iTel P40 https://www.91mobiles.com/tamil Fri, 29 Dec 2023 16:05:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வரும் iTel மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/itel-mobiles-under-10000-rupees-comes-with-128gb-internal-storage/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-mobiles-under-10000-rupees-comes-with-128gb-internal-storage Sun, 31 Dec 2023 04:30:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=12712 இதுவரை மொபைல் மார்கெட்டில் Samsung, Xioami, Vivo போன்ற பெருநிறுவனங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு  புதிய மொபைல்களையும், புதிய தொழிற்நுட்பங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆனால், சமீப காலமாக சிறு நிறுவனங்களும் இந்த போட்டியில் குதித்துள்ளன். குறிப்பாக, Tecno, itel போன்ற நிறுவனங்கள், பெரிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தும் தொழிற்நுட்பங்களை உடனடியாக தனது புது மொபைல்களில் வழங்குவது, ஃபோல்டபிள் போன் போன்ற பெரிய தொழிற்நுட்பங்களில் கூட மொபைல்களை வெளியிடுவது என சிறு நிறுவனங்களும் மல்லுக்கு நிற்கின்றன. அப்படி […]

The post 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வரும் iTel மொபைல்கள் first appeared on .

]]>

இதுவரை மொபைல் மார்கெட்டில் Samsung, Xioami, Vivo போன்ற பெருநிறுவனங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு  புதிய மொபைல்களையும், புதிய தொழிற்நுட்பங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆனால், சமீப காலமாக சிறு நிறுவனங்களும் இந்த போட்டியில் குதித்துள்ளன். குறிப்பாக, Tecno, itel போன்ற நிறுவனங்கள், பெரிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தும் தொழிற்நுட்பங்களை உடனடியாக தனது புது மொபைல்களில் வழங்குவது, ஃபோல்டபிள் போன் போன்ற பெரிய தொழிற்நுட்பங்களில் கூட மொபைல்களை வெளியிடுவது என சிறு நிறுவனங்களும் மல்லுக்கு நிற்கின்றன. அப்படி சமீபத்தில் குறைந்த விலையில், அதிக அம்சங்களுடன் மொபைல்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்து வருவது தான்.. itel.

இந்த itel நிறுவனத்தில் ரூ.10,000க்கும் குறைவான விலையில், பல மொபைல் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கும் மொபைல்களின் பட்டியலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இந்த மொபைல்களில் 128GB ஸ்டோரேஜ் உடன் சில மொபைலில் 50MP கேமரா உள்ளது. சில மொபைல்களில் 6000 அல்லது 7000mAH பேட்டரி உள்ளது. சில போனில் 8GB ரேம் கூட உள்ளது. இந்த விலைப்பிரிவில் இப்படிப்பட்ட வசதிகள் வருவது சிறப்பானதாகும். அப்படி ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் எந்த போனில் எந்தெந்த வசதிகள் வருகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

Itel S23

Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel S23 மொபைலில் 8 GB RAM இருப்பது தனிச்சிறப்பு. இதுமட்டுமின்றி இதில் 50MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும், 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.7,514

 

Itel 55 5G

MediaTek Dimensity 6080 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel 55 5G மொபைலில் 6GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 50MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும், 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஒரு 5G மொபைல் ஆகும்.

விலை: ரூ.9,999

 

Itel P40 Plus

Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P40 Plus மொபைலின் தனிச்சிறப்பாக இதன் 7000mAh பேட்டரியைக் குறிப்பிடலாம். இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 13MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.7,499 முதல்

 

Itel P40 

Unisoc SC9863A என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P40 மொபைலின் தனிச்சிறப்பாக இதன் 6000mAh பேட்டரியைக் குறிப்பிடலாம். இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 13MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.6,840

 

Itel A60S

Unisoc SC9863A1 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P60S மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 8MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும். மற்ற மொபைலளோடு ஒப்பிடும் போது இதில் வசதிகள் சற்று குறைவே.

விலை: ரூ.6,840

The post 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வரும் iTel மொபைல்கள் first appeared on .

]]>
இந்தியாவில் வெளியானது 7000mAh பேட்டரியோடு itel P40+ மற்றும் itel A60s மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/itel-p40-plus-itel-a60s-launched-india-price-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-p40-plus-itel-a60s-launched-india-price-specifications Tue, 04 Jul 2023 06:19:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9132 itel இந்தியாவில் itel P40+ மற்றும் itel A60s என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட itel P40+ பவர் சீரிஸின் ஒரு பகுதியாகும். மேலும் இது HD+ தெளிவுத்திறனுடன் 6.82-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மொபைல் 90Hz புதுப்பிப்பு வீதம், இரட்டை கேமரா அமைப்பு, 4GB விர்ச்சுவல் ரேம் மற்றும் ஒரு பெரிய 7,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல், itel A60s ஆனது 4GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் […]

The post இந்தியாவில் வெளியானது 7000mAh பேட்டரியோடு itel P40+ மற்றும் itel A60s மொபைல்கள் first appeared on .

]]>

itel இந்தியாவில் itel P40+ மற்றும் itel A60s என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட itel P40+ பவர் சீரிஸின் ஒரு பகுதியாகும். மேலும் இது HD+ தெளிவுத்திறனுடன் 6.82-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மொபைல் 90Hz புதுப்பிப்பு வீதம், இரட்டை கேமரா அமைப்பு, 4GB விர்ச்சுவல் ரேம் மற்றும் ஒரு பெரிய 7,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல், itel A60s ஆனது 4GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது. இது HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.6 இன்ச் டிஸ்ப்ளே, பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் இரட்டை கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

itel P40+, itel A60s இந்திய விலை & கிடைக்கும் தன்மை

itel P40+ விலை ரூ.8,099. இந்த மொபைல் ஒற்றை 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பக திறனோடு வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட itel A60s பேஸ் மாடலின் விலை ரூ.6,299. இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் ஜூலை 11 முதல் அமேசான் வழியாக வாங்க முடியும். itel A60s ஆனது 4GB RAM + 128GB சேமிப்புத் திறனோடும் வருகிறது. இந்த வேரியண்ட் ஜூலை 13 முதல் சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும். itel A60s ஆனது Shadow Black, Moonlit Violet மற்றும் Glacier Green வண்ணங்களில் வருகிறது. அதேசமயம் itel P40+ ஆனது Force Black மற்றும் Ice Cyan நிறங்களில் வருகிறது.

itel P40+ விவரக்குறிப்புகள், அம்சங்கள்

itel P40+ ஆனது நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் HD+ தெளிவுத்திறனுடன் 6.82-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கைபேசியில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் யுனிசாக் T606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி கேமரா, விஜிஏ சென்சார், 8எம்பி செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது. மேலும் இது  7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது USB Type-C போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது.

 

itel P40+ விவரக்குறிப்புகள்

  • டிஸ்ப்ளே: 6.82-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, HD+ ரெசல்யூஷன், 90Hz புதுப்பிப்பு வீதம், பஞ்ச்-ஹோல் கட்அவுட்.
  • சிப்செட்: Octa-core Unisoc T606 சிப்செட்.
  • ரேம் மற்றும் சேமிப்பு: 4 ஜிபி ரேம், 128 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு.
  • பின்புற கேமரா: 13MP முதன்மை கேமரா, VGA சென்சார்.
  • முன்பக்க கேமரா: 8MP.
  • மென்பொருள்: ஆண்ட்ராய்டு 13.
  • மற்ற அம்சங்கள்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
  • பேட்டரி: 7,000mAh, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.
  • நிறங்கள்: ஃபோர்ஸ் பிளாக், ஐஸ் சியான்.

itel A60s விவரக்குறிப்புகள், அம்சங்கள்

itel A60s ஆனது HD+ தெளிவுத்திறனுடன் 6.6-இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. சாதனம் itel A60 ஸ்மார்ட்போனின் வாரிசாக வருகிறது. ஹூட்டின் கீழ் A60s ஐ இயக்குவது Unisoc SC9863A1 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பகத்தை கொண்டுள்ளது. P40+ போலவே, A60s ஆனது 4GB விர்ச்சுவல் ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது. 8MP பிரைமரி கேமரா, QVGA சென்சார், 5MP செல்ஃபி கேமரா, 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவு ஆகியவை அடங்கும்.

itel A60s விவரக்குறிப்புகள்

  • டிஸ்ப்ளே: 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, எச்டி+ ரெசல்யூஷன், வாட்டர் டிராப் வடிவ நாட்ச்.
  • சிப்செட்: Unisoc SC9863A1 SoC.
  • ரேம் மற்றும் சேமிப்பு: 4ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி உள் சேமிப்பு, 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு.
  • மென்பொருள்: ஆண்ட்ராய்டு 12.
  • பின்புற கேமரா: 8MP, QVGA சென்சார்.
  • முன் எதிர்கொள்ளும் கேமரா: 5MP.
  • மற்ற  அம்சங்கள்: பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி.
  • பேட்டரி: 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங்.
  • நிறங்கள்: ஷேடோ பிளாக், மூன்லைட் வயலட், கிளேசியர் கிரீன்.

The post இந்தியாவில் வெளியானது 7000mAh பேட்டரியோடு itel P40+ மற்றும் itel A60s மொபைல்கள் first appeared on .

]]>
ஒருமுறை சார்ஜ் செய்தால் 57 நாட்கள் நீடிக்கும் 6,000mAh பேட்டரியுடன் iTel P40 வெறும் ரூ.7,699க்கு அறிமுகமானது! https://www.91mobiles.com/tamil/itel-p40-cameout-with-6000mah-battery-18w-fastcharging-at-rs-7699/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-p40-cameout-with-6000mah-battery-18w-fastcharging-at-rs-7699 Thu, 16 Mar 2023 12:25:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6947   இந்தியாவின் பட்ஜெட்விலைப் பிரிவில் மொபைல்களை வெளியிடும் itel நிறுவனம், ‘P’ என்னும் புதிய சீரிஸின் முதல் மொபைலாக P40 என்ற பட்ஜெட்விலை மொபைலை வெளியிட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி இந்த சீரிஸானது மொபைலின் பவரில் அதிக கவனத்தை செலுத்தும் எனத் தெரிகிறது. அதை உறுதி செய்யும் படி இந்த மொபைலில் 6000mAh பேட்டரியை வழங்கி இருக்கிறது. கூடவே ஒருமுறை திரையை மாற்றிக்கொள்ளும் உத்திரவாதத்தையும் வழங்குகிறது. மேலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. […]

The post ஒருமுறை சார்ஜ் செய்தால் 57 நாட்கள் நீடிக்கும் 6,000mAh பேட்டரியுடன் iTel P40 வெறும் ரூ.7,699க்கு அறிமுகமானது! first appeared on .

]]>

Highlights

  • Itel நிறுவனம் பவர் சீரிஸில் சீரிஸின் முதல் மொபைலாக P40 மொபைலை வெளியிட்டு இருக்கிறது
  • நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 57 நாட்களுக்கான ஸ்டேண்ட்-பை பவரைத் தரும்.
  • ரூ.7699 வரும் இந்த மொபைல் 6000mah பேட்டரியோடு, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது

 

இந்தியாவின் பட்ஜெட்விலைப் பிரிவில் மொபைல்களை வெளியிடும் itel நிறுவனம், ‘P’ என்னும் புதிய சீரிஸின் முதல் மொபைலாக P40 என்ற பட்ஜெட்விலை மொபைலை வெளியிட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி இந்த சீரிஸானது மொபைலின் பவரில் அதிக கவனத்தை செலுத்தும் எனத் தெரிகிறது. அதை உறுதி செய்யும் படி இந்த மொபைலில் 6000mAh பேட்டரியை வழங்கி இருக்கிறது. கூடவே ஒருமுறை திரையை மாற்றிக்கொள்ளும் உத்திரவாதத்தையும் வழங்குகிறது. மேலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலைப் பிரியர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மொபைலின் பிற அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த itel P40 மொபைல் 6.6 அங்குல HD+ IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முன்பக்க கேமராவுக்காக வாட்டர் ட்ராப் ஸ்கிரீன் வடிவமைப்பில்  1612 x 720 பிக்சல் அடர்த்தியில், 120Hz ரிப்ரெஷ்ரேட்டுடன் வெளியாகி இருக்கிறது.

 

கேமரா

இந்த மொபைலின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், இரண்டாவது கேமராவாக ஒரு QVGA கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே அருகில் ஒரு ப்ளாஷ் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

இந்த itel P40 மொபைலில் SC9863A ஆக்டா-கோர் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல்,  4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத்திறனில் வெளியாகி இருக்கிறது. மேலும் இதில் 7ஜிபி வரையிலாக ரேமை அதிகரித்துக் கொள்ளும் மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடவே, இதன் சேமிப்பித்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியே 512GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

பேட்டரி

இந்த மொபைலின் குறிப்பிடத்தகுந்த அம்சமே இதன் பேட்டரிதான். பட்ஜெட் விலையில் வந்தாலும் இந்த மொபைல் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கூடவே இது 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியாகி உள்ளது.

 

இயங்குதளம்

இத ஐடெல் பி40 மொபைல் ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பில் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மொபைல் 9.2மிமீ தடிமனையே கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் ஐடி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நிற விருப்பங்கள்

இந்த மொபைல் ஃபோர்ஸ் ப்ளாக், ட்ரீமி ப்ளூ மற்றும் லக்சுரியஸ் கோல்டு என மூன்று வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.

 

விலை & உத்திரவாதம்

இந்த ஐடெல் பி40 மொபைலுக்கு ஒரு வருட வாரண்டியும், சர்விஸ் சார்ஜ் இன்றி ஒருமுறை திரையை மாற்றிக் கொள்ளும் உத்திரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல் itel P40 மொபைலின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் ரூ.7699 என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

The post ஒருமுறை சார்ஜ் செய்தால் 57 நாட்கள் நீடிக்கும் 6,000mAh பேட்டரியுடன் iTel P40 வெறும் ரூ.7,699க்கு அறிமுகமானது! first appeared on .

]]>