக கிளாஸே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை அடுத்து டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் காணப்படுவதைப் போன்ற அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

 

சிறப்பம்சங்கள்

இதுதவிர, வால்வோ எக்ஸ்90 காரில் இடம் பெற்றிருப்பதைப் போல லிடார், ரேடார் போன்ற சென்சார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பாதுகாப்பான பயணத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்த காரின் வெளியீடு நாள் பற்றிய விபரம் தெரியவில்லை. அதேவேளையில், 2024 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்குள் இதன் அறிமுகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஷாவ்மி நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மின்வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. அடுத்த பத்து வருடங்களில் மின் வாகன சந்தையில் பெரும் புரட்சியை செய்யும் நோக்கில் இந்த பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. ஷாவ்மி மட்டுமின்றி லெனோவோ, ஆப்பிள், ஹூவாய், கூகுள் மற்றும் சோனி ஆகிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

The post ஷாவ்மி உருவாக்கும் எலக்ட்ரிக் கார்! எப்போ வருது தெரியுமா? first appeared on .

]]>
5 நாளில் 10,000 மகேந்திரா எக்ஸ்யூ 400 கார் புக் ஆனது! https://www.91mobiles.com/tamil/mahindra-xuv400-ev-receives-over-10000-bookings/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mahindra-xuv400-ev-receives-over-10000-bookings Wed, 01 Feb 2023 09:41:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5449 மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கடந்த குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தொடங்கப்பட்டது. இந்த கார் முதற்கட்டமாக இந்தியாவின் 34 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில், முன்பதிவு தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரை (Electric Car) விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை […]

The post 5 நாளில் 10,000 மகேந்திரா எக்ஸ்யூ 400 கார் புக் ஆனது! first appeared on .

]]>

Highlights

  • மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கடந்த குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தொடங்கப்பட்டது.
  • முன்பதிவு தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கடந்த குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தொடங்கப்பட்டது. இந்த கார் முதற்கட்டமாக இந்தியாவின் 34 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில், முன்பதிவு தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரை (Electric Car) விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

விலை

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 15.99 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இந்த காருக்கு இது மிகவும் சிறப்பான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. எனவேதான் வாடிக்கையாளர்கள் பலரும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். EL மற்றும் EC என 2 வேரியண்ட்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

டெலிவரி

இதில், EL வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் EC வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்பிக்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 34.5 kWh மற்றும் 39.4 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும்.

 

பேட்டரி & மைலேஜ்

இதில் 34.5 kWh பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 375 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் 39.4 kWh பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 456 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிலோ மீட்டர்கள் ஆகும்.

சார்ஜிங் நேரம்

Fun, Fast மற்றும் Fearless என மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 3 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் 7.2 kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் முழுமையாக நிரம்புவதற்கு 6.30 மணி நேரம் ஆகும். 3.3 kW சார்ஜர் இதை செய்வதற்கு 13 மணி நேரத்தை எடுத்து கொள்ளும்.

 

வசதிகள்

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், 7.0 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட் உடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என ஏராளமான வசதிகளை எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

போட்டி

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV), எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான், இந்தியாவில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. ஆனால் முன்பதிவுகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் குவிந்திருப்பதன் மூலம், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

 

The post 5 நாளில் 10,000 மகேந்திரா எக்ஸ்யூ 400 கார் புக் ஆனது! first appeared on .

]]>
வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? https://www.91mobiles.com/tamil/maruti-suzuki-wagonr-ev-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=maruti-suzuki-wagonr-ev-details Tue, 31 Jan 2023 08:16:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5393 6 வாகனங்கள் மாருதி சுஸுகி சமீபத்தில் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது. அதில், ஆறு கார்களின் நிழற்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, கார்களின் உருவத்தை வெளிக்காட்டாத அதன் ஸ்டைலை மட்டுமே பிரதிபலிக்கக் கூடிய படத்தை அது வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரை உருவாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இதற்கு போட்டி இல்லாத நிலையே […]

The post வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? first appeared on .

]]>

  • Highlights
  • மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டது.
  • அதன்படி ஒட்டுமொத்தமாக 6 எலெக்ட்ரிக் கார்களை 2030 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டம் போட்டு இருக்கின்றது. அதில் ஒன்று மாருதி சுஸுகியின் பிரபல காரான வேகன்ஆர் – ஆக இருக்கலாம் எனத் தெரிய வந்திருக்கிறது

6 வாகனங்கள்

மாருதி சுஸுகி சமீபத்தில் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது. அதில், ஆறு கார்களின் நிழற்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, கார்களின் உருவத்தை வெளிக்காட்டாத அதன் ஸ்டைலை மட்டுமே பிரதிபலிக்கக் கூடிய படத்தை அது வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரை உருவாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இதற்கு போட்டி இல்லாத நிலையே தென்படுகின்றது.

இதை போக்கும் விதமாக மாருதி சுஸுகி வேகன்ஆரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்கிற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேவேளையில், வேகன்ஆர் எலெக்ட்ரிக்கை இந்திய சாலையில் வைத்து பல மாதங்களாக அது சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

முதல் எலக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கார் வேகன்ஆர் எலெக்ட்ரிக்காக கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதை மாருதி சுஸுகி உறுதிப்படுத்தவில்லை. ஆகையால், இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி கார் பிரியர்களுக்கு மிகப் பெரிய குழப்பம் நிலவிக் கொண்டிருக்கின்றது.

கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, ஒரு பக்கம் அந்நிறுவனம் புதுமுக இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையே முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மின்சார காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதனை நிறுவனம் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக வடிவைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். மேலும், பார்க்கவும் மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனை இப்போது விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக களமிறக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

நெக்ஸான் இவி

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இது இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி பிளஸ் அவை ஆகும். இதில், நெக்ஸான் இவி பிரைம் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி பிளஸ் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இத்தகைய ரேஞ்ஜ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு போட்டியாகவே மாருதி சுஸுகி அதன் இவிஎக்ஸ் காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

 

எது முதலில்?

இதுமட்டுமின்றி, ஜிம்னி அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார், ஸ்விஃப்ட் இவி வெர்ஷன், பலேனோ இவி வெர்ஷன் மற்றும் ஃப்ரான்க்ஸ் இவி வெர்ஷன் ஆகியவற்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் எதை வேண்டுமானாலும் மாருதி சுஸுகி நிறுவனம் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரலாம். அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் அனைத்திற்குமே இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு.

 

The post வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? first appeared on .

]]>
அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! https://www.91mobiles.com/tamil/citroen-ec3-electric-car-unveiled-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=citroen-ec3-electric-car-unveiled-in-india Wed, 18 Jan 2023 07:41:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5107 முன்பதிவு சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றம் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் […]

The post அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! first appeared on .

]]>

Highlights

  • சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
  • சிட்ரோன் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் இந்த இசி3 எலெக்ட்ரிக் காரை ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

முன்பதிவு

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றம்

உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. முன் பக்க ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டிருப்பது மற்றும் டெயில்பைப் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம். அதேபோல் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.

 

பேட்டரி

அதே நேரத்தில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அராய் அமைப்பு சான்று வழங்கிய (Range) ஆகும். ஈக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 2 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 3.3 kW ஆன்போர்டு ஏசி சார்ஜர் உடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் வரவுள்ளது. அத்துடன் CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கும் இது சப்போர்ட் ஆகும்.

மைலேஜ்

இந்த எலெக்ட்ரிக் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால், வெறும் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். ஆனால் ஹோம் சார்ஜர் பயன்படுத்தினால், 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு பேட்டரி 10.5 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களில் 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது.

 

வசதிகள்

சிட்ரோன் சி3 காரை போலவே, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும், லைவ் மற்றும் ஃபீல் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். வசதிகளை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனெக்டட் கார் வசதியும் இருக்கா! அத்துடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடியும். மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். பாதுகாப்பை பொறுத்தவரையில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களாலும், மிகவும் குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

The post அறிமுகமானது சிட்ரோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்! first appeared on .

]]>
ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! https://www.91mobiles.com/tamil/byd-launches-atto-3-special-edition-limited-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-launches-atto-3-special-edition-limited-car Fri, 13 Jan 2023 13:16:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4998 நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது. தோற்றம் இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் […]

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>

Highlights

  • பிஒய்டி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசனை உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளது.
  • இந்த ஸ்பெஷல் எடிஷனில் வெறும் 1200 கார்களை மட்டுமே உருவாக்க இருக்கிறது.
  • இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.
  • இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது.

தோற்றம்

இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் மட்டும் கருப்பு நிறத்திலும், வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஒய்டி அட்டோ 3 கார் அந்நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & மைலேஜ்

அட்டோ 3 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மிகப்பெரிய மோட்டாரை கையாளும் திறன் கொண்டது. மேலும் இந்த காரில் வெஹிகில் – டூ-லோடு பங்ஷன் இருக்கிறது. இந்த பேட்டரி 3.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

அம்சங்கள்

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி அம்சங்களை உள்ளடக்கியது. இதுபோக இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்பக்க சீட்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் டெயில் கேட், ஆகியஅம்சங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் 7-ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

விலை

இந்த கார் ஒரு லிமிட்டட் எடிசன் கார் என்பதால் வெறும் 1200 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ34.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

The post ஸ்பெஷல் எடிஷனில் வருகிறது பிஒய்டி அட்டோ 3! first appeared on .

]]>
450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/mg4-electric-hatchback-car-unveiled-at-2023-indian-auto-expo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mg4-electric-hatchback-car-unveiled-at-2023-indian-auto-expo Fri, 13 Jan 2023 10:22:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4985 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி4 இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த எலக்ட்ரிக் கார் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், கொரோனாவினால் 1 வருட தாமதத்திற்கு பிறகு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு வெளிநாட்டு கார்களை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் இந்த கண்காட்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் கார் ஆனது […]

The post 450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

Highlights

  • எம்ஜி4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.
  • இதன் 64kWh பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம்.
  • எம்ஜி4 எலக்ட்ரிக் காரில் 450கிமீ வரையிலான மைலேஜை வழங்குகிறது

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி4 இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த எலக்ட்ரிக் கார் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், கொரோனாவினால் 1 வருட தாமதத்திற்கு பிறகு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு வெளிநாட்டு கார்களை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் இந்த கண்காட்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் கார் ஆனது எஸ்யூவி ரக கார் போன்று இருந்தாலும், எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹேட்ச்பேக் காராகும்.

தோற்றம்

இருப்பினும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் நம்மூர் சாலைக்கேற்ப கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ளதை ஆட்டோ எக்ஸ்போவில் தெளிவாக காண முடிந்தது. இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4287மிமீ, அகலம் 2060மிமீ, உயரம் 1504மிமீ மற்றும் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2705மிமீ ஆகும். எம்ஜி4 காரின் உட்பக்கத்தில் கவனிக்கக்கூடிய அம்சங்களாக 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையினை சொல்லலாம்.

வசதிகள்

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது மற்ற கார்களில் உள்ளதை போன்று ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் மிடில் இருக்கை வரிசைக்கும் ஏசி வெண்ட்ஸ், சுழலக்கூடிய கியர் செலக்டர் உள்பட மற்ற கண்ட்ரோல்களும் நம்மை வசீக்கரிக்கின்றன. அதேபோல் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் கார்களில் தொழிற்நுட்ப வசதிகளை வழங்குவதிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடிய நிறுவனம் கிடையாது.

சிறப்பு அம்சங்கள்

இதனாலேயே இந்த எம்ஜி4 எலக்ட்ரிக் காரிலும் ADAS தொழிற்நுட்பத்தை பார்க்க முடிகிறது. இந்த தொழிற்நுட்ப தொகுப்பின் மூலமாக ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளை அடையாளம் காணும் வசதி, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ் அம்சங்களை பெறலாம். இத்தகைய ADAS தொகுப்பு ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வரும் ஒன்றாக மாறி வருகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் கூட எம்ஜி4 உடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி இருந்த எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் ADAS-ஐ புதியதாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி4 எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், ADAS போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெறுவதினால் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 51kWh மற்றும் 64kWh என்ற இரு விதமான பேட்டரி தேர்வுகளில் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

பேட்டரி & மைலேஜ்

இதில் 51kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 350கிமீ வரையிலான மைலேஜையும், 64kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் 450கிமீ வரையிலான மைலேஜையும் பெற முடியும் என்கிறது எம்ஜி. இந்த இரு பேட்டரி தேர்விலும் கிடைக்க பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் ஆனது 250 என்எம் ஆகும். எம்ஜி4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 7.7 வினாடிகளில் எட்டிவிடலாம். 150 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் 51kWh பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம். அதுவே 64kWh பேட்டரியை சார்ஜ் ஏற்ற 35 நிமிடங்களே போதுமானதாக இருக்கும்.

விலை

தற்போதைய சூழலில் விற்பனைக்கு வந்தால் எம்ஜி4-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் எம்ஜி4 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் எம்ஜி4-க்கு இணையான தோற்றம் & விலை கொண்ட எம்ஜி இசட்.எஸ் இவி ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

The post 450 கிமீ மைலேஜ்கான சார்ஜ் 35 நிமிடங்களில்! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>
ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-6-ev-unveiled-at-the-2023-auto-expo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-6-ev-unveiled-at-the-2023-auto-expo Thu, 12 Jan 2023 12:24:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4945   ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6) காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் (Electric Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் செடான் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், […]

The post ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! first appeared on .

]]>

 

ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6) காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் (Electric Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் செடான் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், வழக்கமான ஓஆர்விஎம்கள் இருக்காது. அதற்கு பதிலாக ரியர் வியூ கேமராக்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், கூபே கார்களை போன்ற ரூஃப் லைன் இருக்கும். உட்புறத்தை பொறுத்தவரையில், 2 திரைகள், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகள் எல்லாம் ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே 2 திரைகள் என குறிப்பிடப்பட்டிருப்பது, இரண்டு 12 அங்குல திரைகள் ஆகும். இதில் ஒரு திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும், மற்றொரு திரை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் செயல்படும். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களிலும், இப்படி 2 திரைகளை வழங்குவது தற்போது ஒரு ‘ட்ரெண்ட்’ ஆக மாறி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 53 kWh பேட்டரி தொகுப்பு ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 429 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 77.4 kWh பேட்டரி தொகுப்பும், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 610 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை, 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவின் மூலம், இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலைகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. முக்கியமான போட்டியாளரான கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை காட்டிலும், மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Hyundai Creta EV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் இன்று இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி (Maruti Suzuki EVX Electric SUV) கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார், இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
 

The post ஐயோனிக் 6 காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது ஹூண்டாய்! first appeared on .

]]>