Ola S1 air https://www.91mobiles.com/tamil Tue, 02 May 2023 10:53:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? https://www.91mobiles.com/tamil/ola-electric-new-product-launch-february-9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-electric-new-product-launch-february-9 Fri, 03 Feb 2023 08:34:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5538 இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.   விலை இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 […]

The post குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? first appeared on .

]]>

Highlights

  • ஓலா நிறுவனம் வரும் வரும் பிப்ரவரி 9ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • அது ஓலாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

 

விலை

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 84,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,09,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,39,999 ரூபாய் ஆகவும் உள்ளது

அறிவிப்பு

இந்த சூழலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 9ம் தேதி மதியம் 2 மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.

 

குறைந்த விலை ஸ்கூட்டர்

அது என்ன அறிவிப்பு என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் ஒன்றை பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளதை வைத்து பார்க்கையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அது மிகவும் விலை குறைவானதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. இதைக்காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்யலாம்.

எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையில் ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பெட்ரோல் ஸ்கூட்டரையும் ஒப்பீட்டிற்கு எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைதான் அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 9ம் தேதி மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறக்கலாம். எனவே வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் என்ன அறிவிப்பை வெளியிட போகிறது? என்ன தயாரிப்பை களத்தில் இறக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறதா ஓலா? first appeared on .

]]>
2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! https://www.91mobiles.com/tamil/best-electric-scooter-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-electric-scooter-in-2022 Tue, 13 Dec 2022 09:36:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4264 இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம். இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் […]

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் பகுதிகளில் வாழும் பலரும் ஸ்கூட்டர்களை தங்கள் தின பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் நாளுக்கு நாள் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களைக் கவர பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பிராண்டில் ஸ்கூட்டர்களை களம் இறக்கி வருகின்றனர்.

ஓலா எஸ்1 ஏர்

ஓலா நிறுவனம் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த தீபாவளி சமயத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் தான் ஓலா எஸ்1 ஏர். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ84,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி இருந்தாலும் இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை மற்றும் டெலிவரி துவங்கவில்லை. தற்போது புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரியையும் 4.5 கிலோ வாட் மோட்டாரையும் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் எக்கோ மோடில் 101 கி.மீ ரேஞ்ச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி1 இ-ஸ்கூட்டர்

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி வரும் நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தன் கால் தடத்தைப் பதிக்கும் விதமாக விடா என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி அதில் வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.44 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. முழு சார்ஜில் 165 கி.மீ வரை ரேஞ்ச் கொடுக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட அம்சங்கள் மற்றும் அதிகமான சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன.

டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஐக்யூப் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேஸ், எஸ் மற்றும் எஸ்டி என மொத்தம் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் பவர் மற்றும் ரேஞ்ச் சிறப்பாக இருக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியன்டான எஸ்டி என்ற வேரியன்ட் முழு சார்ஜில் 145 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மில்டிபிள் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டது.

ஏத்தர் 450 ஜென்3

ஏத்தர் நிறுவனம் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. அதிக நம்பகத்தன்மை வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. இதன் பெர்ஃபாமென்ஸ் மட்டுமல்ல இதன் வடிவமைப்பு மற்றும் பில்டு குவாலிட்டியும் வெகு சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் 3ம் தலைமுறை ஸ்கூட்டர் இந்தாண்டு அறிமுகமானது. இது முந்தைய தலைமுறையைவிட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் ரேஞ்ச், அம்சங்கள், வெளிப்புற தோற்றம், உட்புறம் பயன்படுத்தப்பட்ட பாகங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு செம அப்டேட்டாக இருக்கிறது.

இருசக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் செக்மெண்டை மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிடித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஸ்கூட்டர் என்றாலே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் என்றநிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
இனி புக்கிங் செய்த உடனே டெலிவரி கிடைக்கும் – ஓலா அதிரடி! https://www.91mobiles.com/tamil/ola-electric-soon-to-start-same-day-delivery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-electric-soon-to-start-same-day-delivery Mon, 07 Nov 2022 08:32:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3427 ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் கொடுத்த 2-3 நாட்களில் டெலிவரியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனைக்கு என்று தனியாக எந்தவொரு டீலர்கள் மற்றும் ஷோரூம்களையும் தொடங்காமல் மின்சார இருசக்கர வாகன வர்த்தகத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம்-டூ-வாடிக்கையாளர் எனும் திட்டத்தின்கீழ் நிறுவனம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நேரடி டெலிவரி அதாவது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனமே எந்தவொரு தரகரின் ஈடுபாடின்றி நேரடியாக இருசக்கர வாகனங்களை டெலிவரி […]

The post இனி புக்கிங் செய்த உடனே டெலிவரி கிடைக்கும் – ஓலா அதிரடி! first appeared on .

]]>

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் கொடுத்த 2-3 நாட்களில் டெலிவரியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கு என்று தனியாக எந்தவொரு டீலர்கள் மற்றும் ஷோரூம்களையும் தொடங்காமல் மின்சார இருசக்கர வாகன வர்த்தகத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம்-டூ-வாடிக்கையாளர் எனும் திட்டத்தின்கீழ் நிறுவனம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

நேரடி டெலிவரி

அதாவது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனமே எந்தவொரு தரகரின் ஈடுபாடின்றி நேரடியாக இருசக்கர வாகனங்களை டெலிவரி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டெலிவரி சேவையை வேகப்படுத்தும் விதத்தில், புக்கிங் செய்யப்பட்ட 2-3 நாட்களுக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரிக் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அதே நாளில் டெலிவரி

இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார். அடுத்த வாரத்தில் இருந்து புக்கிங் கொடுக்கப்பட்ட அதே நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நாளில் டெலிவரி கொடுப்பது என்பது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

1,00,000 ஸ்கூட்டர்

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 1 லட்சமாவது யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டது. இதுமட்டுமில்லை, கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.

வேறு எந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரும் இந்த அளவு அதிக யூனிட்டுகளை ஒரே மாதத்தில் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் இந்த தரமான விற்பனை வளர்ச்சிக்கு விழாக் காலமும் ஓர் முக்கிய காரணமாக இருந்தது.

3 மாடல்கள்

அந்தவகையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நிறுவனம் தற்போது எஸ்1, எஸ்1 ப்ரோ மற்றும் புதுமுக அறிமுகமான எஸ்1 ஏர் ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் மிக மிக மலிவு விலைக் கொண்டதாக எஸ்1 ஏர் மாடல் இருக்கின்றது.
ரூ. 84,999 இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதேபோல் எஸ்1 ரூ. 99,999க்கும், எஸ்1 ப்ரோ ரூ. 1,39,999க்கும் விற்கப்பட்டு வருகின்றது. தற்போது எஸ்1 ஏர் எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரிசர்வேசன் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான விற்பனை வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டெலிவரி பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவை பிரதிபலிக்கும் வகையிலேயே புதிய எஸ்1 ஏர் மாடலையும் ஓலா எலெக்ட்ரிக் உருவாக்கி இருக்கிறது. அதேவேலையில், இரண்டைவிட எடை குறைந்ததாக இவ்வாகனம் இருக்கிறது.

ஓலா எஸ்1 எர் ஓர் முழு சார்ஜில் 101 கிமீ ரேஞ்ஜை வழங்கும். அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். அதேவேலையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.3 செகண்டுகளிலேயே இந்த வாகனம் தொட்டுவிடும். இத்தகைய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 ஏர் மாடலை ஓலா உருவாக்கியிருக்கிறது. இந்த ஸ்கூட்டரை தற்போது ரூ. 999 மட்டும் செலுத்தி ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்.

The post இனி புக்கிங் செய்த உடனே டெலிவரி கிடைக்கும் – ஓலா அதிரடி! first appeared on .

]]>
பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? https://www.91mobiles.com/tamil/ola-launches-new-s1-air-electric-scooter-and-move-os-3-full-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-launches-new-s1-air-electric-scooter-and-move-os-3-full-details Tue, 25 Oct 2022 05:46:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3178 ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓலா நிறுவனம் எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ அப்பொழுது முதல் இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது. ஓலா எஸ்1 ஏர் இன்று எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அந்நிறுவனம் […]

The post பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? first appeared on .

]]>

ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது மூவ் ஓஎஸ் 3 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய 2 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் எப்பொழுது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்குள் இறங்கியதோ அப்பொழுது முதல் இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகவிட்டது.

ஓலா எஸ்1 ஏர்

இன்று எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எஸ்1 ப்ரோவை விட சில மாறுதல்களுடன் குறைந்த விலையில் எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இந்த ஸ்கூட்டரையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தனது புதிய தயாரிப்பு ஒன்றை 22ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கோரமங்கலாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓலா நிறுவனம் மூவ் ஓஎஸ்3 -யை அறிமுகப்படுத்தலாம், குறைந்த விலையில் மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் எனப் பலர் பல எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் ஆலா நிறுவனத்தின் ஓலா மூவ் ஓஎஸ் 3 குறித்து விவரித்தார். இதில் முக்கிய அப்டேட்டாக. ப்ராக்ஸிமிட்டி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் ஸ்கூட்டர் அருகே வந்தால் அது தானாக அன் லாக் ஆகிவிடும். தள்ளிச் சென்றால் மீண்டும் லாக் ஆகிவிடும்.

வசதிகள்

இது போக இந்த ஸ்கூட்டரின் லைட்கள் ஸ்கூட்டரில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப மாறி மாறி எரியும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது போக இந்த ஓஎஸ்களில் விட்ஜெட் உள்ளிட்டபல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. இது போக இந்த ஸ்கூட்டரில் ஹைப்பர் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. இந்த சார்ஜரில் 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 50 கி.மீ வரை பயணிக்கலாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சார்ஜ் போட்டால் 3 கி.மீ வரை பயணிக்கலாம்.

இந்த மூவ் ஓஎஸ் 3 இபீட்டா வெர்ஷன் ன்று (அக்டோபர் 25ம் தேதி) வெளியிடப்படுகிறது. இது வரும் டிசம்பர் மாத துவங்கத்தில் மற்ற அனைத்து எஸ்1 ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது போக எஸ்1 ஸ்கூட்டர்களில் இனி சென்டர் ஸ்டாண்ட் மற்றும் லேடீஸ் ஃபுட் ரெஸ்ட் ஸ்டாண்ட் ஆகியவற்றைப் பொருத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரைவாங்கியவர்கள் இதைத் தனியாக வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இதை ஓலா ஆப் அல்லது வெப்சைட்டில் வாங்கலாம்.

புதிய வாடிக்கையாளர்களைக் கவர ஓலா நிறுவனம் இலவச ட்ரையலை அறிவித்துள்ளது. அதன்படி இந்த வாகனம் வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை வாங்கி 24 மணிநேரம் அவர்கள் டெஸ்ட் செய்து கொள்ளலாம். இது முதற்கட்டமாக 20 நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. நவம்பர் 7ம் தேதிக்குள் 40 நகரங்களுக்கு இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும்.

நிறம் & எடை

அடுத்த முக்கிய அப்டேட்டாக ஓலா நிறுவனம் தற்போது ஓலா எஸ்1 ஏர் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனேவ எஸ்1 ப்ரோ, எஸ்1 ஆகிய 2 ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் ஓலா நிறுவனம் தற்போது அதை விடக் குறைந்த விலையில் எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் எஸ்1 ஸ்கூட்டரின் அதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டர் 2 டோல் பாடி கலரில் கிடைக்கிறது. நியோ மிண்ட், ஜெட்பிளாக், கொரல் கிளாம், ப்ரோகிளியன் ஒயிட், லிக்யூட் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் எஸ்1 ப்ரோவை விட 25 கிலோ எடை குறைவானது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 99 கிலோ எடை கொண்டது தான். இதனால் இந்த ஸ்கூட்டரை வேகமாகவும், சுலபமாகவும் கையாள முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.

திறன்

இந்த எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 4.5 கி.லோ வாட் ஹப் மோட்டார், 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 4.3 நொடியில் 0-40 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. இந்த பைக் முழு சார்ஜில் முழுவதுமாக எக்கோ மோடில் பயணித்தால் 100 கி.மீ வரை ரேஞ்ச் தரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் 34 லிட்டர் இட வசதி இருக்கிறது.

விலை

இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கிவிட்டது. வெறும் 999 ரூபாய் கொடுத்து இந்த ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளமுடியும். இந்த ஸ்கூட்டருக்கான பர்ச்சேஸ் விண்டோ 2023 ஜனவரி மாதம் துவங்குகிறது. இதற்கான டெலிவரி 2023 ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

The post பட்ஜெட்விலையில் அறிமுகமாகிறதா ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? first appeared on .

]]>