iQoo Z6 Lite https://www.91mobiles.com/tamil Mon, 05 Sep 2022 14:22:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo T1x மொபைல் இப்போ iQOO Z6 lite ஆச்சு https://www.91mobiles.com/tamil/iqoo-z6-lite-5g-budget-smartphone-launching-in-india-on-september-14/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-z6-lite-5g-budget-smartphone-launching-in-india-on-september-14 Mon, 05 Sep 2022 14:22:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2057 விவோவின் துணை பிராண்ட் ஆன iQoo இப்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய iQOO Z6 Lite 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்று iQoo அறிவித்துள்ளது. இது அமேசான் வழியாக அறிமுகம் செய்யப்படுவதனால், அமேசான் […]

The post Vivo T1x மொபைல் இப்போ iQOO Z6 lite ஆச்சு first appeared on .

]]>

விவோவின் துணை பிராண்ட் ஆன iQoo இப்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய iQOO Z6 Lite 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்று iQoo அறிவித்துள்ளது. இது அமேசான் வழியாக அறிமுகம் செய்யப்படுவதனால், அமேசான் தளத்தில் ஒரு மைக்ரோ சைட் இந்த போனின் வெளியீட்டு தேதி உட்பட, இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள், வடிவமைப்பு போன்ற விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? அமேசான் பட்டியலின் படி, இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன், போனின் பின்புறத்தில், டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை அமேசான் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், iQOO Z6 Lite 5G குறைந்த விலையில் 120Hz ஆதரிக்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

இதன் சரியான சிப்செட் விபரம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் முழு HD+ கொண்ட 6.58 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவரும்.

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்

இது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP சென்சார் கொண்ட டூயல் கேமராக்களுடன் வரும். முன்பக்கத்தில், இது 8MP கேமராவை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்கும்.

விலை

இந்த போன் ரூ.15,000க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T1x இன் மறுபெயரிடப்பட்ட போன் ஆகும். iQoo Z6 Lite ஆனது Vivo T1x ஐ விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T1x இந்தியாவில் அடிப்படை 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post Vivo T1x மொபைல் இப்போ iQOO Z6 lite ஆச்சு first appeared on .

]]>
போன் அதுதான்.. ஆனா பேரு வேற! https://www.91mobiles.com/tamil/new-upcoming-budget-phone-iqoo-z6-lite-launch-date-specifications-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-upcoming-budget-phone-iqoo-z6-lite-launch-date-specifications-price Wed, 17 Aug 2022 05:13:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1652 ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். ஆனால் இது விவோ ஸ்மார்ட்போனின் ‘ரீபிராண்டட் வெர்ஷன்’ ஆகும். அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள iQOO Z6 Lite ஆனது கடந்த மாதம் அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட” மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இங்கே சுவாரசியம் என்னவென்றால், iQOO Z6 Lite ஆனது விவோ டி1எக்ஸ் […]

The post போன் அதுதான்.. ஆனா பேரு வேற! first appeared on .

]]>

ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். ஆனால் இது விவோ ஸ்மார்ட்போனின் ‘ரீபிராண்டட் வெர்ஷன்’ ஆகும். அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள iQOO Z6 Lite ஆனது கடந்த மாதம் அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட” மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இங்கே சுவாரசியம் என்னவென்றால், iQOO Z6 Lite ஆனது விவோ டி1எக்ஸ் போனை விட குறைவான விலைக்கு அறிமுகமாகும் என்பது தான்!

இந்தியாவில் iQOO Z6 Lite ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம். அறிமுக தேதியில் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் கூட, அம்சங்கள் மற்றும் விலை பற்றி எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால், விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் தான் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதே!

அம்சங்கள்

ஐக்யூ Z6 லைட் ஆனது ஆனது Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் உடனாக 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். அதாவது இது ஒரு 4G போனாக இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, iQOO Z6 Lite ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.58-அங்குல அளவிலான FullHD LCD பேனலை கொண்டிருக்கலாம்.

கேமராக்கள் & பேட்டரி

கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்குமா அல்லது டூயல் கேமராக்கள் இருக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, வீடியோ அழைப்புக்கும், புகைப்படம் எடுக்கவும் இதில் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம். மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிங் வசதியோடு கூடிய 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Z6 Lite ஆனது முன்னதாக அறிமுகமான Z6 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷன் ஆகவும் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

விலை

iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவான விலைக்கு விற்பனைக்கு வரலாம். அதாவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலையானது சுமார் ரூ.11,499 ஆக இருக்கும். அறிமுக சலுகை மற்றும் வங்கிச் சலுகை போன்ற சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், இது ரூ.10,000க்கு கூட கிடைக்கலாம். Vivo T1x ஸ்மார்ட்போன் ஆனது 2 வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் ரூ.11,999 க்கும் மற்றும் ரூ.14,999 க்கும் விற்பனையாகிறது. மேலும் iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனை போலவே Gravity Black மற்றும் Space Blue என 2 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post போன் அதுதான்.. ஆனா பேரு வேற! first appeared on .

]]>