kratos R https://www.91mobiles.com/tamil Wed, 07 Dec 2022 08:27:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! https://www.91mobiles.com/tamil/tork-motors-exchange-offer/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tork-motors-exchange-offer Wed, 07 Dec 2022 08:27:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4142 இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம். ஆண்டு முடிவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனை […]

The post எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>

இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம்.

ஆண்டு முடிவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

எக்ஸ்சேஞ்ஜ்

இந்த் பைக்குகளை எக்ஸ்சேஞ்ஜ் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அந்-நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளளாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர் மற்றும் பைக்.. அது எந்த பிராண்டின் பழைய வாகனமாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக நிறுவனம் கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. யூஸ்டு டூ-வீலர்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த க்ரெட்ஆர். இது பழைய இருசக்கர வாகனத்தை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

எப்படி செய்வது?

டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கிரெட்ஆர்-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை விசிட் செய்ய வேண்டும். இங்கு பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்வதற்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கிரெட்ஆர் நிறுவனத்திற்கு 120 செக் பாயிண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு நம்முடைய பழைய வாகனத்தை சமர்பித்தால் அவர்கள் அந்த வாகனத்திற்கான மதிப்பை ஆய்வை செய்து வழங்குவர். இவர்கள் கொடுக்கக் கூடிய மதிப்புகளின் அடிப்படையிலேயே புதிய டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கு தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வங்கி கடன் அல்லது கேஷ் என எந்த வழிகளில் வேண்டுமானாலும் கொடுத்து எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ளலாம்.

எல்லோருக்கும் இல்லை

ஆனால், இந்த சிறப்பு ஆஃபரை டார்க் மோட்டார்ஸ் எல்லோருக்கும் வழங்கவில்லை. அதாவது குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. புனே மற்றும் பெங்களூரு நகர வாசிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

விலை

க்ரடோஸ் ஆர் வேரியண்டைக் காட்டிலும் க்ரடோஸ் சற்றுக் குறைந்த திறன் கொண்டதாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1.22 லட்சம் ஆகும். இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை. இதைவிட 15 ஆயிரம் ரூபா அதிக விலைக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது.

திறன் & வசதிகள்

டார்க் க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச் திறன் வெளிப்பாடு 7.5kW. கிளட்ச் இல்லா சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதைக் காட்டிலும் அதிக வசதிக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 9.0 கிலோவாட். இதன் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும். இதிலும், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, நான்கு விதமான ரைடிங் மோட்கள், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

The post எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>
வீட்டுக்கே எலக்ட்ரிக் பைக்கை டெலிவரி கொடுக்கும் டார்க் https://www.91mobiles.com/tamil/tork-kratos-and-kratos-r-delivery-begins-in-mumbai-features-range-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tork-kratos-and-kratos-r-delivery-begins-in-mumbai-features-range-details Wed, 26 Oct 2022 09:35:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3237 டார்க் (Tork) மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் -இன் டெலிவரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. கடந்த ஜூலையில் முதற்கட்டமாக புனேவில் டெலிவரிகள் துவங்கியதை அடுத்து தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவரிகள் மும்பையில் துவங்கப்பட்டுள்ளன. டெலிவரி இதன் பின்னர் மற்ற முக்கிய நகரங்களில் டெலிவரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புனேவில் உள்ள டார்க் மோட்டார்ஸின் தலைமையகத்தில் இருந்து நேரடியாக பைக்குகள் […]

The post வீட்டுக்கே எலக்ட்ரிக் பைக்கை டெலிவரி கொடுக்கும் டார்க் first appeared on .

]]>

டார்க் (Tork) மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான க்ராடோஸ் & க்ராடோஸ் ஆர் -இன் டெலிவரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. கடந்த ஜூலையில் முதற்கட்டமாக புனேவில் டெலிவரிகள் துவங்கியதை அடுத்து தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவரிகள் மும்பையில் துவங்கப்பட்டுள்ளன.

டெலிவரி

இதன் பின்னர் மற்ற முக்கிய நகரங்களில் டெலிவரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புனேவில் உள்ள டார்க் மோட்டார்ஸின் தலைமையகத்தில் இருந்து நேரடியாக பைக்குகள் டெலிவரி செய்யப்படுகின்றன.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டெலிவரிக்காக வாடிக்கையாளர் எந்தவொரு ஷோரூமிற்கும் செல்ல வேண்டாம். நேரடியாக புனேவில் இருந்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டோர்ஸ்டெப் முறையில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவரி செய்யப்படுகின்றன.

டெலிவரிகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து டார்க் மோட்டார்ஸின் நிறுவனரும், சிஇஓ-வுமான கபில் ஷெல்கே அளித்த பேட்டியில், “மும்பையில் உள்ள எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எங்களின் அதிநவீன தயாரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இதன் மூலம், புனேவை தாண்டி புதிய பகுதிகளுக்கு எங்கள் வரம்பை விரிவுப்படுத்தியுள்ளோம். மேலும், எங்களின் சக்கான் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருவதால், பைக்குகளின் வெளியீட்டின்போது அறிவிக்கப்பட்டபடி, பல நகரங்களுக்கு எங்கள் கவனத்தை கொண்டு செல்வோம்” என்றார்.

விலை

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் க்ராடோஸ் மற்றும் க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் க்ராடோஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,22,499 ஆகவும், க்ராடோஸ் ஆர் மாடலின் விலை ரூ.1,37,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறம்

விலை குறைவான க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்கை வெள்ளை நிறத்தில் மட்டுமே பெற முடியும். ஆனால் க்ராடோஸ் ஆர் மோட்டார்சைக்கிளை வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு என 4 விதமான நிறத்தேர்வுகளில் ஒன்றில் தேர்வு செய்யலாம். ஆனால் இதில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவரிகள் மட்டுமே தற்போது துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராடோஸ் ஆர் பைக்கை சிவப்பு நிறத்தில் முன்பதிவு செய்த மும்பை வாடிக்கையாளர்களுக்கு பைக் வரும் நவம்பர் மாதத்தில் டெலிவரி செய்யப்பட உள்ளதாம். இயக்க ஆற்றலை வழங்கும் பவர்ட்ரெயினை பொறுத்தவரையில், இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

திறன்

இரண்டிலும் ஒரே மாதிரியான 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரியும், ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இவற்றின் மூலமாக க்ராடோஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 7.5 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே பெற முடியும். ஆனால் க்ராடோஸ் ஆர் வேரியண்ட் அதிகப்பட்சமாக 9 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 38 என்எம் டார்க் திறன் ஆற்றலில் இயங்கக்கூடியது.

மைலேஜ்

இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். ஃபாஸ்ட் சார்ஜரை உபயோகித்து க்ராடோஸ் ஆர் பைக்கில் பேட்டரியை வெறும் 1 மணிநேரத்தில் 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும் என்கிறது டார்க் மோட்டார்ஸ் நிறுவனம்.

அதுவே வீட்டு உபயோக மின்சாரத்தில் இந்த அளவிற்கு சார்ஜ் நிரப்ப 4இல் இருந்து 5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். டார்க் எலக்ட்ரிக் பைக்குகளில் முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாக, முழு டிஜிட்டல் டேஸ்போர்டு, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், முன்பக்க ஸ்டோரேஜ் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. க்ராடோஸ் ஆர் பைக் கூடுதலாக ஜியோஃபென்சிங், க்ராஷ் அலார்ட் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் அனாலிஸிஸ் உள்ளிட்ட வசதிகளை பெறுகிறது.

The post வீட்டுக்கே எலக்ட்ரிக் பைக்கை டெலிவரி கொடுக்கும் டார்க் first appeared on .

]]>