galaxy A23 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:40:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 4Gயின் வெற்றியைத் தொடர்ந்து 5G! விற்பனைக்கு வந்தது கேலக்ஸி A23 5G https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a23-5g-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a23-5g-launched-in-india Thu, 19 Jan 2023 10:56:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5203   இந்தியாவில் சாம்சங்கின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் கேலக்ஸி ஏ23 5ஜி மாடல் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி சி23 4ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே 5ஜி-க்கான ஆதரவில் மட்டும் கவனம் செலுத்தாமல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. சாம்சங் […]

The post 4Gயின் வெற்றியைத் தொடர்ந்து 5G! விற்பனைக்கு வந்தது கேலக்ஸி A23 5G first appeared on .

]]>

 

Highlights

  • சாம்சங் நிறுவனம் மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ், சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G)  என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இது 5ஜி-க்கான ஆதரவை வழங்குவதோடு, 50MP குவாட் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற சிறந்த அம்சங்களையும் வழங்குகிறது.

இந்தியாவில் சாம்சங்கின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் கேலக்ஸி ஏ23 5ஜி மாடல் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி சி23 4ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே 5ஜி-க்கான ஆதரவில் மட்டும் கவனம் செலுத்தாமல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி போனில் இருக்கும் அம்சங்கள் என்னென்ன? விலை என்ன? எப்போது முதல் விற்பனை? பார்க்கலாம்.

 

பெரிய டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனுடன் 6.6 அங்குல அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் பாலிகார்பனேட் பாடியுடன் வருகிறது.

ப்ராசஸர் & மெமரி

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உள்ளது. இது 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 4.1.1 உடன் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.

 

கேமரா & பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உடனான 50MP ப்ரைமரி சென்சார் + 5MP அல்ட்ராவைட் + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் சென்சார் உள்ளன. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் கேமரா செட்டப் 30fps வேகத்தின் கீழ் 1080P வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

 

விலை & விற்பனை

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு கிடைக்கும்; அதுபோல்  8GB + 128GB ஆப்ஷன் ரூ.24,999 க்கு கிடைக்கும். மேலும் இது சில்வர், ஆரஞ்சு மற்றும் கருப்பு என்கிற மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. விற்பனையை பொறுத்தவரை இது சாம்சங் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், சாம்சங்.காம் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்ஸ் (அமேசான்) வழியாக நேற்று முதல் (ஜனவரி 18) விற்பனையைத் துவங்கி விட்டது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலகளின் பட்டியலைக் காண, அவற்றில் மிகச்சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post 4Gயின் வெற்றியைத் தொடர்ந்து 5G! விற்பனைக்கு வந்தது கேலக்ஸி A23 5G first appeared on .

]]>
சாம்சங்ல இருந்து ஒரு குட்டி போன்.. சாம்சங் கேலக்ஸி ஏ23 5G! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a23-5g-launched-with-single-50mp-rear-camea-5-8-inch-display-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a23-5g-launched-with-single-50mp-rear-camea-5-8-inch-display-and-more Thu, 24 Nov 2022 12:08:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3881 சாம்சங் கேலக்ஸி ஏ23 5G ஆனது 5.8 அங்குல எச்டி+ டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை ரியர் கேமரா அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. ரூ.7000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் கூட 6 அங்குலத்தைவிட அதிக அளவிலான டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை கேமரா மட்டுமே இடம் பெற்று இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.   சாம்சங் கேலக்ஸி ஏ23 5G Samsung […]

The post சாம்சங்ல இருந்து ஒரு குட்டி போன்.. சாம்சங் கேலக்ஸி ஏ23 5G! first appeared on .

]]>

சாம்சங் கேலக்ஸி ஏ23 5G ஆனது 5.8 அங்குல எச்டி+ டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை ரியர் கேமரா அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. ரூ.7000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் கூட 6 அங்குலத்தைவிட அதிக அளவிலான டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை கேமரா மட்டுமே இடம் பெற்று இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

 

சாம்சங் கேலக்ஸி ஏ23 5G

Samsung Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தையில் கேலக்ஸி ஏ23 என வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருந்தது தற்போது வெளியாகியுள்ள ஸ்மார்ட்போனில் ஒற்றை 50 எம்பி கேமரா இருக்கிறது.

 

பேட்டரி

புதிய சாம்சங் Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி இன் புதிய மாறுபாட்டில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ரேம் விருப்பத்தில் அறிமுகமாகி உள்ளது.

 

விலை

Samsung Galaxy A23 5G 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் என ஒற்றை விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விலையானது ஜப்பானில் JPY 31,680 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.18,200 ஆகும்.

 

வெளியீடு தேதி

Samsung Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது au.com, J:Com, Rakuten Mobile மற்றும் ஜப்பானில் உள்ள பிற சில்லறை விற்பனையாளர்களின் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய Samsung Galaxy A23 5G இன் சர்வதேச வெளியீடு குறித்த தகவல் எதுவும் இல்லை.

 

சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A23 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. இதில் 5.8 அங்குல எச்டி+ (720×1,560 pixels) TFT டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. 16 மில்லியன் வண்ண ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு உலகளவில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 6.6 அங்குல இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் உடனான ஆக்டோ கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ23 5ஜி இன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் ஒற்றை 50 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக வெளியான ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது இதில் 50 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் டூயல் 2 எம்பி சென்சார்க்ள என நான்கு கேமராக்கள் இருந்தன.

 

IP68 மதிப்பீடு ஆதரவு

புதிய Galaxy A23 5G ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இதில் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் இருக்கிறது. டஸ்ட் மற்றும் நீர் எதிர்ப்புக்கு என IP68 மதிப்பீடு ஆதரவு இருக்கிறது.

 

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களுக்கு என 5G, 4G/LTE, Bluetooth v5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. சார்ஜிங் வேகம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது.

The post சாம்சங்ல இருந்து ஒரு குட்டி போன்.. சாம்சங் கேலக்ஸி ஏ23 5G! first appeared on .

]]>