hyundai https://www.91mobiles.com/tamil Wed, 03 Aug 2022 09:47:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் வெளியாகிறது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் https://www.91mobiles.com/tamil/hyundai-electric-suv-for-india-to-take-on-new-mahindra-xuv400/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-electric-suv-for-india-to-take-on-new-mahindra-xuv400 Wed, 03 Aug 2022 09:47:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1328 ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையிலும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதே காரின் பேஸ்லிப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5 சீட்டர் மாடலான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து […]

The post இந்தியாவில் வெளியாகிறது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் first appeared on .

]]>

ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையிலும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதே காரின் பேஸ்லிப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5 சீட்டர் மாடலான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. அதன்படி ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கிறது. இந்த வாரம் புதிய டக்சன் மாடலை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கியா EV6 போன்று இல்லாமல், ஐயோனிக் 5 மாடல் செமி நாக்டு-டவுன் முறையில் இங்கு கொண்டுவரப்படுகிறது. கியா EV6 போன்றே ஐயோனிக் 5 மாடலும் E-GMP பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த கார் 2022 ஆண்டுக்கான சிறந்த கார் என்ற விருதை வென்று இருந்தது.

2028 வாக்கில் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன சந்தையை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் XUV400 மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய XUV400 எலெக்ட்ரிக் காரை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புது எலெக்ட்ரிக் கார் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார் மாடல்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. புது நிறுவனத்தை உருவாக்க மஹிந்திரா மற்றும் ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது. இதை அடுத்து இரு நிறுவனங்களும் ரூ. 1,925 கோடியை புது நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளன. புதிய XUV400 எலெக்ட்ரிக் அறிமுகமாகும் முன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் தனது XUV400 எலெக்ட்ரிக் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இதனையடுத்து சமீபத்தில் மஹிந்திரா வெளியிட்ட தகவல்களின் படி புதிய XUV400 எலெக்ட்ரிக் மாடல் 4 மீட்டர்களை விட பெரியதாக இருக்கும் எனத் தெரியவருகிறது. தற்போதைய ஸ்பை படங்களில் மஹிந்திரா XUV400 மாடல் தற்போதைய எஸ்யுவி மாடல்களை விட வேறுபட்டதாகக் காட்சியளிக்கிறது. இந்த காரின் மெல்லிய LED ஹெட்லைட்களின் உள்புறமாக டிஆர்எல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காரின் முன்புற கிரில் பகுதி மூடப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய செண்ட்ரல் ஏர் இண்டேக் உள்ளது. இது 2020 கான்செப்ட் மாடலில் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் சங்யங் டிவோலி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

The post இந்தியாவில் வெளியாகிறது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் first appeared on .

]]>
எலெக்ட்ரிக் i10 உருவாக்கும் ஹூண்டாய் – இந்திய வெளியீடு எப்போ தெரியுமா? https://www.91mobiles.com/tamil/hyundai-working-on-electric-i10-that-might-come-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-working-on-electric-i10-that-might-come-india Mon, 25 Jul 2022 11:30:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1058 ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறது. தனது கியா மற்றும் ஜெனிசிஸ் பிராண்டுகளின் கீழ் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையை குறி வைத்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID Life கானெச்ப்ட் கார்களை ஐரோப்பாவில் அறிமுகம் […]

The post எலெக்ட்ரிக் i10 உருவாக்கும் ஹூண்டாய் – இந்திய வெளியீடு எப்போ தெரியுமா? first appeared on .

]]>

ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறது. தனது கியா மற்றும் ஜெனிசிஸ் பிராண்டுகளின் கீழ் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையை குறி வைத்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID Life கானெச்ப்ட் கார்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்வதாகவும், இவற்றின் விலை 25 ஆயிரம் டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது ஹூண்டாய் தலைவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i10 எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றே உணர முடிகிறது.

i10 கார் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும். இது ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், பல்வேறு புது மாடல்களை கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

The post எலெக்ட்ரிக் i10 உருவாக்கும் ஹூண்டாய் – இந்திய வெளியீடு எப்போ தெரியுமா? first appeared on .

]]>
ஹூண்டாயின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் https://www.91mobiles.com/tamil/newautomobile-hyundai-rn22e-concept-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=newautomobile-hyundai-rn22e-concept-revealed Tue, 19 Jul 2022 07:53:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=955 தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் RN22e கான்செப்ட் எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் ஹூண்டாய் நிறுவனத்தின் N பிரிவு எதிர்கால எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இத்துடன் N விஷன் 74 கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. “RN22e மற்றும் N விஷன் 74 கான்செப்ட் மாடல்கள் ஒட்டுமொத்த வாகன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக எங்களின் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்கள் […]

The post ஹூண்டாயின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் first appeared on .

]]>

தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் RN22e கான்செப்ட் எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் ஹூண்டாய் நிறுவனத்தின் N பிரிவு எதிர்கால எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இத்துடன் N விஷன் 74 கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

“RN22e மற்றும் N விஷன் 74 கான்செப்ட் மாடல்கள் ஒட்டுமொத்த வாகன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக எங்களின் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்கள் பிரிவில் இவை இரண்டு மாடல்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். ரோலிங் லேப்ஸ் எங்களின் அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த பிரத்யேக நோக்கம் தான் எங்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்ள செய்கிறது,” என ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தாமஸ் ஸ்கிமெரா தெரிவித்திருக்கிறார்.

ஹூண்டாய் RN22e மாடலில் டூயல் மோட்டார் செட்டப் இருக்கிறது. இது 577 HP திறன், 740 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் 100 கி.மீ. வேகத்தை எத்தனை விநாடிகளில் அடையும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால், இது மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் செல்லும் எனத் தெரிகிறது. புதிய ஹூண்டாய் RN22e கான்செப்ட் மாடலில் நான்கு பிஸ்டன் கேலிப்பர்கள் கொண்ட 400 மில்லிமீட்டர் ஹைப்ரிட் டிஸ்க் பிரேக்குகள், 3D ப்ரி்ண்ட் செய்யப்பட்ட பாகங்கள் உள்ளன. இவை காரின் எடையை குறைக்க வெகுவாக உதவி இருக்கிறது. இவை தவிர செயல்த்திறனை ஊக்குவிக்க இந்த மாடலில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் RN22e மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே போதும். இந்த கார் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது அதிகபட்சம் 800 வோல்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

The post ஹூண்டாயின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் first appeared on .

]]>