movies https://www.91mobiles.com/tamil Mon, 19 Dec 2022 12:16:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அவதார் வேடம் அணிந்த தியேட்டர் ஊழியர்கள் https://www.91mobiles.com/tamil/theater-staff-who-became-avatar-characters-in-puduva/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=theater-staff-who-became-avatar-characters-in-puduva Mon, 19 Dec 2022 12:34:00 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4399 அவதார் படம் 13 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. அவதார் தி வே ஆப் வாட்டர் அவதார் தி வே ஆப் வாட்டர் 3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட […]

The post அவதார் வேடம் அணிந்த தியேட்டர் ஊழியர்கள் first appeared on .

]]>

அவதார் படம் 13 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. அவதார் தி வே ஆப் வாட்டர் அவதார் தி வே ஆப் வாட்டர் 3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் நேற்று முன் தினம் வெளியானது. உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

புதுவையிலும் அவதார் திரைப்படம் சில திரையரங்குகளில் வெளியான நிலையில், புதுவை கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்குக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவதார் போல் வேடம் அணிந்துள்ள தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

சாதனை

இந்நிலையில் இந்தியாவில் ‘அவதார் 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. மேலும், ‘அவெஞ்சர்ஸ்’ படத்திற்கு பின் இந்தியாவில் பெரிய ஓபனர் என்ற இடத்தையும் ‘அவதார் 2’ பிடித்ததுள்ளது.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் ‘ராங்கி’. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சரவணன் கூறும்போது, ”முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தினோம். ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் சர்வதேச குழுக்கள் தொடர்பு இருப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தோம். இதனால் வெளிநாடுகள் சம்பந்தமான காட்சிகள் இருந்தன. அந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு விட்டது” என்றார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அவதார் வேடம் அணிந்த தியேட்டர் ஊழியர்கள் first appeared on .

]]>
OTT – இந்த வார ரிலீஸ்! ப்ரின்ஸ், படவெட்டு, மீட் க்யூட்.. மற்றும் பல.. https://www.91mobiles.com/tamil/sivakarthikeyan-s-prince-kantara-and-more-films-are-releasing-on-ott-this-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sivakarthikeyan-s-prince-kantara-and-more-films-are-releasing-on-ott-this-week Fri, 25 Nov 2022 07:33:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3900 திரையரங்குகளைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் முக்கியமான நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்தும், அதில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றது எது எனவும் இப்போது பார்க்கலாம். சர்ப்ரைஸ் அமேசான் ப்ரைமில் காந்தாரா அமேசான் ப்ரைமில் காந்தாரா செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான கன்னட திரைப்படம் காந்தாரா. ரிஷப் […]

The post OTT – இந்த வார ரிலீஸ்! ப்ரின்ஸ், படவெட்டு, மீட் க்யூட்.. மற்றும் பல.. first appeared on .

]]>
திரையரங்குகளைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் முக்கியமான நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்தும், அதில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றது எது எனவும் இப்போது பார்க்கலாம்.

சர்ப்ரைஸ்

அமேசான் ப்ரைமில் காந்தாரா அமேசான் ப்ரைமில் காந்தாரா செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான கன்னட திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரித்திருந்தது. மொத்தமே 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கெத்து காட்டியுள்ளது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காந்தாரா, நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டர் ஆடியன்ஸை போலவே ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது காந்தாரா. முதல் நாளிலேயே நல்ல ரீச் கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் காந்தாரா பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்

இந்த வாரம் கோலிவுட் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி வெளியான பிரின்ஸ், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நெகட்டிவான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் தடுமாறிய இந்தப் படம், ஓடிடி ரிலீஸுக்கு தான் செட்டாகும் என ரசிகர்கள் கூறியிருந்தனர். அதனால், இன்று (நவ 25) ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிரின்ஸ், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

மலையாளம்

மலையாள சினிமா ரசிகர்களுக்கு நிவின் பாலியின் படவெட்டு திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (நவ 25) முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லிஜு கிருஷ்ணா இயக்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. அதனால், ஓடிடி ரசிகர்களிடமும் படவெட்டு திரைப்படம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியில் நடித்த ‘சுப்’ திரைப்படமும் ஓடிடியில் இன்று வெளியாகிறது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சுப் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படம், இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

தெலுங்கு

தெலுங்கில் ‘மீட் க்யூட்’ திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சத்யராஜ், ரோகிணி, வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மீட் க்யூட் ஆந்தாலஜி ஜானரில் உருவாகியுள்ளது. மீட் க்யூட் திரைப்படம் இன்று (நவ 25) சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது.

இந்தி

அதேபோல், இந்தியில் காக்கி தி பீகார் சாப்டர் (Khakee The Bihar Chapter) என்ற வெப் சீரிஸ் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 2004ம் ஆண்டு பீஹாரில் அமித் லோதா என்ற ஐபிஎஸ் ஆபிஸருக்கும், சந்தன் என்ற லோக்கல் மாபியாவுக்கும் இடையே நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஹாலிவுட்

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ‘The Swimmers’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் சகோதரிகள் இருவர் பங்கேற்றனர். அவர்களின் பயணத்தை விவரிக்கும் விதமாக உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல், ‘The Lost Patient’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகிறது.

The post OTT – இந்த வார ரிலீஸ்! ப்ரின்ஸ், படவெட்டு, மீட் க்யூட்.. மற்றும் பல.. first appeared on .

]]>
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள்! https://www.91mobiles.com/tamil/movies-to-release-on-diwali-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=movies-to-release-on-diwali-2022 Thu, 13 Oct 2022 11:42:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3007 மற்ற நாட்களை விட தீபாவளி ரிலீஸ் கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இந்திய படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இன்னும் ஆதரவு குறையாத காரணத்தால் தீபாவளிக்கும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படம் திரையிடப் பட்டு இருக்கும். மீதமுள்ள அரங்குக்ளை புதிய படங்கள் […]

The post தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள்! first appeared on .

]]>
மற்ற நாட்களை விட தீபாவளி ரிலீஸ் கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இந்திய படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இன்னும் ஆதரவு குறையாத காரணத்தால் தீபாவளிக்கும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் படம் திரையிடப் பட்டு இருக்கும். மீதமுள்ள அரங்குக்ளை புதிய படங்கள் பகிர்ந்து கொள்ளப் போகின்றன.

சர்தார் – தமிழ் : (அக்.21)

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்திருக்கும் படம், ‘சர்தார்’. கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’, செப்டம்பரில் ‘பொன்னியின் செல்வன்’, இப்போது அக்டோபரில் சர்தார். மொத்தத்தில் கார்த்தி ‘கெத்து’ காட்டுகிறார். அப்பா – மகன் என கார்த்தி டபுள் ஆக்‌ஷனில் நடித்திருப்பது இதன் ஸ்பெஷல். ஸ்பை த்ரில்லராக உருவாகி இருக்கிறது.

பிரின்ஸ் – தமிழ் : (அக்.21)

சிவகார்த்திகேயன் படம். முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு இவரின் படம் வெளியாகிறது. டோலிவுட்டில் ப்ளாக்பஸ்டரான ‘ஜதிரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியிருக்கும் படம் இது. ஜாலியான காமெடி லவ் ஸ்டோரி. வெளிநாட்டு நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் – தெலுங்கு பைலிங்குவலாக உருவாகியிருக்கிறது.

ஒரி தேவுடா – தெலுங்கு : (அக்.21)

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தமிழில் இயக்கிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துதான் இந்தப் படத்தையும் இயக்கி இருக்கிறார். விஷ்வாக் சென், மிதிலா பால்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி நடித்த கேமியோ ரோலில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.

மான்ஸ்டர் – மலையாளம் : (அக்.21)

மாதம் ஒரு படம் என டாப் கியரில் புயலென இயங்கிக்கொண்டிருக்கிறார், மோகன்லால். `புலி முருகன்’ படத்தின் இயக்குநர் வைஷாக் இயக்கியிருக்கும் படம் இது. த்ரில்லர் வகையில் உருவாகி இருக்கும் இதில் லக்கி சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், மோகன்லால்.

படவெட்டு – மலையாளம் : (அக்.21)

நிவின் பாலி, அதிதி பாலன், மீரா ஜாஸ்மின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கும் படம், ‘படவெட்டு’. ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் உருவாகும் இப்படத்திற்கு ‘96’ இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

ராம் சேது – இந்தி : (அக்.25)

இயக்குநர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் இது. ஜாக்குலின் பெர்ணான்டஸ், தெலுங்கு நடிகர் சத்யதேவ், நாசர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சி நிபுணராக வரும் அக்‌ஷய், ராமர் பாலம் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் ஒரு அட்வெஞ்சர் படமாக உருவாகி இருக்கிறது.

தேங்க் காட் – இந்தி : (அக்.24)

அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கும் ஃபேன்டஸி காமெடி படமே இந்த ‘தேங்க் காட்’.

இதில் எது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

The post தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள்! first appeared on .

]]>
அதிசயம்! ஆச்சரியம்! https://www.91mobiles.com/tamil/top-heros-movie-shooting-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-heros-movie-shooting-update Wed, 24 Aug 2022 09:35:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1794 ரஜினி, கமல், ஷாரூக்கான், விஜய் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் சென்னையில் நடக்கின்றன. வழக்கமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் செட்டுக்குள்ளேயே எடுத்து முடிக்கப்படும். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான `தர்பார்’, `அண்ணாத்த’ படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்தன. அதிலும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஒரே மொத்தப் படத்தையும் செட்டுக்குள்ளேயே எடுத்து வந்துவிடுவார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக, ரஜினி – நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகே படப்பிடிப்பு நடந்துவருகிறது. ரஜினி பங்கேற்று […]

The post அதிசயம்! ஆச்சரியம்! first appeared on .

]]>

ரஜினி, கமல், ஷாரூக்கான், விஜய் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் சென்னையில் நடக்கின்றன.

வழக்கமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் செட்டுக்குள்ளேயே எடுத்து முடிக்கப்படும். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான `தர்பார்’, `அண்ணாத்த’ படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்தன. அதிலும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஒரே மொத்தப் படத்தையும் செட்டுக்குள்ளேயே எடுத்து வந்துவிடுவார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக, ரஜினி – நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகே படப்பிடிப்பு நடந்துவருகிறது. ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். பனையூரிலும் செட் அமைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கமல், ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. சில மாதங்களுக்கு முன்னர், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகளின் காரணமாக அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் கமல், ஷங்கர் இருவரும் வெவ்வேறு படங்களுக்குப் பணியாற்றப் போய்விட்டனர். சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட வெற்றிவிழாவின் போதுதான் உதயநிதி, லைகாவின் சுபாஷ்கரனிடம் ‘இந்தியன்2’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிப் பேசினார்.

இந்நிலையில்தான் ‘இந்தியன்2’-ல் நடித்த கமல், காஜல் அகர்வால் உட்பட படத்தின் நடிகர் நடிகர்களிடம் மீண்டும் தேதிகள் கேட்கப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நாளை ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பழைமை வாய்ந்த கட்டடத்தில்தான் ‘இந்தியன்2’ நாளை காலை ஆரம்பிக்கிறது. பிரமாண்டமான பூஜைகள் எதுவுமின்றி நேரடியாக படப்பிடிப்பு நடக்கிறது. கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். வருகிற 2-ம் தேதிதான் அவர் சென்னை வருகிறார். அதன்பின், படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இன்னொரு ஆச்சரியம், அட்லீ- ஷாரூக்கான் காம்போவின் ‘ஜவான்’ படப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் நேற்று தொடங்கியது. அங்கே வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். ஷாரூக்கான் நடிக்கும் காட்சிகள் சென்னையில் தொடர்ந்து இருபது நாள்கள் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக (பவுன்சர்களின் கூட்டம்) உள்ளது.

இதற்கிடையே விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அடுத்த ஷெட்யூல் மீண்டும் சென்னையில் நடக்க இருக்கிறது.

முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடப்பதால், பெஃப்சி தொழிலாளர்கள் மனங்கள் குளிர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

The post அதிசயம்! ஆச்சரியம்! first appeared on .

]]>