hero https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:26:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 1 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று ஹீரோ சாதனை! https://www.91mobiles.com/tamil/hero-electric-achieves-highest-ever-annual-sales-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hero-electric-achieves-highest-ever-annual-sales-in-2022 Thu, 05 Jan 2023 09:17:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4731 ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு, 1,00,123 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து சாதனை படைத்து இருக்கிறது. இதுதான் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகப்பெரிய வருடாந்திர விற்பனை எண்ணிக்கை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இமாலய சாதனையை படைத்துள்ளது. 7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் 7 […]

The post 1 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று ஹீரோ சாதனை! first appeared on .

]]>

ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு, 1,00,123 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து சாதனை படைத்து இருக்கிறது. இதுதான் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகப்பெரிய வருடாந்திர விற்பனை எண்ணிக்கை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இமாலய சாதனையை படைத்துள்ளது.

7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் 7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அவை போட்டான் எல்பி (Photon LP), ஆப்டிமா சிஎக்ஸ் (Optima CX), என்ஒய்எக்ஸ் ஹெச்எஸ்500 இஆர் (NYX HS500ER), என்ஒய்எக்ஸ் இ5 (NYX E5), அட்ரியா எல்எக்ஸ் (Atria LX) மற்றும் எடி (Eddy) ஆகும். இதில், ஆப்டிமா சிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, சிங்கிள் மற்றும் ட்யூயல் பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

6 லட்சம் வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் தற்போதைய நிலையில் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில், தொழிற்சாலை ஒன்றை அமைத்தது. இங்கு 1 ஆண்டுக்கு 1 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். இதை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் பிதாம்பூர் பகுதியில் அமைந்துள்ள மஹிந்திரா குழுமத்தின் தொழிற்சாலையிலும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டன.

புதிய தொழிற்சாலை

ஆனால் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கும் பணிகளை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டது. ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகியவை இதில் கையெழுத்திட்டுள்ளன.

20 லட்சம் டூவீலர்கள்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலையின் வருடாந்திர உற்பத்தி திறன் 2 மில்லியன் ஆகும். அதாவது இங்கு ஒரு வருடத்திற்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். நடப்பு 2023ம் ஆண்டின் இறுதியில் இந்த தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வர்த்தக ரீதியிலான உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்ட பின், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஐக்யூப்

இந்நிலையில் 2022 டிசம்பரில் 11,071 யூனிட்டுகள் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. 2021 டிசம்பரைக் காட்டிலும் இது மிக அதிகம் ஆகும். வெறும் 1,212 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகி இருந்தன. 2022 ஆம் ஆண்டில் டிவிஎஸ் ஸ்கூட்டருக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதை 2022 டிசம்பர் விற்பனை புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த உயர்வு இந்தியாவில் டிவிஎஸ்-இன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மைலேஜ்

ஆரம்ப மற்றும் நடுநிலை வேரியண்டுகளில் (ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப்) 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 100 கிமீ ஆகும். அதேவேளையில், 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் ஓர் ஃபுல் சார்ஜில் 145 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இத்தகைய அதிக ரேஞ்ஜ் தரும் வேரியண்டிற்கான புக்கிங்கையே இன்னும் டிவிஎஸ் நாட்டில் தொடங்காமல் இருக்கின்றது.

புக்கிங்

இதற்கான புக்கிங்குகள் நாட்டில் தொடங்கும்பட்சத்தில் டிவிஎஸ் ஐக்யூப்-இன் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழகத்தின் முக்கிய நகர்பகுதிகளில் மட்டுமே நம்மால் வாங்க முடியும். சென்னை, கோயம்பத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும்

விலை

சென்னையில் ரூ. 1 லட்சத்து 14,936 என்கிற ஆன்-ரோடு விலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டான ஐக்யூப்-இன் விலை ஆகும். இதன் ஐக்யூப் எஸ் வேரியண்டிற்கு ரூ. 1 லட்சத்து 21,057 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கூறியதைப் போல் ஐக்யூப் எஸ்டி வேரியண்டின் விலை இப்போது வரை அறிவிக்கப்படவில்லை.

The post 1 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று ஹீரோ சாதனை! first appeared on .

]]>
குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! https://www.91mobiles.com/tamil/low-budget-e-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=low-budget-e-scooter Tue, 06 Dec 2022 06:26:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4099 எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே விலை அதிகமாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால், பெட்ரோல் வாகனங்களை விட விலை குறைந்த தரமான எலக்ட்ரிக் வாகனங்கள் நிறையவே வந்துவிட்டன. அப்படி தற்போது கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். அவோன் இ-ஸ்கூட்டர்: ரூ45,000 இந்தியாவில் மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் அவோன் இ ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஒன்று. இதற்கு ரூ. […]

The post குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே விலை அதிகமாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால், பெட்ரோல் வாகனங்களை விட விலை குறைந்த தரமான எலக்ட்ரிக் வாகனங்கள் நிறையவே வந்துவிட்டன. அப்படி தற்போது கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

அவோன் இ-ஸ்கூட்டர்: ரூ45,000

இந்தியாவில் மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் அவோன் இ ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஒன்று. இதற்கு ரூ. 45 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 215 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 24 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இது சற்று குறைவான வேக திறன் என்பதால் இதற்கு பதிவு சான்று மற்றும் லைசென்ஸ் கட்டாயம் இல்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 65 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதற்காக அவோன் நிறுவனம் 48 V / 20 Ah ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. மிகக் குறைவான தூர இடைவெளியைக் கொண்ட பயணங்களுக்கு உதவும் விதமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவோன் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. அருகில் உள்ள கடைக்கு சென்று வருவது, குழந்தைகளை பள்ளிக்கூடம் மற்றும் டியூசன் அழைத்துச் செல்லுதல் போன்ற பயன்பாட்டை மையமாகக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infnity E1): ரூ. 45,099

அதிக பிரீமியம் தர அம்சங்களுடன் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்டில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை பவுன்ஸ் நிறுவனம் பேட்டரி உடனும், பேட்டரி இல்லாமலும் என்று இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்து வருகிறது. இதில் பேட்டரி இல்லாத தேர்வே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 45,099 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பேட்டரியை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ளலாம். 48 V/ 39 Ah பேட்டரியை சேவையின்கீழ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும். இது முழு சார்ஜ்க்கு 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஃபிளாஷ் (Hero Electric Flash): ரூ. 46,640

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மலிவு விலை கொண்ட தயாரிப்பாக ஃபிளாஷ் இருக்கினறது. இதன் இப்போதைய விலை ரூ. 46,640 ஆகும். இதன் உயர்நிலை தேர்வே ரூ. 59,640க்குதான் விற்கப்படுகின்றது. இந்த விலை விபரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ ஃபிளாஷின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ மட்டுமே. இதுவும் முழு சார்ஜ்க்கு 85 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

ஏவன் டிரென்ட் இ (Avan trend E): ரூ. 56,900

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஏவன் டிரென்ட் இ-யும் ஒன்று. ஏவன் டிரெண்ட், ஒற்றை பேட்டரி பேக் அல்லது இரட்டை பேட்டரி பேக் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்டதன் விலையே ரூ. 56,900 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். அதுவே, இரட்டை பேட்டரி பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டிரெண்ட் இ தேர்வை வாங்கினால் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த இரு தேர்வுகளிலும் 800 வாட் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஈவி ஆஹாவா (eeve ahava): ரூ. 62,499

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று அதிக விலைக் கொண்ட தேர்வு ஆகும். இதன் விலை ரூ. 62,499 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிக விலைக்கேற்ப அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு, ஜியோ டேக்கிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், இதை வைத்திருக்க பதிவு சான்று தேவைப்படாது. அதேபோல் இதனை இயக்க லைசென்ஸ் கட்டாயம் தேவையில்லை. ஓர் முழு சார்ஜில் 60 கிமீ முதல் 70 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய 60 V/ 27 Ah பேட்டரி பேக்கே ஈவி ஆஹாவாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு வசதிகளாக பாட்டில் கேஸ், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்றவற்றைக் கூறலாம்.

The post குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>