இந்திய எலக்ட்ரிக் வாகன தயரிப்பு நிறுவனமான ‘டார்க் மோட்டார்ஸ்’ எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை அறிவித்திருக்கின்றது. இந்த திட்டத்தில் என்ன மாதிரியான வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்யலாம்?, எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை எப்படி பெறுவது என்கிற தகவலை பார்க்கலாம்.
ஆண்டு முடிவில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், டார்க் மோட்டார்ஸ் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
எக்ஸ்சேஞ்ஜ்
இந்த் பைக்குகளை எக்ஸ்சேஞ்ஜ் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அந்-நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளளாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர் மற்றும் பைக்.. அது எந்த பிராண்டின் பழைய வாகனமாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக நிறுவனம் கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. யூஸ்டு டூ-வீலர்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த க்ரெட்ஆர். இது பழைய இருசக்கர வாகனத்தை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
எப்படி செய்வது?
டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கிரெட்ஆர்-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை விசிட் செய்ய வேண்டும். இங்கு பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்வதற்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கிரெட்ஆர் நிறுவனத்திற்கு 120 செக் பாயிண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு நம்முடைய பழைய வாகனத்தை சமர்பித்தால் அவர்கள் அந்த வாகனத்திற்கான மதிப்பை ஆய்வை செய்து வழங்குவர். இவர்கள் கொடுக்கக் கூடிய மதிப்புகளின் அடிப்படையிலேயே புதிய டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கு தள்ளுபடி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வங்கி கடன் அல்லது கேஷ் என எந்த வழிகளில் வேண்டுமானாலும் கொடுத்து எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ளலாம்.
எல்லோருக்கும் இல்லை
ஆனால், இந்த சிறப்பு ஆஃபரை டார்க் மோட்டார்ஸ் எல்லோருக்கும் வழங்கவில்லை. அதாவது குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. புனே மற்றும் பெங்களூரு நகர வாசிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
விலை
க்ரடோஸ் ஆர் வேரியண்டைக் காட்டிலும் க்ரடோஸ் சற்றுக் குறைந்த திறன் கொண்டதாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1.22 லட்சம் ஆகும். இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை. இதைவிட 15 ஆயிரம் ரூபா அதிக விலைக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது.
திறன் & வசதிகள்
டார்க் க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச் திறன் வெளிப்பாடு 7.5kW. கிளட்ச் இல்லா சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதைக் காட்டிலும் அதிக வசதிக் கொண்டதாக க்ரடோஸ் ஆர் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 9.0 கிலோவாட். இதன் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும். இதிலும், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, நான்கு விதமான ரைடிங் மோட்கள், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.






