iphone 14 pro https://www.91mobiles.com/tamil Tue, 17 Jan 2023 06:48:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. https://www.91mobiles.com/tamil/style-and-look-are-all-like-iphone-14-pro-leeco-s1-pro-launched-at-rs-10-900/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=style-and-look-are-all-like-iphone-14-pro-leeco-s1-pro-launched-at-rs-10-900 Tue, 17 Jan 2023 07:09:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5064 ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அதன் விலை உயர்வாக இருப்பதால் பலருக்கும் இது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் போன்ற தோற்றம், வடிவமைப்பு, லுக் கொண்ட புது போனை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போனுக்கும் ஐபோனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம். ஆப்பிள் ஐபோன் 14 போன்றே தோற்றமளிக்கும் LeEco S1 Pro போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். […]

The post ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. first appeared on .

]]>

Highlights

  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட LeEco S1 Pro போன் விலை தோராயமாக ரூ.10,900 என்ற விலையில் வெளியாகி இருக்கிறது.
  •  இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, தோற்றம் என அனைத்தும் ஐபோன் 14 ப்ரோ போன்றே இருக்கிறது.

ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அதன் விலை உயர்வாக இருப்பதால் பலருக்கும் இது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் போன்ற தோற்றம், வடிவமைப்பு, லுக் கொண்ட புது போனை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போனுக்கும் ஐபோனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம்.

ஆப்பிள் ஐபோன் 14 போன்றே தோற்றமளிக்கும் LeEco S1 Pro போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் CNY 899 (தோராயமாக ரூ.10,900) என முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,29,900 என்ற விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த இரண்டுக்கும் ரூ.1.19 லட்சம் வித்தியாசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதுவும் இதுவும்

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 மாடலில் 6.1 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது HD+ (720x1600px) தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. ஐபோனில் 4கே தெளிவுத்திறன் உடன் கூடிய 4கே டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12nm Zhanrui T7510 சிப்செட் மூலம் இயங்குகிறது.

 

கேமரா

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. இந்த மூன்று கேமராக்களும் ஐபோன் 14 ப்ரோவில் இருப்பது போன்றே பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் முன்புறத்தில் 5 எம்பி ஸ்னாப்பர் இடம்பெற்றுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது.

கூகுளுக்கு பதில் ஹூவாய்

LeEco S1 Pro ஸ்மார்ட்போனானது குறிப்பாக சீனாவுக்காக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், கூகுள் மொபைல் சேவைகளுக்கு பதிலாக Huawei இன் மொபைல் சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கும் அம்சங்கள் அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்றாலும் இதன் வடிவமைப்பு மற்றும் லுக் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

 

விலை

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ விலை Apple iPhone 14 Pro விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.1,29,900 முதல் தொடங்குகிறது. அதாவது 128 ஜிபி வேரியண்ட் ரூ.1,29,900 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.1,39,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,59,900 எனவும் 1 டிபி வேரியண்ட் ரூ.1,79,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் இந்த மாடல் கிடைக்கிறது. ஆனால் இந்த மொபைல் இந்திய மதிப்பில் ரூ 10,600க்கு கிடைக்கிறது.

The post ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. first appeared on .

]]>
ஐபோனின் புதிய தொழிற்நுட்பத்தில் சிக்கல் https://www.91mobiles.com/tamil/apples-new-crash-detection-feature-iphone-14-automatically-called-911-while-riding-roller-coasters/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apples-new-crash-detection-feature-iphone-14-automatically-called-911-while-riding-roller-coasters Thu, 20 Oct 2022 09:40:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3150 ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 14 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கிராஷ் டிடெக்க்ஷன் (crash detection) எனும் தரமான தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இந்த ஐபோன் 14 ப்ரோ அறிமுகமானது. இந்த புதிய ஐபோனில் சில புதிய வசதிகள் வழங்கப்பட்டன. அவை பயனரின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவையே இந்த புதிய ஐபோனில் சிறப்புகளாக இருந்தது என்றும் சொல்லலாம். அவசர உதவி […]

The post ஐபோனின் புதிய தொழிற்நுட்பத்தில் சிக்கல் first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 14 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கிராஷ் டிடெக்க்ஷன் (crash detection) எனும் தரமான தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இந்த ஐபோன் 14 ப்ரோ அறிமுகமானது. இந்த புதிய ஐபோனில் சில புதிய வசதிகள் வழங்கப்பட்டன. அவை பயனரின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவையே இந்த புதிய ஐபோனில் சிறப்புகளாக இருந்தது என்றும் சொல்லலாம்.

அவசர உதவி

குறிப்பாக ஐபோன் 14 ப்ரோ வைத்திருக்கும் பயனர்கள், காரில் சென்றுகொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டால், 911 என்ற அவசர உதவிக்கு தானாகவே வைஃபை மூலம், இவர் விபத்தில் சிக்கி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கும். பயனாளர் பேச முடியாத நிலையில் இருக்கும்போது, அவரால் பதிலளிக்க முடியவில்லை என்றால் தானியங்கி முறையில் தானே தகவலை அனுப்பிவிடும். இதனால் மீட்புப் படையினரால் விபத்து நடந்த இடத்தை தாமாகவே துல்லியமாக அறிந்து விரைந்து சென்று அவரை காப்பாற்ற முடியும்.

நடந்தது என்ன?

இதுபோன்ற தொழில்நுட்ப வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். ஆனால், அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் குறைபாடு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி என்ற இடத்தில் பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டரில் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை அடுத்து அந்த பெண்ணின் ஐபோன் அவர் ஆபத்தில் இருப்பதாகக் கருதி 911 என்ற அவசர உதவி எண்ணிற்க்கு தகவல் அளித்தது.

ஐபோன் சென்சார்

அதாவது ரோலர் கோஸ்டரின் உயரம், வேகம், அதிர்வு போன்றை கார் விபத்தோடு ஒத்திருப்பதால் ஐபோன் தனது சென்சார் மூலம் இவர் ஆபத்தில் உள்ளதாக நினைத்து அவசர உதவிக்கு தகவல் கொடுக்க, அங்கு அவசர உதவி மீட்பு பணியினர் விரைந்தனர். அதன்பின்னர் மீட்பு பணியினர் வந்து விசாரித்ததில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. குறிப்பாக இது ஐபோன் கொடுத்த தகவல் என்று தெரிந்துகொண்டனர்.

ஆப்பிள் கூறியது என்ன?

இதுகுறித்து ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது என்னவென்றால், இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் மனிதர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த தரமான தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால் இதில் சிறிய குறைகள் உள்ளன. விரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

ஏரோபிளேன் மோட்

ரோலர் கோஸ்டரில் இருக்கும்போது இதுபோன்ற சிக்கல் நேராமல் இருக்க ஏரோபிளேன் மோட் வசதியை பயன்படுத்தலாம் அல்லது போனை எடுத்துச் செல்வதை தவிர்த்து இருக்கலாம் என்று சிலர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

The post ஐபோனின் புதிய தொழிற்நுட்பத்தில் சிக்கல் first appeared on .

]]>
ஐபோன் 14 ப்ரோ கேமரா ஆடுதாம்.. அதிருதாம்! https://www.91mobiles.com/tamil/users-complain-of-iphone-14-pro-camera-shaking/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=users-complain-of-iphone-14-pro-camera-shaking Mon, 19 Sep 2022 09:34:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2426 ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சில பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் வெளிவரத் துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஐபோன் 14 ப்ரோ விற்பனை சமீபத்தில் துவங்கியது. புதிய ஐபோன் மாடலை வாங்கி இருப்பின் அதில் கேமரா பிரச்சினை இருப்பதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் […]

The post ஐபோன் 14 ப்ரோ கேமரா ஆடுதாம்.. அதிருதாம்! first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சில பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் வெளிவரத் துவங்கி இருக்கிறது.

இந்திய சந்தையில் ஐபோன் 14 ப்ரோ விற்பனை சமீபத்தில் துவங்கியது. புதிய ஐபோன் மாடலை வாங்கி இருப்பின் அதில் கேமரா பிரச்சினை இருப்பதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் தங்களது போன்களில் கேமரா ஷேக் ஆவதாகவும், விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா பிரச்சினை இருப்பதாக பலர் தங்களின் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இயக்க முயன்றவர்களுக்கு பெரும்பாலும இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் கேமரா இயக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது. ஸ்னாப்சாட் செயலியை பயன்படுத்திய போது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா வைப்ரேட் ஆகும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் ஐபோன் லென்ஸ் பகுதியில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஐபோனில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் கேமரா இயக்கிய போது இது போன்ற பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

தற்போதைய பிரச்சினை கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து இயக்கிய போது தான் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு செயலிகளின் மென்பொருள் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட செயலிகள் தரப்பில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு என பிரத்யேகமாக அப்டேட் வெளியிடுவது அவசியம் ஆகும். எனினும், ஐபோனில் அதிர்வுகள் மற்றும் கிரைண்டிங் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மாக்ஸ் மொபைலின் கேமராவைப் பொருத்தவரை, இதில் 48MP முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் iphone 13ஐ விட 65% பெரிய போட்டோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் 13ஐ விட இரு மடங்கு தரமான ‘Low light photo’களை எடுக்க முடியும். இது தவிர 12MP Tele photo camera ஒன்றும், 12 MP Ultra wide camera ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சமாக, இந்த போனில் ‘Apple Pro RAW’ வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழுவதுமாக 48MP போட்டோகளை ஆதரிக்கிறது. இதன்மூலம் புகைப்படம் எடுத்த பின் அதனை தரக்குறைவு இன்றி மேம்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல இதில் ‘Flash’ம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் எடுக்கப்படும் வீடியோக்கள் தரமானதாக இருக்க வேண்டி இதில், ‘Pro Res’ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே ‘Dolby Vision’ அம்சமும் இருக்கிறது. எடுக்கப்படும் வீடியோக்கள் நடுக்கமின்றி இருக்க ‘Action mode’ வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ‘Gimble’ உபயோகித்து எடுப்பது போன்ற ஆட்டமில்லாத வீடியோக்களை எடுக்க முடியும். சினிமா எடுக்க வசதியாய் இதில் ‘Cinematic mode’ என்ற ஒரு வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 4K வீடியோக்களை 24framesல் எடுக்க முடியும்.

The post ஐபோன் 14 ப்ரோ கேமரா ஆடுதாம்.. அதிருதாம்! first appeared on .

]]>