Moto E22s https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 06:09:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.8999க்கு அறிமுகமானது மோட்டரோலாவின் பட்ஜெட்போன் Moto E22s https://www.91mobiles.com/tamil/moto-e22s-launched-at-rs-8999-with-5000mah-battery-and-stylish-premium-design/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-e22s-launched-at-rs-8999-with-5000mah-battery-and-stylish-premium-design Thu, 20 Oct 2022 05:03:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3130 இந்தியாவில் மோட்டரோலா நிறுவனம் Moto E22s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைல் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் இந்த புதிய போன் அக்டோபர் 22 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் இப்படி ஒரு போன் என்பது உண்மையாகவே வரவேற்கத்தக்கது. கேமரா 16MP முதன்மை கேமரா, […]

The post ரூ.8999க்கு அறிமுகமானது மோட்டரோலாவின் பட்ஜெட்போன் Moto E22s first appeared on .

]]>

இந்தியாவில் மோட்டரோலா நிறுவனம் Moto E22s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைல் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் இந்த புதிய போன் அக்டோபர் 22 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் இப்படி ஒரு போன் என்பது உண்மையாகவே வரவேற்கத்தக்கது.

கேமரா

16MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார் உட்பட இரண்டு பின்பக்க கேமராக்கள் மற்றும் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் 8MP செல்ஃபி கேமராவும் இந்த போனில் இருக்கின்றன. இந்த கேமராக்கள் மூலம் Full HD வீடியோக்களை எடுக்க முடியும்.

இயங்குதளம்

இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இயங்குதளத்தைப் பொருத்தவரை, சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்தில் ரூ.10,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ32 மாடலின் விலையை விட குறைந்த விலையில் இது அறிமுகமாகி இருக்கிறது.

விலை

Moto e22s போன் ஆனது இந்தியாவில் ரூ.8999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அக்டோபர் 22 முதல் பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 64 ஜிபி என்ற ஒரே வேரியண்ட் இல் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனானது ஆர்க்டிக் ப்ளூ (ortic blue) மற்றும் ஈகோ ப்ளாக் (eco black) ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

வடிவமைப்பு

மோட்டோரோலா நிறுவனம் ட்விட்டர் மூலமாக மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

அம்சங்கள்

Moto e22s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது நான்கு ஏ53 1.8GHz கோர்கள் கொண்ட MediaTek Helio G37 octa-core CPU மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் ஆதரவுடன் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே

Moto e22s ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 1600×720 தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டி

இதில் Wi-Fi, Bluetooth, 3.5mm ஆடியோ ஜாக், GPS போன்ற கனெக்டிவிட்டிகளுடன் வெளியாகி இருக்கிறது இந்த் மோடோ e22s. இதில் டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

Moto e22s ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் இல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் யூஎஸ்பி கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த போனின் எடை 185கிராம் ஆகும்.

The post ரூ.8999க்கு அறிமுகமானது மோட்டரோலாவின் பட்ஜெட்போன் Moto E22s first appeared on .

]]>
அறிமுகமானது Moto E22s https://www.91mobiles.com/tamil/moto-e22s-entry-level-smartphone-launched-with-5000mah-battery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-e22s-entry-level-smartphone-launched-with-5000mah-battery Thu, 01 Sep 2022 12:31:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1984 புதிய Moto E22s ஸ்மார்ட்போன் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாக ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த மோட்டோரோலா போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. E சீரிஸ் வரிசையில் புது வரவு Motorola இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் Moto E32s என்ற மாடலை இதே E சீரிஸ் வரிசையில் அறிமுகப்படுத்தியது. இது மோட்டோரோலாவின் E சீரிஸ் […]

The post அறிமுகமானது Moto E22s first appeared on .

]]>

புதிய Moto E22s ஸ்மார்ட்போன் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாக ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த மோட்டோரோலா போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

E சீரிஸ் வரிசையில் புது வரவு

Motorola இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் Moto E32s என்ற மாடலை இதே E சீரிஸ் வரிசையில் அறிமுகப்படுத்தியது. இது மோட்டோரோலாவின் E சீரிஸ் வரிசையில் சேரும் புதிய மொபைல் ஆகும். இது 16MP பிரைமரி கேமரா, MediaTek Helio G37 சிப்செட், 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. இது பேஸ் அன்லாக், பவர் பட்டனோடு ஒருங்கிணைந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வருகிறது.

சிறப்பம்சம்

Moto E22s ஸ்மார்ட்போன் HD+ தரத்துடன் 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பஞ்ச் ஹோல் கட் அவுட் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ கொண்டு இருக்கிறது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால் இதில் ஆக்டா கோர் MediaTek Helio G37 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சேமிப்புத்திறன் மற்றும் கேமரா

இந்த புதிய மோட்டோ E22s சாதனம் 4GB ரேம் கொண்டுள்ளது. Moto E22s சாதனம் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இருப்பினும், உங்களுக்கு ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம், ஏனெனில் இது மைக்ரோ SD கார்டு மூலம் 1TB வரை கூடுதல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இது 16MP பிரைமரி சென்சார் உடன் 2MP டெப்த் சென்சர் உடன் கூடிய டூயல் ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 8MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் உடன் வருகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக, போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சமும் இதில் உள்ளது. இப்போது, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். அதே சமயம் இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நாம் என்ன விலையில் வாங்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

Moto E22s ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்தியாவில் எப்போது இதை எதிர்பார்க்கலாம்?

மோட்டோரோலா அறிவிப்பின் படி, மோட்டோ E22s சாதனம் ஒற்றை வேரியண்ட் மாடலாக 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை EUR 159.99 ஆகும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 12,700 விலையாகும். இது ஆர்க்டிக் ப்ளூ (ortic blue) மற்றும் ஈகோ பிளாக் (eco black) ஆகிய இரண்டு நிறத் தேர்வுகளில் கிடைக்கும். இந்தியாவிற்கு இந்த போன் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அறிமுகமானது Moto E22s first appeared on .

]]>