kamalhasan https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:22:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance Fri, 17 Feb 2023 10:47:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5903 லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.   ரஜினியின் கடைசி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் […]

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>

Highlights

  • சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
  • தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

ரஜினியின் கடைசி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிக்கு கேமியோ ரோல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்பது தான்.

 

ரஜினியின் விருப்பம்

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தலைவர் 171 என்ற டைட்டிலில் அப்டேட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை, தசெ ஞானவேல் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 171 கடைசிப் படமாக இருக்கும்பட்சத்தில் அதனை லோகேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது. ரஜினி கடைசியாக ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதனால் தான் லோகேஷிடம் அதுகுறித்து பேசியதாக தெரிகிறது.

 

விட்டுக் கொடுப்பாரா கமல்?

தற்போது விஜய்யின் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என அவரே கூறியுள்ளார். அதன்பிறகு விக்ரம் 2 படத்தை இயக்க லோகேஷ் பிளான் போட்டுள்ளார். அதேநேரம் ரஜினியை இயக்க தன்னை தேடிவந்த வாய்ப்பை விட்டுவிடவும் லோகேஷுக்கு மனம் இல்லையாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்றால், அது கமல் எடுக்கும் முடிவில் தான் உள்ளதாம்.

 

லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை

ரஜினியின் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 2வை தொடங்கலாமா என லோகேஷ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் விக்ரம் இரண்டாம் பாகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கமலிடம் பேசி வருகிறாராம் லோகேஷ். தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சீக்கிரமே ரஜினி – லோகேஷ் படத்தின் அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்தால், அதுவும் எல்சியூ கான்செப்ட்டில் இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், இதுகுறித்து ரஜினி, லோகேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

 

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>
இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? https://www.91mobiles.com/tamil/writer-jeyamohan-says-interesting-information-about-indian-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=writer-jeyamohan-says-interesting-information-about-indian-2 Fri, 16 Dec 2022 07:17:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4353 இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது. இந்தியன் 2 இந்தியன் […]

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>

இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது
அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது.

இந்தியன் 2

இந்தியன் திரைப்படம் அளித்த உத்வேகத்துடன் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அதன் பின் கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஷங்கர், ராம்சரணை வைத்து ‘RC15’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள பேட்டியில், இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடிக்கிறார். வாயில் எதை மென்றாலும், அது மேக்கப்பை கெடுத்துவிடும் என்பதால், ஸ்ட்ராவில் ஜூஸ்சை மட்டுமே குடித்து வருகிறார். இதைப்பார்க்கும் போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றார் .

கதை

இந்தியன் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போல பீல் குட் கொண்ட படம் தான். ஆனால், இந்தியன் 2 படத்தின் கதை கொஞ்சம் பின்னால் போகும், அதாவது சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. சொல்லப் போனால் இந்தியன் தாத்தா என்ற சேனாதிபதிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் அப்பா வருவார் என்றார்.

3 மணி நேரப்படம்

மேலும், இந்தியன் 2 படத்திற்கு 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்ட படம் என்றும், இது ஷங்கரின் கேரியரில் மிக நீண்ட திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் உருவாக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் முக்கியபங்கு ஆற்றுகிறார். திரைக்கதை உருவாக்கம், வசனம் போன்றவற்றில் அவரது பங்களிப்பு இருக்கிறது. இந்தியன் 2 படத்தில் அப்பா கதாபாத்திரமும் வருகிறது என்றால் இதிலும் கமலஹாசனுக்கு இரட்டை வேடம் இருக்கிறது. மேலும் சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலம் என்பதால் படத்தின் பெறும்பகுதி பீரியட் பிலிம் என்னும் வரலாற்றுப்படமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனைக் கொண்டு பார்க்கையில் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>
கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! https://www.91mobiles.com/tamil/indian-2-movie-team-shared-poster-for-kamal-fans-for-his-birthday-special/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indian-2-movie-team-shared-poster-for-kamal-fans-for-his-birthday-special Mon, 07 Nov 2022 11:18:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3445 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் […]

The post கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! first appeared on .

]]>

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் இந்தியன் 2 போஸ்டர்கள் வெளியீடு! first appeared on .

]]>