lokesh kanagaraj https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:28:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance Fri, 17 Feb 2023 10:47:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5903 லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.   ரஜினியின் கடைசி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் […]

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>

Highlights

  • சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
  • தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

ரஜினியின் கடைசி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிக்கு கேமியோ ரோல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்பது தான்.

 

ரஜினியின் விருப்பம்

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தலைவர் 171 என்ற டைட்டிலில் அப்டேட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை, தசெ ஞானவேல் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 171 கடைசிப் படமாக இருக்கும்பட்சத்தில் அதனை லோகேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது. ரஜினி கடைசியாக ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதனால் தான் லோகேஷிடம் அதுகுறித்து பேசியதாக தெரிகிறது.

 

விட்டுக் கொடுப்பாரா கமல்?

தற்போது விஜய்யின் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என அவரே கூறியுள்ளார். அதன்பிறகு விக்ரம் 2 படத்தை இயக்க லோகேஷ் பிளான் போட்டுள்ளார். அதேநேரம் ரஜினியை இயக்க தன்னை தேடிவந்த வாய்ப்பை விட்டுவிடவும் லோகேஷுக்கு மனம் இல்லையாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்றால், அது கமல் எடுக்கும் முடிவில் தான் உள்ளதாம்.

 

லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை

ரஜினியின் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 2வை தொடங்கலாமா என லோகேஷ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் விக்ரம் இரண்டாம் பாகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கமலிடம் பேசி வருகிறாராம் லோகேஷ். தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சீக்கிரமே ரஜினி – லோகேஷ் படத்தின் அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்தால், அதுவும் எல்சியூ கான்செப்ட்டில் இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், இதுகுறித்து ரஜினி, லோகேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

 

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>
லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம், ராகவா லாரன்ஸ்! https://www.91mobiles.com/tamil/lokesh-kanagaraj-will-produce-two-films-starring-vikram-and-raghava-lawrence/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lokesh-kanagaraj-will-produce-two-films-starring-vikram-and-raghava-lawrence Wed, 14 Dec 2022 13:13:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4309 மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ், தற்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார். கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய லோகேஷ், அடுத்து விஜய்யுடன் தளபதி 67ல் இணையவுள்ளார். இந்நிலையில், லோகேஷின் ஹிட் லிஸ்ட்டில் சியான் விக்ரம், ராகவா லாரன்ஸ் இருவரும் விரைவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில் தளபதி 67 மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தான் இயக்கிய 4 திரைப்படங்களையும் ஹிட்டாக்கினார் லோகேஷ் […]

The post லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம், ராகவா லாரன்ஸ்! first appeared on .

]]>

மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ், தற்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார். கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய லோகேஷ், அடுத்து விஜய்யுடன் தளபதி 67ல் இணையவுள்ளார். இந்நிலையில், லோகேஷின் ஹிட் லிஸ்ட்டில் சியான் விக்ரம், ராகவா லாரன்ஸ் இருவரும் விரைவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரியில் தளபதி 67

மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தான் இயக்கிய 4 திரைப்படங்களையும் ஹிட்டாக்கினார் லோகேஷ் கனகராஜ். முக்கியமாக கடந்த ஜூன் மாதம் வெளியான ‘விக்ரம்’, கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ரெக்காட் பிரேக் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளார் லோகேஷ். தற்காலிகமாக தளபதி 67 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ள தளபதி 67 படம் பற்றிய அப்டேட், ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராகும் லோகேஷ்?

விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த முழுமையான அறிவிப்புகள் வாரிசு ரிலீஸுக்குப் பின்னர் தெரிய வரலாம். மேலும், விஜய்யுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவலும் ஜனவரியில் அறிவிக்கப்படலாம். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநராக வலம் வரும் லோகேஷ், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளது கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷுடன் இணையும் விக்ரம்?

முதற்கட்டமாக லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். அதில் ஒரு படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி லோகேஷ் தரப்பில் இருந்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாம். அதேநேரம் இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக அவரது உதவி இயக்குநரோ அல்லது வேறு ஒருவரோ இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. கதை, திரைக்கதை, தயாரிப்பு பணிகளில் மட்டும் லோகேஷ் ஈடுபட இருக்கிறாராம். விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பின்னரே லோகேஷ் – விக்ரம் கூட்டணி குறித்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாம்.

ராகவா லாரன்ஸ்

அதேபோல் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இன்னொரு படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் குறித்து ஏற்கனவே சில செய்திகள் வெளியாகியிருந்தன. அதன்படி, லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ரத்னகுமார் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், விக்ரம், தளபதி 67 உள்ளிட்ட படங்களில் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணியில் உருவாகும் படம் தான் லோகேஷ் தயாரிப்பில் முதலில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ்ஜூம் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு கைதி 2 விக்ரம் சீக்வெல் ஆகியவற்றை இயக்க இருக்கிறார்.

The post லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம், ராகவா லாரன்ஸ்! first appeared on .

]]>
விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! https://www.91mobiles.com/tamil/vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today Mon, 05 Dec 2022 14:04:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4091 நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் […]

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>

நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து 2023 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>
ஜப்பானில் வெளியாகும் விஜய் படம்! https://www.91mobiles.com/tamil/vijay-movie-in-japan/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-movie-in-japan Mon, 31 Oct 2022 12:07:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3301 இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் […]

The post ஜப்பானில் வெளியாகும் விஜய் படம்! first appeared on .

]]>

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது.

மொழி மாற்றம்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.

50 வயது தாதா

இந்நிலையில் விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

மிஷ்கினும் இணைந்தார்

இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்ததை அடுத்து நான்காவது வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒப்புக் கொண்டதாகவும் பின்னர் அவர் மறுத்ததால் நடிகர் நிவின் பாலி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது நிவின் பாலி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ஜப்பானில் வெளியாகும் விஜய் படம்! first appeared on .

]]>
ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? https://www.91mobiles.com/tamil/rajinikanths-170th-film-as-a-director/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rajinikanths-170th-film-as-a-director Wed, 20 Jul 2022 09:03:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=987 அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு […]

The post ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? first appeared on .

]]>

அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க விரும்புவதாக தெரிகிறது. ஏற்கனவே கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். அப்போது புதிய படத்தில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்து திரைக்கு வந்த விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? first appeared on .

]]>