இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனம், நடிகருமாக இருந்தவர் பிரதாப் போத்தன். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம், மூடுபனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்தஅறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார்.

ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். இந்நிலையில் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு கமலஹாசன் உட்பட திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.