motorola edge 30 ultra https://www.91mobiles.com/tamil Tue, 08 Nov 2022 08:04:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 200MP கேமரா போனுக்கு ரூ 5000 தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-ultra-phone-with-200mp-camera-get-rs-5000-off-on-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-ultra-phone-with-200mp-camera-get-rs-5000-off-on-flipkart Tue, 08 Nov 2022 09:02:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3473 தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Moto Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 வரை […]

The post 200MP கேமரா போனுக்கு ரூ 5000 தள்ளுபடி! first appeared on .

]]>

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Moto Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 வரை விலைகுறைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

டிஸ்பிளே

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.67 அங்குல ஃபுல்எச்டி பிளஸ் pOLED curved டிஸ்பிளே வசதியோடு வெளியாகி இருக்கிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மோட்டோரோலா நிறுவனம் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 13,14 மற்றும் 15 நிச்சயமாகக் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோ நிறுவனம்.

கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 60MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், உலக அளவிலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போன் மாடலில் மட்டும் தான் இவ்வளவு பெரிய சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.


பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 50 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இதுதவிர, Dolby Atmos ஆதரவு, 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

The post 200MP கேமரா போனுக்கு ரூ 5000 தள்ளுபடி! first appeared on .

]]>
உலகின் முதல் 200MP கேமரா மொபைல்! https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-ultra-12-gb-variant-launched-in-india-price-specification-offers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-ultra-12-gb-variant-launched-in-india-price-specification-offers Fri, 21 Oct 2022 07:03:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3166 மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் எட்ஜ் 30 தொடரை லெனோவாவிற்கு சொந்தமான மோட்டரோலா நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ற மாடலின் புதிய 12 ஜிபி வேரியண்ட் மாடலை நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்.! இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் […]

The post உலகின் முதல் 200MP கேமரா மொபைல்! first appeared on .

]]>

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் எட்ஜ் 30 தொடரை லெனோவாவிற்கு சொந்தமான மோட்டரோலா நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ற மாடலின் புதிய 12 ஜிபி வேரியண்ட் மாடலை நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இருப்பினும், மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவில் உள்ள முக்கியமான சிறப்பம்சமே, இதில் உள்ள 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் தான்.! இந்தியாவிலும், உலக அளவிலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போன் மாடலில் மட்டும் தான் இவ்வளவு பெரிய சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.!

விலை?

முன்னதாக, மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஒரு 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, மோட்டோரோலா ட்விட்டரில் எட்ஜ் 30 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி வேரியண்ட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. லெனோவாவுக்குச் சொந்தமான நிறுவனம், இந்த சாதனத்தின் 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.56,999 அறிமுக விலையில் விற்பனை செய்கிறது. இந்த 12ஜிபி வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ.64,999 ஆகும்.

சலுகை

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா இதற்கு முன், ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையில் மட்டுமே கிடைத்தது. இதன் விலை ரூ.59,999 ஆகும். ஆனால் Flipkart இல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், நீங்கள் இந்த மொபைலை இப்போது இன்னும் குறைந்த விலையில் வாங்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், இதன் முழு சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா டிவைஸ் 6.67 அங்குல வளைந்த pOLED டிஸ்ப்ளேவுடன் 144Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR10+ ஐ ஆதரிக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 13,14 மற்றும் 15 நிச்சயமாகக் கிடைக்கும்.

The post உலகின் முதல் 200MP கேமரா மொபைல்! first appeared on .

]]>
அறிமுகமானது இந்தியாவின் முதல் 200MP கேமரா மொபைல் https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-ultra-with-200mp-camera-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-ultra-with-200mp-camera-launched-in-india Wed, 14 Sep 2022 05:56:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2286 Motorola Edge 30 Ultra என்ற புதிய மிரட்டலான பிளாக்ஷிப் போனை மோட்டோரோலா நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கேமரா பிரியர்களைக் கவர்ந்துள்ளது. காரணம், இந்தியாவில் 200 மெகா பிக்சல் கொண்ட கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தகவலைப் பார்க்கலாம். Motorola Edge 30 Ultra மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Motorola Edge 30 Ultra மற்றும் […]

The post அறிமுகமானது இந்தியாவின் முதல் 200MP கேமரா மொபைல் first appeared on .

]]>

Motorola Edge 30 Ultra என்ற புதிய மிரட்டலான பிளாக்ஷிப் போனை மோட்டோரோலா நிறுவனம் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கேமரா பிரியர்களைக் கவர்ந்துள்ளது. காரணம், இந்தியாவில் 200 மெகா பிக்சல் கொண்ட கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தகவலைப் பார்க்கலாம்.

Motorola Edge 30 Ultra

மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Motorola Edge 30 Ultra மற்றும் Motorola Edge 30 Fusion என்று இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் தரமான அம்சங்களுடன் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் மாடலை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

200MP கேமரா & 125W ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவின் முக்கிய சிறப்பம்சமாக, 200MP பிரைமரி கேமரா அனைவரின் கவனத்தையும் ஈற்றுள்ளது. இருப்பினும், இந்த புதிய Motorola Edge 30 Ultra சாதனத்தில் சூப்பர் ஃபாஸ்ட் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றொரு ஸ்பெஷாலிட்டியாக பார்க்கப்படுகிறது. இது 144Hz கொண்ட POLED டிஸ்பிளே உடன் வருகிறது. சரி, இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனைக்குக் கிடைக்கும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

விலை

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.54,999 ஆகும். இந்த சாதனம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். இது Interstellar Black மற்றும் Starlight White ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வழக்கம் போல, ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுடன் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 6.7 அங்குலம் கொண்ட 144 ஹெர்ட்ஸ் உடன் கூடிய முழு எச்டி+ தெளிவுத்திறனுடன் கூடிய pOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60MP செல்பி கேமரா உடன் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இந்த போனின் ரியர் கேமரா 200MP சாம்சங் HP1 பிரைமரி சென்சார் உடன், 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வருகிறது.

சிப் செட் & இயங்குதளம்

கேமரா மட்டுமல்ல. இதன் சிப்செட் கூட சிறப்பானது தான். Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX 4.0 இயங்குதளத்தில் இயக்குகிறது.

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது. உண்மையிலேயே, இந்த ஸ்மார்ட்போன் இன்றைய தேதியில் மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலாகும். உங்களுக்கு பெஸ்டான கேமரா வேண்டும் என்று விரும்புகிறீர்களானால், கட்டாயம் இந்த Motorola Edge 30 Ultra சாதனத்தைக் கவனிக்க மறக்காதீர்கள். இப்போதைக்கு இந்தியாவில் அதிக மெகா பிக்சல் கேமராவுடன் வெளிவந்திருக்கும் புது வரவு இது மட்டுமே.

The post அறிமுகமானது இந்தியாவின் முதல் 200MP கேமரா மொபைல் first appeared on .

]]>
அறிமுகமானது 200 MP கேமராவுடன் புதிய ஃப்ளாக்‌ஷிப் போன் https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-ultra-with-200-mp-camera-to-launch-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-ultra-with-200-mp-camera-to-launch-in-india-soon Fri, 09 Sep 2022 12:27:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2195 Motorola நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. Motorola Edge 30 Ultra என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்காக இந்திய ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்பதற்கான காரணம் என்று சொல்வதற்கு இதில் ஒன்றல்ல அதற்கும் மேலான சிறந்த விஷயங்கள் இருக்கிறது. இதில் முதலில் முக்கியமான அம்சம், இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ […]

The post அறிமுகமானது 200 MP கேமராவுடன் புதிய ஃப்ளாக்‌ஷிப் போன் first appeared on .

]]>

Motorola நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. Motorola Edge 30 Ultra என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்காக இந்திய ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்பதற்கான காரணம் என்று சொல்வதற்கு இதில் ஒன்றல்ல அதற்கும் மேலான சிறந்த விஷயங்கள் இருக்கிறது. இதில் முதலில் முக்கியமான அம்சம், இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த அல்டிமேட் சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சிறப்பான விஷயம், இது 200MP மெயின் கேமரா சென்சார் உடன் வருகிறது. இது இன்றுவரை எந்த ஃபோனிலும் காணப்படாத அதிகபட்ச மெகாபிக்சல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்த புதிய டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனின் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

விலை

வரவிருக்கும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ஆரம்ப விலை EUR 900 ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 72,100 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை மாடலின் விலை சற்று குறைவாக இருக்கும்.

சிறப்பம்சம்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 6.7 அங்குலம் கொண்ட 144 ஹெர்ட்ஸ் உடன் கூடிய Full HD Plus தெளிவுத்திறனுடன் கூடிய pOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60MP செல்பி கேமரா உடன் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் மிகச்சிறந்த வீடியோ கால் வசதியும், மிகச் சிறந்த செல்ஃபி புகைப்படங்களையும் இந்த போனில் எடுக்கலாம். இந்த போனின் ரியர் கேமரா 200MP சாம்சங் HP1 பிரைமரி சென்சார் உடன், 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வருகிறது. கேமராவைப் பொருத்தவரை இந்த போன் மிகச்சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிற அம்சங்கள்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX 4.0 இயங்குதளத்தில் இயக்குகிறது. Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது. உண்மையிலேயே, இந்த ஸ்மார்ட்போன் இன்றைய தேதியில் மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலாகும்.

The post அறிமுகமானது 200 MP கேமராவுடன் புதிய ஃப்ளாக்‌ஷிப் போன் first appeared on .

]]>