mahindra XUV400 https://www.91mobiles.com/tamil Mon, 12 Sep 2022 14:19:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மஹிந்திரா-வின் XUV400 எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ போகுமாம்! https://www.91mobiles.com/tamil/facts-about-mahindra-xuv400-ev/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=facts-about-mahindra-xuv400-ev Mon, 12 Sep 2022 10:42:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2240 இந்தியாவின் உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யான Mahindra XUV400 Electric காரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட Mahindra XUV400 Electric, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் SUV பற்றி வரும் ஜனவரி 2023-ல் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் […]

The post மஹிந்திரா-வின் XUV400 எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ போகுமாம்! first appeared on .

]]>

இந்தியாவின் உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யான Mahindra XUV400 Electric காரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட Mahindra XUV400 Electric, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் SUV பற்றி வரும் ஜனவரி 2023-ல் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் SUV-ஆன Mahindra XUV400, 456 கிமீ டிரைவிங் ரேஞ்ச் தரும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

டிசம்பர் 2022 முதல் 16 நகரங்களில் முதல் கட்டமாக டெமோ வாகனங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கான டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் வரும் ஜனவரி 2023-ன் இறுதியில் இந்த காரின் டெலிவரி தொடங்கும். இந்த எலெக்ட்ரிக் SUV உடன் சார்ஜர் விருப்பங்களை வழங்குவதோடு, இந்தியா முழுவதும் வேகமாக சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்கும் வேலையிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த எலெக்ட்ரிக் SUV-யின் விலை ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும். இந்த எலெக்ட்ரிக் SUV 4200 மிமீ நீளம் மற்றும் 1821 மிமீ அகலம் கொண்டதாக இருக்கும். இந்த கார் சிறந்த இன்-கிளாஸ் வீல்பேஸ் மற்றும் 2600 மிமீ மற்றும் 378 லிட்டர் பூட் கெப்பாசிட்டியுடன் வருகிறது. மேலும் புதிய வெண்கல நிறத்தில் ‘Twin Peaks’ லோகோவை மையத்தில் கொண்ட முதல் மஹிந்திரா எலெக்ட்ரிக் மாடல் இதுவாகும்.

நிறத் தேர்வுகள்

காப்பர் ஃபினிஷில் டூயல் டோன் ரூஃப் ஆப்ஷனுடன் ஆர்க்டிக் ப்ளூ, எவரெஸ்ட் ஒயிட், கேலக்ஸி கிரே, நாபோலி பிளாக் மற்றும் இன்பினிட்டி ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் SUV வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

செயல்திறன் & ரேஞ்ச்

மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரானது நான்-லக்ஸரி செக்மென்ட்டில் அதிவேக ஆக்ஸலரேஷன் கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். ஏனெனில் இது வெறும் 8.3 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. இந்த காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 150kmph ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் Indian driving cycle standards படி 456 கிலோமீட்டர் எலெக்ட்ரிக் ரேஞ்சை வழங்குகிறது. Li-ion செல்களைப் பயன்படுத்தும் 39.4kW பேட்டரி பேக்குடன் வரும் இந்த காரை 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சுமார் 50 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80% சார்ஜாகி விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் 7.2 kW/32A அவுட்லெட் வழியாக சார்ஜ் செய்யும் போது, 0-100% சார்ஜ் செய்ய ஆறரை மணி நேரம் ஆகும். ஸ்டான்டர்ட் 3.3 kW/16A டொமஸ்டிக் சாக்கெட்டை பயன்படுத்தி சார்ஜ் செய்தால் முழுவதுமாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரமாகும்.

முதல் கட்டமாக வரும் ஜனவரி 2023-ல் மும்பை, ஹைதராபாத், டெல்லி NCR, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, புனே, அகமதாபாத், கோவா, ஜெய்ப்பூர், சூரத், நாக்பூர், திருவனந்தபுரம், நாசிக், சண்டிகர், கொச்சி உள்ளிட்ட 16 நகரங்களில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மஹிந்திரா-வின் XUV400 எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ போகுமாம்! first appeared on .

]]>
டாடா நெக்ஸானுக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 https://www.91mobiles.com/tamil/mahindra-xuv400-electric-suv-teaser/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mahindra-xuv400-electric-suv-teaser Thu, 01 Sep 2022 15:47:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1996 மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரின் டீசர் படங்களை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை நெக்ஸான் பிரைம் என்கிற பெயரில் டாடா நிறுவனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் மற்றுமொரு கூடுதல் தேர்வாக நெக்ஸான் இவி மேக்ஸ் […]

The post டாடா நெக்ஸானுக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 first appeared on .

]]>

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரின் டீசர் படங்களை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை நெக்ஸான் பிரைம் என்கிற பெயரில் டாடா நிறுவனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் மற்றுமொரு கூடுதல் தேர்வாக நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் மாடலையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வெகு விரைவில் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் டீசர் படங்களையே நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

காரின் முகப்புப்பகுதியை வெளிக்காட்டக் கூடிய டீசர் படத்தையே தற்போது மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. இந்த காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த கார் குறித்த எந்த ஒரு சிறு தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.

இதனால், எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் என்ன மாதிரியான அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. அதேசமயம், கடந்த காலங்களில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும்போது கேமிராவின் கண்களில் சிக்கியது. அப்போது எடுக்கப்பட்ட படங்களின் வாயிலாக கார்குறித்து சில முக்கிய தகவல்கள் நமக்கு தெரிய வந்தன.

அட்ரினோஎக்ஸ் இணைப்பு வசதியுடன், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்தது. இத்துடன், அடாஸ் தொழில்நுட்பம், ஓர் முழு சார்ஜில் 400க்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக், கவர்ச்சிகரமான பாடி பேனல்கள் மற்றும் க்ரில் ஆகியவையும் எக்ஸ்யூவி 400 காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 300 காரை தழுவியே இந்த எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த காரும் அதன் போட்டியாளரான டாடா நெக்ஸானைப் போல மின்சாரம் மற்றும் ஐசிஇ ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிகின்றது. எக்ஸ்யூவி300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், தோற்றத்திலும், சிறப்பு வசதிகளிலும் பல மடங்கு மாறுபட்டதாக எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சாலையில் சோதனையோட்டத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் உள்ளன. தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகளில் மட்டுமின்றி அளவிலும் எக்ஸ்யூவி 300 காரைக் காட்டிலும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் சற்று பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.2 மீட்டர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் இட வசதி இருக்கும். இதேபோல் பூட் ஸ்பேஸும் இந்த காரில் மிக தாராளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஹெட்லைட்டுடன் கூடிய டிஆர்எல்கள், முகப்பு பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கிரில், புதிய ஸ்டைலிலான டெயில் லேம்ப் மற்றும் டெயில் கேட் உள்ளிட்டவையும் எக்ஸ்யூவி 400 காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதில் எந்த மாதிரியான தொழில்நுட்ப வசதிகள், பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் உடன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பதை துல்லியமாகத் தெரியவில்லை. அதேவேலையில், இந்தியாவில் தற்போது விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவிக்கு போட்டியாளனாக இது எதிர்பார்க்கப்படுவதால், ஓர் முழு சார்ஜில் 400க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜுடன் எக்ஸ்யூவி400 எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நெக்ஸான் ஓர் முழு சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி மேக்ஸ் 437 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் ரூ. 14.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கின்றது.

The post டாடா நெக்ஸானுக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 first appeared on .

]]>