Motorola Razr+ 2023 https://www.91mobiles.com/tamil Thu, 20 Apr 2023 05:30:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Motorola Razr Pro, Razr Lite போல்டபிள் போன்களின் உலகளாவிய அறிமுக தேதி கசிந்தது. https://www.91mobiles.com/tamil/motorola-razr-pro-lite-global-launch-date-tipped/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-razr-pro-lite-global-launch-date-tipped Wed, 19 Apr 2023 05:34:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7636   மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Razr சீரிஸின் புதிய தலைமுறையை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான வதந்திகள் மற்றும் கசிவுகள், மோட்டோரோலா ரேஸ்ர் 2023 சீரிஸில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட போன்கள் இருக்குமெனத் தெரிவிக்கிறது. இந்த சீரிஸில் மூன்று போன்கள் இருக்கலாம். இவை Razr Pro, Razr Lite மற்றும் Razr 40 Ultra என்று கூறப்படுகிறது. ஒரு புதிய கசிவு இப்போது இந்த போல்டபிள் போன்கள் எப்போது வெளியாகலாம் என்று […]

The post Motorola Razr Pro, Razr Lite போல்டபிள் போன்களின் உலகளாவிய அறிமுக தேதி கசிந்தது. first appeared on .

]]>

Highlights

  • Motorola Razr Pro மற்றும் Lite ஆகியவை போல்டபிள் போன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது இந்த Razr போன்களின் வெளியீட்டு தேதி கசிந்துள்ளது.
  • Razr Pro பிரீமியம் போனாகவும், Razr Lite குறைந்தவிலையிலும் வெளியாகும்.

 

மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Razr சீரிஸின் புதிய தலைமுறையை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான வதந்திகள் மற்றும் கசிவுகள், மோட்டோரோலா ரேஸ்ர் 2023 சீரிஸில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட போன்கள் இருக்குமெனத் தெரிவிக்கிறது. இந்த சீரிஸில் மூன்று போன்கள் இருக்கலாம். இவை Razr Pro, Razr Lite மற்றும் Razr 40 Ultra என்று கூறப்படுகிறது. ஒரு புதிய கசிவு இப்போது இந்த போல்டபிள் போன்கள் எப்போது வெளியாகலாம் என்று தெரிவிக்கிறது.

டிப்ஸ்டர் மேக்ஸ் ஜாம்போரின் கூற்றுப்படி, Motorola Razr Pro மற்றும் Razr Lite ஸ்மார்ட்போன்கள் ஜூன் 1 ஆம் தேதி ஸ்பெயினின் மாட்ரிட்டில் (Madrid) உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். பெயர்கள் குறிப்பிடுவது போல, Razr Pro ஒரு பிரீமியம் போல்டபிள் போன் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் Razr Lite குறைந்தவிலை பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

Motorola Razr Pro, Razr Lite

Motorola Razr 2023 சீரிஸின் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் கசிவுகள் உள்ளன. Razr Lite இல் தொடங்கி, இது Samsung Galaxy Z Flip4 மற்றும் OPPO Find N2 போன்ற ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அறிவிப்புகள், அழைப்புகள் மற்றும் சில பயன்பாட்டுக்காக வெளிப்புறத்தில் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. அதன் கசிந்த ரெண்டர்கள் கவர் டிஸ்ப்ளேவுக்கு அடுத்ததாக இரட்டை கேமரா அமைப்பையும் காட்டுகின்றன. செல்ஃபிக்களுக்கான பஞ்ச்-ஹோல் கேமரா கட்அவுட்டுடன் உள்ளே இருக்கும் டிஸ்ப்ளே பெரியதாக இருக்கும்.

 

இந்த போல்டபிள் Razr Proவைப் பொறுத்தவரை, ஒரு பெரிய வெளிப்புற டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வெளிப்புற பேனலில் கிட்டத்தட்ட பாதியை எடுக்கும். இது OPPO Find N2 Flip இன் வெளிப்புற டிஸ்ப்ளேவை விட பெரியதாக இருக்கலாம். இது 3.2-இன்ச் அளவு உள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் ப்ரோவும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும். ஆனால் வதந்திகள், இதில் பஞ்ச்-ஹோலுக்குப் பதிலாக அண்டர் டிஸ்ப்ளே கேமராவாக இருக்கலாம் என்று கூறுகின்றன. ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை, எனவே இந்த தகவலைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு காத்திருப்பது நல்லது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இன்னும் உறுதியான தகவல் எதுவும் இல்லை.

வெளியீட்டு தேதி வதந்தி துல்லியமாக இருந்தால், மோட்டோரோலா ரேஸ்ர் ப்ரோ மற்றும் லைட் அறிமுகம் செய்ய இரண்டு மாதங்களுக்கும் குறைவான நேரமே உள்ளது. இதனால் இந்த போல்டபிள் போன்களைப் பற்றி வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியாகக்கூடும்.

 

Motorola Razr 2023 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.7 அங்குலம் (17.02 செமீ)
  • பின் கேமரா – 64 எம்.பி + 13 எம்.பி
  • செல்ஃபி கேமரா – 32 எம்.பி
  • பேட்டரி – 4000 mAh

 

The post Motorola Razr Pro, Razr Lite போல்டபிள் போன்களின் உலகளாவிய அறிமுக தேதி கசிந்தது. first appeared on .

]]>
Motorola Razr 40 Ultra (எ) Motorola Razr+ 2023 TDRA சான்றிதழைப் பெற்றது & மோனிகர் உறுதிப்படுத்தப்பட்டது https://www.91mobiles.com/tamil/motorola-razr-40-ultra-tdra-moniker-confirmed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-razr-40-ultra-tdra-moniker-confirmed Thu, 06 Apr 2023 09:01:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7384   மோட்டோரோலா தனது மோட்டோரோலா Razr+ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மொபைலை ஒரு நாட்டில் வெளியிடுவதற்குத் தேவையான சான்றிதழ்களை வாங்க ஆரம்பித்து இருப்பதைக் கொண்டு இந்த மொபைல் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி சமீபத்தில் சீன CQC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இது அதன் பேட்டரி திறன் மற்றும் வேகமான சார்ஜிங் திறனை வெளிப்படுத்தியது. இப்போது, ​​அதே மொபைல் TDRA சான்றிதழ் மற்றும் கனேடிய REL சான்றிதழ் […]

The post Motorola Razr 40 Ultra (எ) Motorola Razr+ 2023 TDRA சான்றிதழைப் பெற்றது & மோனிகர் உறுதிப்படுத்தப்பட்டது first appeared on .

]]>

Highlights

  • மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தையில் அறிமுகமாக் இருக்கிறது.
  • இது சீனா & கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மோட்டோரோலா ரேஸ்ர்+ 2023 ஆக அறிமுகம் செய்யப்படும்.
  • பல சான்றிதழ் இணையதளங்களின் மூலம் இவற்றின் மோனிகர்கள் மற்றும் சில விவரக்குறிப்புகள்  உறுதியாகி உள்ளன.

 

மோட்டோரோலா தனது மோட்டோரோலா Razr+ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மொபைலை ஒரு நாட்டில் வெளியிடுவதற்குத் தேவையான சான்றிதழ்களை வாங்க ஆரம்பித்து இருப்பதைக் கொண்டு இந்த மொபைல் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி சமீபத்தில் சீன CQC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இது அதன் பேட்டரி திறன் மற்றும் வேகமான சார்ஜிங் திறனை வெளிப்படுத்தியது. இப்போது, ​​அதே மொபைல் TDRA சான்றிதழ் மற்றும் கனேடிய REL சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. இதன் மூலம் இந்த மொபைல் வெளியீட்டுக்கான அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது.

மேலே உள்ள TDRA சான்றிதழிலும் REL சான்றிதழிலும் பார்த்தபடி, Motorola Razr+ 2023 மற்றும் Motorola Razr 40 Ultra ஆகிய இரண்டும் ஒரே மாதிரி எண்ணைக் கொண்டுள்ளன (Motorola XT2321-3 மற்றும் Motorola XT2321-1, எனவே அவை வெவ்வேறு பெயர்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இப்படி ஒரே மொபைல் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாடுகளில் வெளியாவது புதிதல்ல.  பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் பொதுவாக நடப்பதுதான்.

துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு சான்றிதழ் பட்டியல்களும் இந்த மொபைல்களின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதற்கு முன்பு CQC லிஸ்டிங்கில் Motorola Razr+ 2023 (Motorola XT2321-2 மாடல் எண்ணுடன்) மொபைல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.

இது தவிர, இந்த மொபைல் அதன் முந்தைய மாடலோடு ஒப்பிடும்போது சற்று அதிகமான பேட்டரி திறனைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது  3,640mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா மோனிகர் வெளிவருவது இதுவே முதல் முறை. மேலும் அதன் விவரக்குறிப்புகளைப் பற்றி குறைந்த தகவல்களே வெளியாகி உள்ளன. Motorola Razr+ 2023, சீனாவில் Q2, 2023 இன் போது வெளியிடப்படும் என வதந்தி பரவியுள்ளது. இதன்மூலம் Motorola Razr 40 Ultra பற்றிய அனைத்து விஷயங்களும் தானாகவே தெரிய வரும்.

மோட்டோரோலா ரேசர் 2023 முக்கிய விவரக்குறிப்புகள்

 

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • திரை – 6.7 அங்குலம் (17.02 செமீ)
  • பின் கேமரா – 64MP + 13MP
  • செல்ஃபி கேமரா – 32 எம்.பி
  • பேட்டரி – 4000 mAh

 

The post Motorola Razr 40 Ultra (எ) Motorola Razr+ 2023 TDRA சான்றிதழைப் பெற்றது & மோனிகர் உறுதிப்படுத்தப்பட்டது first appeared on .

]]>