entertainment https://www.91mobiles.com/tamil Wed, 27 Jul 2022 11:37:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் https://www.91mobiles.com/tamil/india-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-launch Wed, 27 Jul 2022 05:00:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1091 எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் […]

The post விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் first appeared on .

]]>

எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

The post விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் first appeared on .

]]>
கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. https://www.91mobiles.com/tamil/udhayanithi-satalin-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=udhayanithi-satalin-movie-update Tue, 26 Jul 2022 11:56:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1078 தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். உதயநிதி […]

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் – கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>
இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார் https://www.91mobiles.com/tamil/tamil-cinema-actor-director-prathap-pothan-died-due-to-health-problem/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-cinema-actor-director-prathap-pothan-died-due-to-health-problem Fri, 15 Jul 2022 09:23:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=923 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனம், நடிகருமாக இருந்தவர் பிரதாப் போத்தன். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம், மூடுபனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட […]

The post இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார் first appeared on .

]]>

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனம், நடிகருமாக இருந்தவர் பிரதாப் போத்தன். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம், மூடுபனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்தஅறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார்.

ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். இந்நிலையில் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு கமலஹாசன் உட்பட திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார் first appeared on .

]]>