moto G13 https://www.91mobiles.com/tamil Mon, 31 Jul 2023 11:54:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/latest-mobiles-under-10000-with-128gb/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=latest-mobiles-under-10000-with-128gb Mon, 31 Jul 2023 11:54:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9753   மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலான வேலைகளை ஒரு மொபைலின் துணை கொண்டே செயதுவிட முடியும் என்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டோம். புகைப்படங்கள் எடுப்பது, வீடியோ எடுப்பது, டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வது, திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என பலவகையான ஃபைல்கலை மொபைல் மூலம் கையாளுகிறோம். இதனால் மொபைலின் சேமிப்புத்திறனையும் அதிகரித்து தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மெகா பைட்டுகளில் இருந்த மொபைலின் சேமிப்புத்திறன் தற்போது ஜிகா பைட்டைத் தாண்டி, டெராபைட்டிற்கு […]

The post ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் first appeared on .

]]>

 

மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலான வேலைகளை ஒரு மொபைலின் துணை கொண்டே செயதுவிட முடியும் என்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டோம். புகைப்படங்கள் எடுப்பது, வீடியோ எடுப்பது, டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வது, திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என பலவகையான ஃபைல்கலை மொபைல் மூலம் கையாளுகிறோம். இதனால் மொபைலின் சேமிப்புத்திறனையும் அதிகரித்து தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மெகா பைட்டுகளில் இருந்த மொபைலின் சேமிப்புத்திறன் தற்போது ஜிகா பைட்டைத் தாண்டி, டெராபைட்டிற்கு வந்துவிட்டது. அதாவது ஒரு கம்ப்யூட்டரின் சேமிப்புத்திறனுக்கு இணையான சேமிப்புத்திறனோடு  தற்போதைய மொபைல்கள் வெளியாகின்றன.

இதில் (Micro SD கார்டு மூலம்) அதிகரித்துக் கொள்ளக்கூடிய (Expandable storage) சேமிப்புத்திறன் ஒருபக்கம் இருந்தாலும், மொபைலிலேயே in-build ஆக வரும் சேமிப்புத்திறன் முக்கியமான ஒன்றாகும். அப்படி ரூ.10,000 விலைக்குள்ளாக வெளியான மொபைல்களில், அதுவும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தில் வெளியான மொபைல்களில் 128GB உள் சேமிப்புத்திறனைக் கொண்ட மொபைல்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் மொபைல்கள்

 

  • realme C53
  • I Kall S1
  • Tecno Spark 10C
  • Moto G13
  • Nokia C32
  • I Kall S1 Pro
  • I Kall S1 Plus
  • I Kall Z19 Pro Ultra
  • I Kall Z19 Ultra Plus

 

realme C53

இந்த மொபைல் 6.74 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 4G மொபைலில் 108MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரியோடு, 4GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 2TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 9.799

 

I Kall S1

இந்த மொபைல் 6.8 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 4G மொபைலில் 13MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 6000mAh பேட்டரியோடு, 6GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 9.990

 

Tecno Spark 10C

இந்த மொபைல் 6.6 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 4G மொபைலில் 16MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரியோடு, 8GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 9.999

 

Moto G13

இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 4G மொபைலில் 50MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரியோடு, 4GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 9.999

 

Nokia C32

இந்த மொபைல் 6.51 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 4G மொபைலில் 50MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரியோடு, 4GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 256GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 8.999

 

I Kall S1 ProI Kall S1 Plus

இந்த இரண்டு மொபைல்களும் 6.8 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறன. இந்த 4G மொபைல்களில் 13MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 6000mAh பேட்டரியோடு, 6GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைல்களின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் இன்னும் 128GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 9,990

 

I Kall Z19 Pro Ultra & I Kall Z19 Ultra Plus

இந்த  இரண்டு மொபைல்களின் பெயர் மட்டுமே வெவ்வேறாக இருக்கிறது. மற்றபடி இரண்டும்  6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. இந்த 4G மொபைல்களில் 13MP முதன்மை கேமராவும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரியோடு, 6GB ரேம் உடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைல்களின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

விலை:  ரூ. 8.799

 

The post ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் லேட்டஸ்ட் மொபைல்கள் first appeared on .

]]>
மோட்டோரோலா மோட்டோ ஜி 13 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது https://www.91mobiles.com/tamil/motorola_moto_g13_india_launch_date/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola_moto_g13_india_launch_date Fri, 24 Mar 2023 10:58:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7068 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட Motorola Moto G13 மொபைல் ,  மார்ச் 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மொபைலானது இந்திய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart  மூலம் வெளி வருகிறத. இதற்கென ஃப்ளிப்கார்ட்டில்  Moto G13 மொபைலுக்கென ஒரு விளம்பரப் பக்கத்தை  அமைத்துள்ளது. Moto G13 ஆனது Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. இந்தியாவில், இது ஒரு 4ஜிபி/128ஜிபி உள்ளமைவு மற்றும் இரண்டு வண்ணங்களில் வரும் – […]

The post மோட்டோரோலா மோட்டோ ஜி 13 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது first appeared on .

]]>

Highlights

  • Motorola Moto G13 மொபைல் மார்ச் 29 அன்று Flipkartல் வெளியாகிறது.
  • இந்த Moto G13 ஆனது Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது
  • லாவெண்டர் ப்ளூ மற்றும் மேட் கோல்  என இரண்டு நிறங்களில் வெளியாகிறது

ஜனவரியில் அறிவிக்கப்பட்ட Motorola Moto G13 மொபைல் ,  மார்ச் 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மொபைலானது இந்திய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart  மூலம் வெளி வருகிறத. இதற்கென ஃப்ளிப்கார்ட்டில்  Moto G13 மொபைலுக்கென ஒரு விளம்பரப் பக்கத்தை  அமைத்துள்ளது.

Moto G13 ஆனது Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. இந்தியாவில், இது ஒரு 4ஜிபி/128ஜிபி உள்ளமைவு மற்றும் இரண்டு வண்ணங்களில் வரும் – லாவெண்டர் ப்ளூ மற்றும் மேட் கோல்.

 

டிஸ்ப்ளே

Moto G13 ஆனது 6.5 அங்குல HD+ 90Hz IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. IP52 வாட்டர் ரிப்பலெண்ட் டிசைனில் வெளி வருகிறது.

கேமரா

Helio G85-இயங்கும் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP கேமராவைக் கொண்டுள்ளது, இதில் 2MP டெப்த் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்கள் இணைக்கப்பட்டுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 8MP கேமரா உள்ளது.

 

மெமரி

இந்த Motorola Moto G13 மொபைல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும். இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு பதிப்பான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் வருகிறது. அதுவும் எந்த வித ஸ்கின்னும் இன்றி ஸ்டாக் ஆண்ட்ராய்டாகவே வருவதால், ப்ளோட்வேர்கள், இடத்தை அடைக்கும் தேவையில்லாத ஆஃப்கள் எதுவும் இருக்காது.

கனெக்டிவிட்டி

Motorola Moto G13 இன் மற்ற சிறப்பம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் Dolby Atmos உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். இது IP52 என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் சேமிப்பக விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஒரு NFC சிப் ஆன்போர்டுடன் வருகிறது, ஆனால் அது சந்தை சார்ந்தது.

 

பேட்டரி

இதில் USB-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில்  வெளியாக இருக்கும் Moto G13 மொபைலோடு  10W ஃபாஸ்ட் சார்ஜை ஆதரிக்குமா? அல்லது 20W சார்ஜிங்கை ஆதரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

The post மோட்டோரோலா மோட்டோ ஜி 13 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது first appeared on .

]]>
பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! https://www.91mobiles.com/tamil/moto-intoduce-2-budget-mobiles/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-intoduce-2-budget-mobiles Wed, 25 Jan 2023 11:50:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5348 தற்போது ஆன்லைனில்  மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி13 டிஸ்பிளே அம்சங்கள் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும். கூடவே, 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் […]

The post பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! first appeared on .

]]>

Highlights

  • மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஆகிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது ஆன்லைனில்  மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி13 டிஸ்பிளே அம்சங்கள்

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும். கூடவே, 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி13 கேமரா

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி13 பேட்டரி

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். இதோடு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போன் நீல நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.


மோட்டோ ஜி23 டிஸ்பிளே

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே, இந்த போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் தரமான கேமரா வசதியுடன் வெளிவர இருக்கிறது.

மோட்டோ ஜி23 கேமரா

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே, செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி23 பேட்டரி

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கூடவே, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவர இருக்கிறது.

5ஜி ஆதரவு?

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மோட்டோ ஜி13,மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவு கிடையாது இல்லை எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன்கள் 4ஜி ஆதரவுடன் மட்டுமே அறிமுகமாகும். இருந்தபோதிலும் குறைந்த விலையில் இந்த போன்கள் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! first appeared on .

]]>