galaxy A04e https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 10:34:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/2-new-samsung-phones-to-launch-in-india-soon-check-out-galaxy-a04-galaxy-a04e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-new-samsung-phones-to-launch-in-india-soon-check-out-galaxy-a04-galaxy-a04e Thu, 15 Dec 2022 17:05:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4339 ரூ.10,000-க்குள் 2 புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்க தயாராகி வருகிறது சாம்சங் (Samsung). இதில் சுவாரசியம்  என்னவென்றால், இந்த 2 மாடல்களுமே சில சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கின்றன. கேலக்ஸி ஏ சீரீஸ் (Galaxy A Series) ஆனது சாம்சங் நிறுவனத்தின் “அதிகம் விற்பனையாகும்” சீரீஸ்களில் (Best Selling Series) ஒன்றாகும். இதற்கிடையில் தான் சாம்சங் தனது கேலக்ஸி ஏ-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு புதிய ஏ-சீரிஸ் […]

The post சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! first appeared on .

]]>

ரூ.10,000-க்குள் 2 புதிய ஸ்மார்ட்போன்களை களம் இறக்க தயாராகி வருகிறது சாம்சங் (Samsung). இதில் சுவாரசியம்  என்னவென்றால், இந்த 2 மாடல்களுமே சில சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கின்றன.

கேலக்ஸி ஏ சீரீஸ் (Galaxy A Series) ஆனது சாம்சங் நிறுவனத்தின் “அதிகம் விற்பனையாகும்” சீரீஸ்களில் (Best Selling Series) ஒன்றாகும். இதற்கிடையில் தான் சாம்சங் தனது கேலக்ஸி ஏ-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.

இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கேலக்ஸி ஏ04 (Galaxy A4) மற்றும் கேலக்ஸி ஏ04இ (Galaxy A04e) ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் கேலக்ஸி ஏ04 (Galaxy A04) ஸ்மார்ட்போனின் ஸ்லிம்டு டவுன் வெர்ஷனாக (Slimmed Down Version) இருக்கும். அதாவது ஒப்பீட்டளவில் சற்றே சமரசம் செய்யப்பட்ட அம்சங்களுடன் வரும் என்று அர்த்தம்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஸ்மார்ட்போனில் ரேம் பிளஸ் (RAM Plus) அம்சம் இடம்பெறலாம். அதாவது இந்த இரண்டு போன்களுமே 8GB வரையிலான RAM-ஐ வழங்கும். ரேம் பிளஸ் என்பது இன்டர்னல் மெமரியில் இருந்து கடன் வாங்கப்படும் ஸ்டோரேஜை ரேம் ஆக மாற்றும் ஒரு அம்சமாகும். சாம்சங்கின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போனை சீராக இயங்க வைக்கும். மேலும் Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே பெரிய அளவிலான பேட்டரிகளைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது இந்த இரண்டு ஏ-சீரிஸ் போன்களுமே 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் முன்னதாக வெளியான கேலக்ஸி ஏ03 (Galaxy A03) மாடலை பின்பற்றலாம். அதாவது இவைகள் 6.5 அங்குலம் என்கிற அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலையைப் பொறுத்தவரை Samsung நிறுவனத்தின் இந்த 2 ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும். அதாவது ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக Galaxy A04e-யின் விலை மிகவும் இன்னும் மலிவானதாக இருக்கலாம்; இது ப்ளூ, ப்ரான்ஸ் மற்றும் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இருப்பினும் இந்த 2 போன்களின் ப்ராசஸர் குறித்து எந்த தகவலும் இல்லை. முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே, இந்த ஆண்டில் அறிமுகமான முதல் ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போனான Galaxy A03 மாடலுக்கு கிடைத்த வெற்றியை பின்தொடர்ந்து வரும் மாடல்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ03 ஆனது 6.5-அங்குல HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.அது ட்ரூ 48MP டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது; இது லைவ் ஃபோகஸ் மூலம் கூர்மையான புகைப்படங்களை பதிவு செய்கிறது. Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் 1.6GHz ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அது 4GB அளவிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் கூட 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட One UI கோர் 3.1 மூலம் இயங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 3ஜிபி+32ஜிபி ஆப்ஷன் ரூ.10,499 க்கும், 4ஜிபி+64ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சாம்சங்ல இருந்து பட்ஜெட்விலையில் வெளிவரும் இரண்டு மொபைல்கள்! first appeared on .

]]>
வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! https://www.91mobiles.com/tamil/best-low-price-smartphone-expected-from-samsung-galaxy-m04-to-be-launched-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-low-price-smartphone-expected-from-samsung-galaxy-m04-to-be-launched-in-india-soon Wed, 16 Nov 2022 05:28:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3644 இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி எம்04 சாம்சங் நிறுவனம் தரமான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி […]

The post வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! first appeared on .

]]>

இந்தியாவில் கேலக்ஸி எம்04 என விரைவில் அறிமுகமாக இருக்கிறது. Samsung Galaxy M04 ஆனது Galaxy A04e போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த Galaxy A04e ஸ்மார்ட்போனானது இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேலக்ஸி எம்04

சாம்சங் நிறுவனம் தரமான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களும் மிகுதியாகவே இதில் இருக்கும் என முன்னதாகவே தெரிவித்திருந்தோம். அதன்படி தற்போது கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்மார்ட்போன் ஏ04இ முன்னதாகவே அறிமுகமான காரணத்தால் அதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் கேலக்ஸி எம்04 இன் அம்சங்களை ஓரளவு கணிக்க முடிகிறது. Galaxy M04 ஆனது மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது. சாம்சங் நிறுவனம் வரும் மாதங்களில் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

அம்சங்கள்

Samsung Galaxy M04 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி எம்04 ஆனது 6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. பட்ஜெட் விலைப்பிரிவில் 5000mAh பேட்டரி என்பது சிறப்பான விஷயமாகும்.

இயங்குதளம்

10 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டர் இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸில் இடம்பெறும் என கூறப்படுகிறது. சமீப காலங்களில் வெளியாகும் பெரும்பாலான மொபைல் போன்களில் மொபைலோடு சேர்த்து அடாப்டர் அடாப்டர் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI கோர் 4.1 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இதில் டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா இதுவாக இருக்கும் என்று வெளியான தகவலை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை என்னவென்று. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் செஃபி எடுக்கவும், வீடியோகால் அழைப்புகளை மேற்கொள்லவும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி சென்சார் இடம்பெறும் என தகவல்கள் கூறுகிறது.
சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy M04 குறித்த எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பக்கா மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் மலிவு விலைப் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெளிநாட்டுலதான் இதுபேரு A04e.. இந்தியாவுல இதுபேரு M04! first appeared on .

]]>