ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சில பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் வெளிவரத் துவங்கி இருக்கிறது.
இந்திய சந்தையில் ஐபோன் 14 ப்ரோ விற்பனை சமீபத்தில் துவங்கியது. புதிய ஐபோன் மாடலை வாங்கி இருப்பின் அதில் கேமரா பிரச்சினை இருப்பதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் தங்களது போன்களில் கேமரா ஷேக் ஆவதாகவும், விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா பிரச்சினை இருப்பதாக பலர் தங்களின் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இயக்க முயன்றவர்களுக்கு பெரும்பாலும இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் கேமரா இயக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது. ஸ்னாப்சாட் செயலியை பயன்படுத்திய போது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா வைப்ரேட் ஆகும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் ஐபோன் லென்ஸ் பகுதியில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஐபோனில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் கேமரா இயக்கிய போது இது போன்ற பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.
தற்போதைய பிரச்சினை கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து இயக்கிய போது தான் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு செயலிகளின் மென்பொருள் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட செயலிகள் தரப்பில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு என பிரத்யேகமாக அப்டேட் வெளியிடுவது அவசியம் ஆகும். எனினும், ஐபோனில் அதிர்வுகள் மற்றும் கிரைண்டிங் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மாக்ஸ் மொபைலின் கேமராவைப் பொருத்தவரை, இதில் 48MP முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் iphone 13ஐ விட 65% பெரிய போட்டோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் 13ஐ விட இரு மடங்கு தரமான ‘Low light photo’களை எடுக்க முடியும். இது தவிர 12MP Tele photo camera ஒன்றும், 12 MP Ultra wide camera ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சமாக, இந்த போனில் ‘Apple Pro RAW’ வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழுவதுமாக 48MP போட்டோகளை ஆதரிக்கிறது. இதன்மூலம் புகைப்படம் எடுத்த பின் அதனை தரக்குறைவு இன்றி மேம்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல இதில் ‘Flash’ம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதில் எடுக்கப்படும் வீடியோக்கள் தரமானதாக இருக்க வேண்டி இதில், ‘Pro Res’ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே ‘Dolby Vision’ அம்சமும் இருக்கிறது. எடுக்கப்படும் வீடியோக்கள் நடுக்கமின்றி இருக்க ‘Action mode’ வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ‘Gimble’ உபயோகித்து எடுப்பது போன்ற ஆட்டமில்லாத வீடியோக்களை எடுக்க முடியும். சினிமா எடுக்க வசதியாய் இதில் ‘Cinematic mode’ என்ற ஒரு வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 4K வீடியோக்களை 24framesல் எடுக்க முடியும்.







