nord CE 3 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 15:50:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மிட்ரேஞ்ச் விலையில் ஒன்ப்ளஸில் இருந்து இன்னொரு போன்! https://www.91mobiles.com/tamil/oneplus-nord-ce-3-5g-expected-launch-date-in-india-specifications-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-nord-ce-3-5g-expected-launch-date-in-india-specifications-price Mon, 06 Mar 2023 06:00:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6241 கடந்த வாரம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தி இருந்தது. ஏனென்றால் இது ரூ.18,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.   டிஸ்பிளே டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் (@ஆன்லீக்ஸ்) வழியாக கிடைத்த தகவல்களின்படி, மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் வரும் ஒன்பிளஸ் […]

The post மிட்ரேஞ்ச் விலையில் ஒன்ப்ளஸில் இருந்து இன்னொரு போன்! first appeared on .

]]>

Highlights

  • ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.
  • புதிய ஒன்பிளஸ் போன் ரூ.24,000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தி இருந்தது. ஏனென்றால் இது ரூ.18,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

 

டிஸ்பிளே

டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் (@ஆன்லீக்ஸ்) வழியாக கிடைத்த தகவல்களின்படி, மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.72 அங்குல ஃபுல் எச்டி+ அமோஎல்இடி (FHD+ AMOLED) டிஸ்ப்ளே இருக்கும்.

 

ஸ்டோரேஜ் மற்றும் ப்ராசஸர்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனானது 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைந்து ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் (Octa-core Snapdragon 782G chipset) மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

OnePlus Nord CE 3 கேமரா கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 மாடலில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கதத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் டிசைனில் 16எம்பி செல்ஃபி கேமரா இடம்பெறலாம்.

 

பேட்டரி

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும், அது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கனெக்டிவிட்டி

இதுதவிர டூயல்-பேண்ட் வைஃபை, 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பிஐ டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் இடம்பெறலாம்.

விலை

பெரும்பாலும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மாடலானது ரூ.25,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாகவே அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் ரூ.24,999 ஆக இருக்கலாம். இது 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலையாக இருக்கலாம்.

 

வெளியீடு

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு 2023 ஆம் ஆண்டின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்கு இடையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து எந்த விதமான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால்,  குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ஜூலை 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.

The post மிட்ரேஞ்ச் விலையில் ஒன்ப்ளஸில் இருந்து இன்னொரு போன்! first appeared on .

]]>
இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் நார்ட் 3 அம்சங்கள்! https://www.91mobiles.com/tamil/oneplus-nord-3-specifications-leaked-online-with-1-5k-amoled-display-and-100w-fast-charging/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-nord-3-specifications-leaked-online-with-1-5k-amoled-display-and-100w-fast-charging Wed, 01 Feb 2023 04:49:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5424 அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இதன் சில முக்கிய அம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. OnePlus நிறுவனத்திடம் இருந்து வெளிவரத் தயாராகும் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மொபைலில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.   அறிமுகம் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus 11 […]

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் நார்ட் 3 அம்சங்கள்! first appeared on .

]]>
Highlights

  • குறைந்த விலையில் ஒன்ப்ளஸ் போனை வாங்க நினைப்பவர்களுக்கென வெளியாகும் சீரிஸ்தான்  ‘நார்ட்’.
  • ஒன்ப்ளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் பற்றிய ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இதன் சில முக்கிய அம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இதன் சில முக்கிய அம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. OnePlus நிறுவனத்திடம் இருந்து வெளிவரத் தயாராகும் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மொபைலில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

 

அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகிய மாடல்களை வரும் வாரத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குப் பின், நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆகிய இரண்டு நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 11 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, OnePlus Nord 3 விபரங்கள் மற்றும் ரெண்டர் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

 

சிப்செட்

இதன்படி, ஒன்ப்ளஸ் வெளியிடவிருக்கும் புதிய OnePlus Nord 3 மாடல், கடந்த ஆண்டு வெளியான OnePlus Nord 2T மாடலின் வாரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது MediaTek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

திரை

OnePlus Nord 3 மொபைல் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K தெளிவுத்திறன் கொண்ட 6.74 அங்குல AMOLED டிஸ்ப்ளேவை வழங்கும். ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் இன் கீழ் உயர் தெளிவுத்திறன் டிஸ்ப்ளே இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது தெளிவாகிறது.

கேமரா

அதேபோல், இந்த போனின் லீக்கான ஸ்கெட்ச்சிங்க் படி, இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் கேமரா அமைப்பு Nord 2T போன்றே தெரிகிறது. இந்த போனின் பிரைமரி கேமரா விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இது 64MP ஆம்னிவிஷன் சென்சார் அல்லது 50MP Sony IMX890 சென்சாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP லென்ஸ் இணைக்கப்படலாம் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது.

 

பேட்டரி

OnePlus Nord 3 ஆனது 5000mAh பேட்டரியை 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட முதல் Nord பிராண்டட் ஸ்மார்ட்போனும் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. OnePlus Nord 2 மற்றும் OnePlus Nord 2T ஆகியவை முறையே 65W மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் மட்டும் வருகிறது.

 

இயங்குதளம்

அதேபோல், இந்த ஒன்பிளஸ் நார்ட் 3 மொபைல் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 13 உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பிராண்டிற்கு பிரத்தியேகமான அலெர்ட் ஸ்லைடர் பட்டனையும் நார்ட் டிவைஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 1.5K AMOLED டிஸ்பிளே மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது என்றால், இந்த போனை வாங்க மக்கள்  அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் நார்ட் 3 அம்சங்கள்! first appeared on .

]]>
108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் 5ஜி போன் வர இருக்கிறது! https://www.91mobiles.com/tamil/oneplus-nord-ce-3-5g-phone-with-108mp-rear-camera-will-be-launched-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-nord-ce-3-5g-phone-with-108mp-rear-camera-will-be-launched-soon Thu, 01 Dec 2022 06:29:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4013 108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் தரப்பில் இருந்து ஒரு 5ஜி போன் வெளியாக இருக்கிறது! ஷாவ்மி, விவோ நிறுவனங்களை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் குறைந்த விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் […]

The post 108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் 5ஜி போன் வர இருக்கிறது! first appeared on .

]]>

108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் தரப்பில் இருந்து ஒரு 5ஜி போன் வெளியாக இருக்கிறது!

ஷாவ்மி, விவோ நிறுவனங்களை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் குறைந்த விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சிப்செட்

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறனை வழங்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும்.

ஸ்டோரேஜ் வசதி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது.

டிஸ்பிளே

இந்த புதிய ஒன்பிளஸ் போன் 6.7 அங்குல ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

பாஸ்ட் சார்ஜிங்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப் பட்டு இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். இது தவிர பாதுகாப்புக்கு என கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கும்.

கனெக்டிவிட்டி

இது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனத் தெரிவந்துள்ளது. இது மக்களிடையே இந்த மொபைலைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது.

The post 108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் 5ஜி போன் வர இருக்கிறது! first appeared on .

]]>
பட்ஜெட்போனாக வருகிறதா ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி? https://www.91mobiles.com/tamil/oneplus-launching-new-5g-smartphone-in-india-named-nord-ce-3-priced-under-rs-25000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-launching-new-5g-smartphone-in-india-named-nord-ce-3-priced-under-rs-25000 Thu, 10 Nov 2022 11:53:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3542 ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து போன் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனமும் தொடர்ந்து ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus Nord CE 3 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரு ஒன்ப்ளஸ் பிராண்டில், […]

The post பட்ஜெட்போனாக வருகிறதா ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி? first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து போன் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனமும் தொடர்ந்து ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus Nord CE 3 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரு ஒன்ப்ளஸ் பிராண்டில், பட்ஜெட் விலையில் 5ஜி போனை வாங்க விரும்புபவர்கள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போன் அறிமுகமாகும் வரை காத்திருக்கலாம்.

அம்சங்கள்

ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனின் சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். இந்த போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வழங்கப்படும் எனத் தெரிகிறது.

டிஸ்பிளே

6.7 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன். ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும்.

சார்ஜிங் வசதி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும்67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

விலை

இணையத்தில் கசிந்த தகவலின்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-என்ற விலையில் அறிமுகமாகலாம்.

The post பட்ஜெட்போனாக வருகிறதா ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி? first appeared on .

]]>