Galaxy S23 Series https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 08:46:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் கேலக்ஸி S23 போனை ரூ.13,000 தள்ளுபடியில் வாங்குவது எப்படி? https://www.91mobiles.com/tamil/you-can-buy-samsung-galaxy-s23-256gb-variant-with-rs-13-000-flat-discount/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=you-can-buy-samsung-galaxy-s23-256gb-variant-with-rs-13-000-flat-discount Thu, 09 Feb 2023 11:57:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5698 Samsung Galaxy S23 சீரிஸ் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி S23 சீரிஸை உலகளவில் அறிமுகம் செய்தது. இந்த கேலக்ஸி S23 சீரிஸ் இல் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 23 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி வரும்போது, நீங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போன்களை  தள்ளுபடி விலையில் எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.   128GB வேரியண்ட் […]

The post சாம்சங் கேலக்ஸி S23 போனை ரூ.13,000 தள்ளுபடியில் வாங்குவது எப்படி? first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் வேரியண்ட் விலை ரூ.74,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனை அதிகபட்ச தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

Samsung Galaxy S23 சீரிஸ்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி S23 சீரிஸை உலகளவில் அறிமுகம் செய்தது. இந்த கேலக்ஸி S23 சீரிஸ் இல் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 23 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி வரும்போது, நீங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போன்களை  தள்ளுபடி விலையில் எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

 

128GB வேரியண்ட் விலையில் 256GB வேரியண்ட்

Samsung Galaxy S23 மாடலின் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.74,999 எனவும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.79,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ஆரம்பகால சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி அமேசானில் 128GB வேரியண்ட் விலையில் 256GB மாறுபாட்டைப் பெறலாம். அதாவது அமேசானில் 256 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.5000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

ரூ.13,000 வரை தள்ளுபடி

கூடுதலாக ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.8,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இதன்மூலம் கேலக்ஸி எஸ்23 மாடலின் 256ஜிபி வேரியண்ட்டை ரூ.66,999 என வாங்கலாம். ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் முதல்நாளிலேயே ரூ.13,000 வரை தள்ளுபடியை பெற சிறந்த வாய்ப்பு இதுவாகும். Galaxy S23 ஆனது Phantom Black, Cream, Green மற்றும் Lavender என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

சிப்செட்

Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஃப்ளாக்ஷிப் போன்கள் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு இருக்கிறது.

 

இயங்குதளம்

Samsung Galaxy S23 தொடரில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த தொடரில் உள்ள போன்களில் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான். இந்த ஸ்மார்ட்போனானது Android 13 அடிப்படையிலான UI 5.1 மூலம் இயங்குகிறது.

 

திரை

இந்த ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.1 அங்குல முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது வெளிப்புற பயன்பாட்டையும் மேம்படுத்தி வழங்கும் வகையில் விஷன் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 240Hz டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

50 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் சென்சார் Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரைமரி வைட்-ஆங்கிள் சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் ஃபீல்ட் ஆஃப் வியூ ஆதரவு கொண்ட 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

Samsung Knox பாதுகாப்பு 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, Wi-Fi Direct மற்றும் USB Type-C போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 மதிப்பீடு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் Samsung Knox பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் Knox Vaultக்கான ஆதரவை கொண்டிருக்கிறது.

 

பேட்டரி

சாம்சங் Galaxy S23 ஸ்மார்ட்போனின் எடை 168g கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 3,900mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை சார்ஜ் செய்வதற்கு என 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாம்சங் கேலக்ஸி S23 போனை ரூ.13,000 தள்ளுபடியில் வாங்குவது எப்படி? first appeared on .

]]>
200MP கேமரா மற்றும் பல அட்டகாச அம்சங்களோடு வெளியானது கேலக்ஸி S23 அல்ட்ரா! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-s23-ultra-released-with-200mp-camera/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-s23-ultra-released-with-200mp-camera Wed, 01 Feb 2023 18:29:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5458 இப்போது புதிதாக வெளியாகி இருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் எவை எல்லாம் சிறப்பாக உள்ளன எனபது குறித்துப் பார்க்கலாம். கேலக்ஸி S23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)   திரை இந்த மொபைலில் 6.8 அங்குல QHD+ Edge உடன் கூடிய Dynamic AMOLED 2X திரை வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. […]

The post 200MP கேமரா மற்றும் பல அட்டகாச அம்சங்களோடு வெளியானது கேலக்ஸி S23 அல்ட்ரா! first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைல் மற்றும் டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அறிமுகப்படுத்தும் ‘ சாம்சங் அன்பேக்டு’ (Samsung Unpacked) நிகழ்வு சற்று முன்பு (இரவு 11.30) துவங்கியது.
  • அதில் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி S23 சீரிஸின், ‘கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஆகிய மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போது புதிதாக வெளியாகி இருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் எவை எல்லாம் சிறப்பாக உள்ளன எனபது குறித்துப் பார்க்கலாம்.

கேலக்ஸி S23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)

 

திரை

இந்த மொபைலில் 6.8 அங்குல QHD+ Edge உடன் கூடிய Dynamic AMOLED 2X திரை வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திரையானது 78.1 x 163.4 x 8.9மிமீ அளவில் இருக்கிறது. இந்த மொபைலின் எடை 234 கிராம் ஆகும்.

 

 கேமரா

இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் பின்னால் 4, முன்னால் ஒன்று என 5 கேமராக்கள் உள்ளன. குறிப்பாக முதன்மை கேமராவாக f1.7 அபசருடன் கூடிய 200MP வைடு கேமரா இருக்கிறது. இது தவிர, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 10 மடங்கு வரை போகஸ் செய்யும் இன்னொரு 10MP டெலிபோட்டோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் வீடியோ அழைப்பு மற்றும் செஃபி எடுக்க 12MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்

இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் சமீபத்திய முதல்தர சிப்செட்டான ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதனால் ஆற்றலுக்கு பஞ்சமிருக்காது.

 

இயங்குதளம்

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஆண்ட்ராய்டு 13 மேல் கட்டமைக்கப்பட்ட சாம்சங்கின் One UI5.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கென Samsung Knox,   Samsung Knox Vault போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

 

மெமரி

கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் 4 விதமான மெமரி வேரியண்ட்களில் வெளியாகிறது.

8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

12 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

12 GB ரேம் + 512GB சேமிப்புத்திறன்

12 GB ரேம் + 1TB சேமிப்புத்திறன்

 

பேட்டரி

இதில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கபட்டுள்ளது. ஆனால், இதற்கான சார்ஜரை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 65% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலை வயர்லெஸ் சார்ஜிங் முறையிலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

 

கனெக்டிவிட்டி

இது ஒரு 5G  மொபைல் ஆகும். இதோடு LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct Bluetooth V5.3 போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் இருக்கிறது.  இதுதவிர IP68 ரேட்டிங்ஸோடு கூடிய வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், தூசு, அழுக்கு தடுப்பு வசதியும் இருக்கிறது.

 

The post 200MP கேமரா மற்றும் பல அட்டகாச அம்சங்களோடு வெளியானது கேலக்ஸி S23 அல்ட்ரா! first appeared on .

]]>
சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? https://www.91mobiles.com/tamil/specs-details-about-samsung-galaxy-s23-s23plus/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=specs-details-about-samsung-galaxy-s23-s23plus Wed, 01 Feb 2023 18:28:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5471 இன்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்டு (Samsung Unpacked) நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸில் மூன்று மொபைல்கள் வெளியாகின. இதில் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின. அல்ட்ராவில் இருந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், வயர்லெஸ் சார்ஜிங், டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இந்த இரண்டு மொபைல்களிலும் இருந்தன. இந்த மொபைல்களின் […]

The post சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் அன்பேக்டு நிகழ்வில்கேலக்ஸி S23 அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின.
  • அல்ட்ராவில் இருந்த பல சிறந்த அம்சங்கள் இந்த இரு மொபைல்களிலும் இருந்தன.

இன்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்டு (Samsung Unpacked) நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸில் மூன்று மொபைல்கள் வெளியாகின. இதில் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின. அல்ட்ராவில் இருந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், வயர்லெஸ் சார்ஜிங், டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இந்த இரண்டு மொபைல்களிலும் இருந்தன. இந்த மொபைல்களின் அம்சங்களை விரிவாக இப்போது பார்க்கலாம்.

திரை

கேலக்ஸி S23 மொபைலில் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் கூடிய 6.1 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 6.6 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இரண்டு மொபைல்களும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S23 மொபைலானது 70.9 x 146.3 x 7.6mm அளவில் 168 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது. அதே வேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலானது 76.2 x 157.8 x 7.6mm அளவில் 196 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது.

கேமரா

கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் என  இரு மொபைல்களிலும் பின்பக்கத்தில் மூன்று முன்பக்கத்தில் ஒன்று என மொத்தம் 4 கேமராக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதில் முதன்மை கேமராவாக f1.8 அப்பசர் உடைய 50MP வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. இதனையடுத்து 12MP அல்ட்ரா வைடு கேமரா ஒன்றும், 10MP டெலிபோட்டோ கேமரா ஒன்றும் பின்பக்கத்தில் இருக்கிறது. கூடவே ஒரு LED லைட் ஒன்றும் உள்ளது.

செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ளவும் முன்பக்கத்தில் 12MP கேமரா ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

 

சிப்செட்

கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே இந்த இரு மாடல்களூம் சமீபத்திய முதல்தர சிப்செட்டான ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதனால் மொபைல் திறம்பட செய்ல்படும்.

இயங்குதளம்

அதுபோல சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே ஆண்ட்ராய்டு 13 மேல் கட்டமைக்கப்பட்ட சாம்சங்கின் One UI5.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கென Samsung Knox,   Samsung Knox Vault போன்றவையும் இந்த இரு மொபைல்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

 

மெமரி

கேலக்ஸி S23 மொபைல் 3 விதமான மெமரி வேரியண்ட்களில் வெளியாகிறது.

8 GB ரேம் + 128 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்

ஆனால், கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைல் இரண்டு விதமான மெமரி வேரியண்ட்களில் மட்டுமே வெளியாகிறது.

8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்

8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்

பேட்டரி

கேலக்ஸி S23 மொபைலில் 3900mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சார்ஜரை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 50% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலை WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

அதுவே கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 4700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கபட்டுள்ளது. ஆனால், இதற்கும் சார்ஜரை தனியாக விலை கொடுத்தே வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 65% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலையும் WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

கனெக்டிவிட்டி

இந்த இரு மாடல்களும் 5G மொபைல்கள் ஆகும். இந்த மொபைல்களில் LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct Bluetooth V5.3 போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் இருக்கிறது.  இதுதவிர IP68 ரேட்டிங்ஸோடு கூடிய வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், தூசு, அழுக்கு தடுப்பு வசதியும் இருக்கிறது.

 

விலை

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மொபைல்களின் இந்திய விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

The post சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 ப்ளஸ்! என்ன இருக்கு? என்ன இல்ல? first appeared on .

]]>
200MP ‘வேறலெவல்’ கேமராவோடு பிப். 1 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் https://www.91mobiles.com/tamil/wait-until-february-1-samsung-galaxy-s23-series-might-launching-with-200mp-isocell-hp2-camera/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=wait-until-february-1-samsung-galaxy-s23-series-might-launching-with-200mp-isocell-hp2-camera Wed, 18 Jan 2023 05:36:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5091 2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்! https://www.indiangadgetawards.com/   Samsung நிறுவனம் அடுத்த ஜென் கேலக்ஸி எஸ்23 சீரிஸை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் ISOCELL HP2 சென்சார் கொண்டிருக்கும் எனவும் இதுவரை சாம்சங் போனில் இல்லாத அளவிற்கு மேம்பட்ட புகைப்பட அனுபவம் இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. புதிய சென்சார் பிப்ரவரி 1 ஆம் தேதி கேலக்ஸி எஸ்23 சீரிஸ் […]

The post 200MP ‘வேறலெவல்’ கேமராவோடு பிப். 1 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் first appeared on .

]]>
2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

Highlights
  • Samsung நிறுவனம் அடுத்த ஜென் கேலக்ஸி எஸ்23 சீரிஸை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது.
  • Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் ISOCELL HP2 சென்சார் கொண்டிருக்கும் எனவும் இதுவரை சாம்சங் போனில் இல்லாத அளவிற்கு மேம்பட்ட புகைப்பட அனுபவம் இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Highlights

புதிய சென்சார்

பிப்ரவரி 1 ஆம் தேதி கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாம்சங் அதிகாரப்பூர்வமாக 200 megapixel ISOCELL HP2 கேமரா சென்சாரை வெளியிட்டுள்ளது. எனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேமரா சென்சார் “நாளைய பிரீமியம் ஸ்மார்ட்போன்களில்” இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளது. இதே கேமரா சென்சார் சாம்சங் ஸ்மார்ட்போனின் அடுத்த ஜென் கேலக்ஸி இச்ட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8K வீடியோ

சாம்சங் நிறுவனம் முன்னதாகவே கடந்த ஆண்டு 200 மெகாபிக்சல் ISOCELL HP1 சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சார் தான் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவில் இடம்பெற்றது. சாம்சங் ISOCELL HP2 சென்சார், 200 மில்லியன் 0.6-மைக்ரோமீட்டர் பிக்சல்களை 1/1.3 அங்குல ஆப்டிகல் வடிவத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி பிரைமரி கேமராக்களில் பயன்படுத்தப்படும் சென்சார் அளவு ஆகும். 8கே வீடியோ தெளிவுத்திறன் ISOCELL HP2 இல் சென்சார் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் இதில் உயர் தெளிவுத்திறன் வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிற தொழில்நுட்பங்களை சாம்சங் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முழுமையான 8கே வீடியோ தெளிவுத்திறன் ஆதரவு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

வடிவமைப்பு

Samsung Galaxy S23 series பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது என்பது சாம்சங் இணையதளத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வடிவமைப்பு குறித்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. ஆனால் வெளியாகி உள்ள டீசரில் மூன்று கேமராக்கள் காட்டப்பட்டிருக்கிறது. சாம்சங் இதன் வடிவமைப்பை முழுமையாக மறைத்திருந்தாலும், இதன் ரெண்டர்கள் இணையதளத்தில் பல முறை கசிந்திருக்கிறது. ரெண்டர்களுக்கும் அதிகாரப்பூர்வ வடிவமைப்புக்கும் பெரிய மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது.

மாடல்கள் & நிறங்கள்

SnoopyTech என்ற பெயரில் வெளியாகி உள்ள டிப்ஸ்டர் தகவலின்படி, கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் சாம்சங் கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஆகிய மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது காட்டன் ஃப்ளவர், மிஸ்ட்லி லிலாக், பொட்டானிக் க்ரீன் மற்றும் பாண்டம் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ப்ராசஸர் & கேமரா

Samsung Galaxy S23 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட் சாம்சங் கேலக்ஸி எஸ்23 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் பகிரவில்லை என்றாலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 200 எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள இரண்டு மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது TSMC ஆல் 4nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

The post 200MP ‘வேறலெவல்’ கேமராவோடு பிப். 1 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் first appeared on .

]]>
தாமதமாகிறதா சாம்சங் எஸ்23 சீரிஸ்? https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-s23-series-launch-said-to-get-delayed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-s23-series-launch-said-to-get-delayed Wed, 21 Dec 2022 12:23:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4466 கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏராளமான விவரங்கள், ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன், அம்சங்கள், வெளியீட்டு தேதி என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு […]

The post தாமதமாகிறதா சாம்சங் எஸ்23 சீரிஸ்? first appeared on .

]]>

கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏராளமான விவரங்கள், ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன், அம்சங்கள், வெளியீட்டு தேதி என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று மாடல்கள்

முந்தைய தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி S23 சீரிசில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவலை டிப்ஸ்டர் அந்தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாமதம்

அதன்படி சாம்சங் கேலேக்ஸி S23 சீரிஸ் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படாத காரணத்தால், ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றி சாம்சங் தரப்பில் இதுவரை எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை.

டம்மி யூனிட்கள்

முன்னதாக புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டம்மி யூனிட்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதில் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்கள், சாம்சங் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேல்கஸி S22 மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்றே காட்சியளிக்கின்றன.

டிசைன்

லீக் ஆகி இருக்கும் டம்மிக்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் காட்சியளிக்கின்றன. மேலும் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா ஐலேண்ட் மாற்றப்பட்டு, ஒவ்வொரு லென்ஸ்-ம் தனித்தனியாக காட்சியளிக்கின்றன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் வளைந்த ஒரங்கள் இன்றி பாக்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.

முந்தைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ்புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரிவித்து இருந்தன. எனினும், புதிய டம்மிக்களில் புது ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டிலேயே சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

The post தாமதமாகிறதா சாம்சங் எஸ்23 சீரிஸ்? first appeared on .

]]>