oneplus 10R 5G https://www.91mobiles.com/tamil Tue, 11 Oct 2022 06:14:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சலுகை விலையில் ஒன்ப்ளஸ் ஆல்ரவுண்டர் போன் https://www.91mobiles.com/tamil/oneplus-10r-5g-gets-massive-discount-at-amazon-great-indian-festival-sale-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-10r-5g-gets-massive-discount-at-amazon-great-indian-festival-sale-2022 Tue, 11 Oct 2022 06:14:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2911 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, மக்களின் கவனம் இப்போது 5G ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன்கள் மீது தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் இப்போது கிடைக்கும் பெஸ்டான ஆல் ரவுண்டர் போன் என்றால் அது OnePlus 10R தான். அது தற்போது சலுகை விலையில் கிடைக்கிறது. சலுகை! அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival Sale) விற்பனையில் OnePlus 10R ஒரு […]

The post சலுகை விலையில் ஒன்ப்ளஸ் ஆல்ரவுண்டர் போன் first appeared on .

]]>

5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, மக்களின் கவனம் இப்போது 5G ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன்கள் மீது தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் இப்போது கிடைக்கும் பெஸ்டான ஆல் ரவுண்டர் போன் என்றால் அது OnePlus 10R தான். அது தற்போது சலுகை விலையில் கிடைக்கிறது.

சலுகை!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival Sale) விற்பனையில் OnePlus 10R ஒரு பெரிய தள்ளுபடியைப் பெறுகிறது. இந்த போன் தற்போது சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.38,999 ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. OnePlus 10R சார்ஜிங் கேமை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. காரணம், இது இரண்டு சார்ஜிங் மாடலுடன் வருகிறது.

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனா? பட்ஜெட் போனா?

OnePlus 10R ஒரு என்ட்ரி லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்று சொல்லாம். இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் 80W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் மொபைலை சுமார் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். அதேபோல், OnePlus 10R ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஒரு வேரியண்ட் மாடலையும் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 43,999 ஆகும்.

விலை குறைப்பு

இப்போது கிடைக்கும் சிறப்பு சலுகையின் காரணமாக இந்த OnePlus 10R ஸ்மார்ட்போனின் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட் போனை ரூ. 32,999 என்ற விலைக்கே வாங்க முடியும். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ. 36,999 என்ற விலைக்கு வாங்கலாம். உங்களின் கவனம் 150W சார்ஜிங் வேரியண்ட் மீது இருக்கிறது என்றால், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் தற்போதைய சலுகை விலை ரூ. 37,999 மட்டுமே.

இதை விட குறைந்த விலையில் OnePlus பிராண்டில் இருந்து ஒரு 5ஜி போனை நீங்கள் வாங்க நினைத்தால், OnePlus Nord 2T 5G மற்றும் OnePlus Nord CE 2 5G மாடலை தேர்வு செய்யலாம். இதன் விலை இப்போது சலுகையுடன் முறையே, ரூ. 28,999 மற்றும் ரூ.24,998 என்ற விலையில் கிடைக்கிறது. இவை இரண்டும் பட்ஜெட் செக்மென்ட் 5G ஸ்மார்ட்போன் மாடல்கள் என்பதை குறிப்பிடதக்கது. ஆனால், OnePlus 10R என்பது பிளாக்ஷிப் என்ட்ரி செஜ்மெட் என்பதை மறக்காதீர்கள்.

கவனிக்க வேண்டியவை நாம் பார்க்கும் OnePlus 10R மாடல்கள் பாரஸ்ட் க்ரீன், பிரைம் ப்ளூ மற்றும் சியேரா பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவு விலையில் வழங்க OnePlus சில வசதிகளை வழங்கவில்லை. உதாரணமாக, இது ஒரு பிளாஸ்டிக் பாடியைக் கொண்டுள்ளது. அதேபோல், ஒன்பிளஸ் அடையாளமாகத் திகழும் அலெர்ட் மோட் ஸ்லைடர் இதில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

மற்றபடி,OnePlus 10R இல் உள்ள அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தரமான சிப்செட், சிறப்பான டிஸ்பிளே அனுபவம், தெளிவான ஆடியோ மற்றும் வீடியோ அம்சம், அட்டகாசமான கேமரா அம்சம், 5ஜி ஆதரவு என்று சிறந்த அம்சங்கள் நிறையவே உள்ளன. அந்த வகையில் இது ஒரு ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்.

The post சலுகை விலையில் ஒன்ப்ளஸ் ஆல்ரவுண்டர் போன் first appeared on .

]]>
10R 5G மொபைலின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிடுகிறது ஒன்ப்ளஸ் https://www.91mobiles.com/tamil/oneplus-10r-5g-prime-blue-edition-teased-ahead-of-india-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-10r-5g-prime-blue-edition-teased-ahead-of-india-launch Thu, 15 Sep 2022 06:32:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2328 ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷனாக வெளியாகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலை சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது அந்நிறுவனம் இதே ஸ்மார்ட்போனின் பிரைம் புளூ எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட […]

The post 10R 5G மொபைலின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிடுகிறது ஒன்ப்ளஸ் first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷனாக வெளியாகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலை சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது அந்நிறுவனம் இதே ஸ்மார்ட்போனின் பிரைம் புளூ எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மற்ற இரு நிறங்களை போன்று இல்லாமல் புதிய பிரைம் புளூ எடிஷன் மாடலில் கிரேடியண்ட் பினிஷ் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் ஒரு புறத்தில் புளூ நிறத்தில் இருந்து மறுபுறத்திற்கு வைலட் நிறமாக மாறுகிறது. புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலில் 6.7 அங்குல FHD+AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 150 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இந்நிலையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.59 அங்குல Full HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதுதவிர, 1,080×2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும் முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை இந்த ஒன்பிளஸ் போன் கொண்டுள்ளது.

The post 10R 5G மொபைலின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிடுகிறது ஒன்ப்ளஸ் first appeared on .

]]>