galaxy Z fold 4 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:37:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! https://www.91mobiles.com/tamil/8-samsung-flagship-smartphones-including-galaxy-s22-series-get-huge-discounts/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=8-samsung-flagship-smartphones-including-galaxy-s22-series-get-huge-discounts Mon, 19 Dec 2022 05:29:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4370 சாம்சங் (Samsung) நிறுவனமானது, 2022 கிறிஸ்துமஸ் மற்றும் 2023 நியூ இயர் ஹாலிடே சீஸனுக்கான (Holiday Season) தனது புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஹாலிடே சீசன் சலுகையில் கீழ் மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. அந்த 8 ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி ஃபிளிப் போன்ற பிளாக்ஷிப் மாடல்களும், மிட் ரேன்ஜ் விலை சில மாடல்களும் உள்ளன. அதென்ன மாடல்கள்? என்னென்ன போன்கள் மீது என்னென்ன […]

The post சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! first appeared on .

]]>

சாம்சங் (Samsung) நிறுவனமானது, 2022 கிறிஸ்துமஸ் மற்றும் 2023 நியூ இயர் ஹாலிடே சீஸனுக்கான (Holiday Season) தனது புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த ஹாலிடே சீசன் சலுகையில் கீழ் மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. அந்த 8 ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி ஃபிளிப் போன்ற பிளாக்ஷிப் மாடல்களும், மிட் ரேன்ஜ் விலை சில மாடல்களும் உள்ளன. அதென்ன மாடல்கள்? என்னென்ன போன்கள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? பார்க்கலாம்.

Galaxy Z Flip4 & Galaxy Z Fold4

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy Z Flip4 மற்றும் Galaxy Z Fold4 மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரூ.1,54,999 க்கு கிடைத்த Galaxy Z Fold4 ஆனது இப்போதைய சலுகையில் ரூ.1,46,999 க்கு கிடைக்கும். அதாவது ரூ.8,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கும். கூடுதலாக, Galaxy Z Fold4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.34,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic BT 46mm-ஐ கூடுதலாக ரூ.2,999 கொடுத்து பெற்று கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பட்சத்தில் கூடுதலாக 10 சதவீத கேஷ்பேக்கையும் பெறலாம்.

அதேவேளையில் Galaxy Z Flip4 மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரூ.89,999 க்கு பதிலாக ரூ.82,999 க்கு கிடைக்கும். அதாவது ரூ.7,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.7000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கும். மேலும் Galaxy Z Flip4 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களும் கேலக்ஸி வாட்ச்4 கிளாசிக் பிடி 46 மிமீ-ஐ வெறும் ரூ.2,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்!

Galaxy S22 series

Galaxy Z Flip4 மற்றும் Galaxy Z Fold4 மீதான தள்ளுபடிகளை தவிரத்து Galaxy S22 series ஸ்மார்ட்போன்கள் மீதும் ஹாலிடே சீசன் சலுகைகள் கிடைக்கின்றன. ரூ.1,09,999 க்கு கிடைத்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் ஆனது ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.7,000 அப்கிரேட் போனஸுக்குப் பிறகு ரூ.1,02,999 க்கு கிடைக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ராவை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.26,999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச்4 பிடி 44எம்எம்-ஐ வெறும் ரூ.2,999-ஐ கொடுத்து வாங்கி கொள்ளலலாம்.

அதேபோல், ரூ.72,999 என்கிற விலையில் உள்ள கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை ரூ.54,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும் கேலக்ஸி எஸ்22-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ்2-ஐ வெறும் ரூ.2,999 க்கு பெறலாம். ஒருவேளை நீங்கள் கேலக்ஸி எஸ்22+ மாடலை வாங்க விரும்பினால் அது ரூ.84,999 க்கு பதிலாக வெறும் ரூ.59,999 க்கு வாங்க முடியும். இதில் ரூ.15,000 என்கிற பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.13,000 என்கிற அப்கிரேட் போனஸ் மற்றும் ரூ.10,000 என்கிற உடனடி கேஷ்பேக்கும் அடங்கும்.

Galaxy Z Fold3

சாம்சங் நிறுவனம் அதன் சற்றே பழைய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன Galaxy Z Fold3 மீதும் ஹாலிடே சீசன் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த கீழ் Galaxy Z Fold3 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 என்கிற பேங்க் கேஷ்பேக்கை பெறலாம் மற்றும் ரூ.26,999 மதிப்புள்ள Galaxy Watch4 BT 44mm ஐ வெறும் ரூ.2,999 க்கு வாங்கலாம். இதேபோல Galaxy ZFlip3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.84,999 க்கு பதிலாக ரூ.59,999 என்ற விலைக்கே கிடைக்கிறது. அதாவது இதன் மீது ரூ.15,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.10,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது.

Mid-range போன்கள்

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் Galaxy S21 FE ஸ்மார்ட்போன் மீது ரூ.3,000 என்கிற பேங்க் கேஷ்பேக், ரூ.7,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.10,000 என்கிற அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது. ஆக நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை உங்களால் வெறும் ரூ.39,999 க்கு வாங்க முடியும். இதேபோல Galaxy S20 FE ஆனது ரூ.32,999 க்கு கிடைக்கும், இதில் ரூ.5,000 என்கிற உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.3,000 என்கிற அப்கிரேட் போனஸும் அடங்கும்.

இப்படியாக சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்4, கேலக்ஸி ஃபிளிப்4, கேலக்ஸி ஃபோல்ட்3, கேலக்ஸி ஃபிளிப்3, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்21 எஃப்இ, கேலக்ஸி எஸ்20 எஃப்இ என மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் மீது ஹாலிட் சீசன் சலுகைகள் கிடைக்கின்றன.

எங்கு கிடைக்கும்?

இந்த சலுகைகள் Samsung.com, Amazon, Flipkart மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக கிடைக்கும். மேலும், இந்த ஹாலிடே சீசன் சலுகைகள் ஆனது வருகிற டிசம்பர் 25, 2022 வரை மட்டுமே கிடைக்கும்!

The post சாம்சங்கின் 8 போன்கள் மீது ஏகப்பட்ட சலுகைகள்! first appeared on .

]]>
2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/top-10-most-powerful-smartphone-models-ranking-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-10-most-powerful-smartphone-models-ranking-in-2022 Thu, 15 Dec 2022 08:07:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4313 டாப் 10 2022 ஆம் ஆண்டின் டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன்களைப் (Top 10 Most Powerful Smartphone Models 2022) பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் சுவாரசியம் என்னவென்றால், இதில் மிகவும் சக்தி வாய்ந்த போன்களாக பட்டியலில் முன்னிலையில் உள்ளவை அதிகம் விற்பனையாகாத மாடல்கள் தான். காரணம், இவை விலை அதிகம் என்பது ஒரு பக்கம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்களை (smartphones brand) மக்கள் அதிகம் கவனிக்கவில்லை என்று சொல்லலாம். இவை […]

The post 2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! first appeared on .

]]>
டாப் 10

2022 ஆம் ஆண்டின் டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன்களைப் (Top 10 Most Powerful Smartphone Models 2022) பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் சுவாரசியம் என்னவென்றால், இதில் மிகவும் சக்தி வாய்ந்த போன்களாக பட்டியலில் முன்னிலையில் உள்ளவை அதிகம் விற்பனையாகாத மாடல்கள் தான். காரணம், இவை விலை அதிகம் என்பது ஒரு பக்கம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்களை (smartphones brand) மக்கள் அதிகம் கவனிக்கவில்லை என்று சொல்லலாம். இவை தான் இந்த 2022 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த பவர்புல் மான்ஸ்டர்கள்.

10. Xiaomi 12 Pro 5G

இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி மற்றும் சிறந்த டிஸ்பிளேவை வழங்கியுள்ளதினால் டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இது தவிர இதன் பிராசஸர் மற்றும் கேமரா அம்சமும் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09. iQOO 9T 5G

இந்த iQOO 9T 5G சாதனம் அதிக மதிப்பெண்களை இதன் சிறந்த பிராசஸருக்காக (Best processor smartphone) வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இதன் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி அம்சங்களும் சிறந்த மதிப்பெண்களை வாங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9வது இடத்தில் இடம்பிடித்துள்ளது.

08. Motorola Edge 30 Ultra

இந்த Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி ஆயுள் (Best battery smartphone) அம்சத்தில் மார்க்கை குவித்துள்ளது. இது தவிர சிறந்த டிஸ்பிளே மற்றும் சிறந்த கேமரா அம்சத்தை வழங்கிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக இந்த மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது 8வது இடத்தை பிடித்துள்ளது.

07. Samsung Galaxy Z Fold 4

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமான Samsung Galaxy Z Fold 4 டிவைஸ் நமது பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இது மிகப்பெரிய டிஸ்பிளே மற்றும் பிராசஸர் தரத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று இந்த பெஸ்ட் போல்டபில் ஸ்மார்ட்போன் (Best Foldable Smartphone) சாதனமாக இடம்பிடித்துள்ளது.

06. Black Shark 5 Pro

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்கையில் இந்த Black Shark 5 Pro அதிகப்படியான AnTuTU மதிப்பெண்களுடன் 6வது இடத்தில் கெத்தாக நிற்கிறது. சிறந்த சிப்செட் மற்றும் தரமான தயாரிப்பிற்காக இந்த ஸ்மார்ட்போன் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளது. இது பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் (Best gaming smartphone) மாடலாகவும் இடப்பிடித்துள்ளது.

05. Oppo Find X5 Pro

சிறந்த கேமரா (Best camera smartphone).. சிறந்த டிஸ்பிளே (Best display smartphone).. சிறந்த டிசைன் என்று பல ரவுண்ட்களில் (Best All Rounder Smartphone) அதிக மதிப்பெண்களை பெற்று Oppo Find X5 Pro ஸ்மார்ட்போன் 5வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதன் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் பலர் இந்த போனை வாங்க தவறிவிட்டார்கள்

04. OnePlus 10 Pro

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் தரமான கேமரா அம்சங்களுடன் அதிகப்படியான ரசிகர் மதிப்பெண்களை பெற்றுள்ளது. இந்த டிவைஸ் 4வது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பிந்திய வாடிக்கையாளர் சேவையும் சிறப்பாக அமைந்துள்ளது.

03. Asus ROG 6

இந்த ஸ்மார்ட்போனை 3வது இடத்தில் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்க கூடும். ஆனால், இந்த 2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் பட்டியலில் (Best Performance Smartphone) அதிகப்படியான AnTuTu மதிப்பினை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சிப்செட், சிறந்த பெர்பார்மென்ஸ், சிறந்த கேமரா மாற்று பேட்டரி என்று ஆல்ரவுண்டராக இது டிவைஸ் முன்னிலையில் உள்ளது. புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.!

02. Google Pixel 7 Pro

வழக்கம் போல் Apple மற்றும் Google இடையிலான போட்டியில் சிறந்த யூசர் அனுபவத்தை (Best User Experience Smartphone) வழங்கி, டிசைனில் மட்டும் சொதப்பிய காரணத்தினால் Google Pixel 7 Pro இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஆப்பிள் போன் உடன் ஒப்பிடுகையில் இதன் டிசைன் மிகவும் பெரிதாகவும், அதிக கணம் கொண்டதாகவும் அமைந்துவிட்டது.

01. Apple iPhone 14 Pro Max

சிறந்த டிசைன் (Best design smartphone), சிறந்த பாதுகாப்பு, சிறந்த டிஸ்பிளே சிறந்த கேமரா மற்றும் சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் என்று எல்லா ரவுண்டிலும் வெற்றி பெற்று Apple iPhone 14 Pro Max முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. வழக்கம் போல ஆப்பிள் டிசைன் சிம்பிள் ஆக அமைக்கப்பட்டு மக்களின் ஈர்ப்பை பெற்று அதிக மதிப்பெண்களை லுக் பிரிவிலும் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களை தவறவிட்ட போன்கள்!

இந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் போக, இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களும் மிக நெருக்கமான போட்டியில் 10 இடங்களை தவறவிட்டுள்ளன. இருப்பினும், இந்த மாடல்களுடன் நேரடி போட்டியில் களமிறங்கிய Asus ZenFone 9, Mi 12T Pro, Red Magic 7, Vivo X80, Samsung S22 Ultra, Xiaomi 12S Ultra, Sony Xperia 1 IV, Motorola G82, Samsung Galaxy Z Flip 4 ஆகிய மாடல்களும் சிறந்த பவர்புல் அம்சங்களுடன் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! first appeared on .

]]>
விண்டோஸ் OS போல் தோற்றமளிக்கும் Galaxy Z Fold 4! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-z-fold-4-display-options-look-like-windows-10-os/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-z-fold-4-display-options-look-like-windows-10-os Mon, 29 Aug 2022 05:42:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1859 சமீபத்தில் அறிமுகமாகி சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4. இந்த ஸ்மார்ட்போன் உயர் விலைப் பிரிவில் அறிமுகமானாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் Galaxy Z Flip 4 உடன் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது நல்ல எண்ணிக்கையிலான முன்கூட்டிய ஆர்டர்களைப் பெற்று வருகிறது. Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12 மூலம் […]

The post விண்டோஸ் OS போல் தோற்றமளிக்கும் Galaxy Z Fold 4! first appeared on .

]]>

சமீபத்தில் அறிமுகமாகி சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4. இந்த ஸ்மார்ட்போன் உயர் விலைப் பிரிவில் அறிமுகமானாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் Galaxy Z Flip 4 உடன் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது நல்ல எண்ணிக்கையிலான முன்கூட்டிய ஆர்டர்களைப் பெற்று வருகிறது.

Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. Mark Spurrel என்ற யூடியூபர் மூலம் வெளியான தகவலில், Galaxy Z Fold 4 ஆனது Windows 10 OS போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு லாஞ்சர்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நேரடியான விண்டோஸ் இயக்க ஆதரவு அல்ல, ஆனால் Windows 10 OSல் இயங்கும் ஸ்மார்ட்போன் போல் தோற்றமளிக்கிறது.

டெஸ்க்டாப் OS போன்ற மெனு

Galaxy Z Fold 4 இன் கவர் டிஸ்ப்ளே காட்சியானது Windows 10 OS இல் இயங்கும் ஸ்மார்ட்போனை போல் தோற்றமளிக்கிறது. டெஸ்க்டாப் OS போன்ற UI தொடக்க மெனு ஆப்ஷன் இதில் இருக்கிறது. மெனு மட்டுமின்றி முழுமையாக வேலை செய்யும் காலண்டர் மற்றும் விரைவான செட்டிங்ஸ் மெனுவைக் கொண்டிருக்கிறது.

ட்ரூ விண்டோஸ் ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஆனால் ட்ரூ விண்டோஸ் ஓஎஸ் போன்று காட்சியளிக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் என்பது பிரதான பயன்பாடு என்றாலும் UI என்பது ஒவ்வொரு நிறுவனமும் அதை தனிப்பயனாக்கி உருவாக்கக்கூடியது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஓஎஸ் தோற்றத்தை பெற இரண்டு வெவ்வேறு லாஞ்சர்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த அமைப்பு நிலையானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனிப்பயனாக்குவதன் மூலம் எந்த அளவு நுணுக்கமாக செயல்படுகின்றன என்பது சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருக்கிறது. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனில் விண்டோஸ் 10 போன்ற UI வழங்கும் வின்-எக்ஸ் லாஞ்சரை பயன்படுத்தினால் இந்த டிஸ்ப்ளே விண்டோஸ் ஓஎஸ் போன்ற ஸ்கொயர் ஹோம் காட்சியை வழங்குகிறது. Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள் Galaxy Z Fold 4 சிறப்பம்சங்கள் சாம்சங்கின் முந்தைய ஃபோல்ட் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் புதிய Galaxy Z Fold 4 மாடலை சாம்சங் அறிமுகம் செய்தது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்பின்படி ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

கேமரா

சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் இருக்கின்றன. கவர் டிஸ்ப்ளேவில் ஒன்று, அண்டர் ஸ்க்ரீனில் ஒன்று மற்றும் மீதமுள்ள மூன்று கேமராக்கள் ரியர் பேனலில் இருக்கிறது. 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கிறது. அதேபோல் மெயின் டிஸ்ப்ளேவின் கீழ் 4 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்பி சென்சார் இருக்கிறது. அனைத்து கேமராக்களும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

டிஸ்ப்ளே

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் 7.6 அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் மெயின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இதில் 6.2-அங்குல HD+ (904×2,316 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே இருக்கிறது. சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரி

4,400mAh டூயல் பேட்டரி பேக் வசதியைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கான 25W சாம்சங் சார்ஜர் ஆனது பாக்ஸ் உடன் அனுப்பப்படாது, தனியாகவே விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விண்டோஸ் OS போல் தோற்றமளிக்கும் Galaxy Z Fold 4! first appeared on .

]]>
Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-z-fold-4-flip-4-india-price-pre-booking-free-offer-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-z-fold-4-flip-4-india-price-pre-booking-free-offer-details Wed, 17 Aug 2022 08:22:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1656 சமீபத்தில் நடந்து முடிந்த Galaxy Unpacked 2022 நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4) அறிமுகமாகின. 16 ஆகஸ்ட் முதல் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், Samsung நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. Galaxy Z Flip 4 விலை Bora Purple, […]

The post Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் first appeared on .

]]>

சமீபத்தில் நடந்து முடிந்த Galaxy Unpacked 2022 நிகழ்வில், சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4) அறிமுகமாகின. 16 ஆகஸ்ட் முதல் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், Samsung நிறுவனம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

Galaxy Z Flip 4 விலை

Bora Purple, Graphite மற்றும் Pink Gold என்கிற 3 நிறத் தேர்வுகளில் வரும் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் 8GB+128GB வேரியண்ட் ஆனது ரூ.89,999 க்கும், 8GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.94,999க்கும் கிடைக்கும். கிளாஸ் கலர்ஸ் மற்றும் ஃபிரேம் ஆப்ஷன்களை வழங்கும் பெஸ்போக் எடிஷன் (Bespoke Edition) ஆனது சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.97,999க்கு கிடைக்கும்.

Galaxy Z Fold 4 விலை

Gray Green, Beige மற்றும் Phantom Black என்கிற 3 நிறத் தேர்வுகளில் வரும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் 12GB+256GB வேரியண்ட் ஆனது ரூ.1,54,999 க்கும் மற்றும் 12GB+512GB வேரியண்ட் ஆனது ரூ.1,64,999 க்கும் கிடைக்கும். 12ஜிபி+1டிபி வேரியண்ட்டை வாங்க விரும்புவோர்கள், சாம்சங் லைவ் மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ரூ.1,84,999க்கு வாங்கலாம்.

Pre-booking

கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு, 16, 2022 முதல், முன்னணி ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக தொடங்கி இருக்கிறது.

சாம்சங் Galaxy Z Fold 4 சலுகைகள்

கேலக்ஸி Z Fold 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.34,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 46mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.8,000 கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸைப் பெறலாம்.

சாம்சங் Galaxy Z Flip 4 சலுகைகள்

கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.31,999 மதிப்புள்ள Galaxy Watch4 Classic 42mm BT மாடல் ஆனது வெறும் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.7,000 கேஷ்பேக்கையும் பெறலாம் அல்லது ரூ.7,000 என்கிற அப்கிரேட் போனஸை பெறலாம். மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருடத்திற்க்கான, ரூ.11,999 மதிப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் ஆனது வெறும் ரூ.6,000 க்கு அணுக கிடைக்கும். மேலும் 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI சலுகையும் கிடைக்கும்.

ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் வாங்கினால்?

கூடுதலாக, ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ,5,199 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டுயோ இலவசமாக வழங்கப்படும். உடன் ஆகஸ்ட் 17 நள்ளிரவுக்கு முன் Samsung Live-இன் போது Galaxy Z Flip 4 பெஸ்போக் எடிஷனை வாங்கினால், வயர்லெஸ் சார்ஜர் டூயோ உடன் ரூ.2,000 மதிப்புள்ள ஸ்லிம் கிளியர் கவர் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

Samsung.com அல்லது Samsung Exclusive ஸ்டோர்களில் முன்பதிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட Samsung Live ஆஃபர்களைப் பெறலாம்.

The post Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 விலை & சலுகைகள் first appeared on .

]]>
அறிமுகமானது Samsung Galaxy Z Fold 4 https://www.91mobiles.com/tamil/introducing-samsung-galaxy-z-fold-4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=introducing-samsung-galaxy-z-fold-4 Thu, 11 Aug 2022 09:52:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1551 Samsung நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக Galaxy Z Fold 4 ஆனது இன்று (ஆகஸ்ட்.10) இந்தியா உட்பட உலகளவில் அறிமுகமானது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, Galaxy Z Fold 4 ஆனது சிறந்த கேமரா அனுபவத்தை வழங்கும்; சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்; மேலும் பழைய ஃபோல்டபிள் மாடல்களை விட இலகுவானதாக, மெலிதானதாக இருக்கும். அண்டர்-டிஸ்ப்ளே கேமரா, 7.6-அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் […]

The post அறிமுகமானது Samsung Galaxy Z Fold 4 first appeared on .

]]>

Samsung நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக Galaxy Z Fold 4 ஆனது இன்று (ஆகஸ்ட்.10) இந்தியா உட்பட உலகளவில் அறிமுகமானது.
சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, Galaxy Z Fold 4 ஆனது சிறந்த கேமரா அனுபவத்தை வழங்கும்; சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்; மேலும் பழைய ஃபோல்டபிள் மாடல்களை விட இலகுவானதாக, மெலிதானதாக இருக்கும்.

அண்டர்-டிஸ்ப்ளே கேமரா, 7.6-அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

இரட்டை சிம் (நானோ) ஆதரவுடன் வரும் Samsung Galaxy Z Fold 4 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையின் மேல் சாம்சங்கின் சொந்த One UI 4.1.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 7.6 அங்குல டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவானது (infinity flex display) முதன்மை டிஸ்பிளேவாக செயலாற்றுகிறது. கவர் டிஸ்பிளேக்கு வரும்போது, இதில் 6.2-அங்குல HD+ (904×2,316 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் Galaxy Z Fold 4 ஆனது குவால்காம் Snapdragon 8+ Gen 1 SoC கொண்டு இயக்கப்படுகிறது, அது 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 5 கேமராக்களை கொண்டுள்ளது. ஒன்று கவர் டிஸ்பிளேவில் உள்ளது, மற்றொன்று மெயின் டிஸ்பிளேவில் ‘அண்டர் ஸ்க்ரீன் கேமரா’வாக உள்ளது. மீதமுள்ள மூன்று கேமராக்கள் ரியர் பேனலில் ட்ரிபிள் கேமரா செட்டப்பாக உள்ளன. இதன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில், டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் (dual pixel autofocus), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 85 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ ஆகியவற்றை வழங்கும் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (123 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.

மெயின் டிஸ்பிளேவின் கீழ் உள்ள செல்ஃபி கேமராவில் 4 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது எஃப்/1.8 அபெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கவர் டிஸ்ப்ளேவில் உள்ள செல்ஃபி கேமராவில் 10-மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது எஃப்/2.2 அபெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1TB வரையிலான சேமிப்புத்திறனுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4,400mAh டூயல் பேட்டரியை பேக் செய்கிறது. ஆனால் இதற்கான 25W சாம்சங் சார்ஜர் ஆனது பாக்ஸ் உடன் அனுப்பப்படாது; தனியாகவே விற்கப்படும்.

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மற்ற சந்தைகளில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ.1,42,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Beige, Gray green மற்றும் Phantom Black என்கிற 3 நிறத் தேர்வுகளில் வெளியாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி என்கிற 3 வகைகளில் கிடைக்கும்.

The post அறிமுகமானது Samsung Galaxy Z Fold 4 first appeared on .

]]>