oneplus 11R https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 09:00:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes Mon, 13 Mar 2023 07:29:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6791   சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக […]

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>

Highlights

  • இப்போது வரும் மொபைல்கள் பெரும்பாலும் வேகமான சார்ஜிங் திறனைக் கொண்டு வெளிவருகின்றன.
  • குறிப்பாக சில மொபைல்கள் 25 நிமிடங்களுக்குள் 100% முழுவதுமாக சார்ஜ் ஆகும் திறனைப் பெற்றுள்ளன.

 

சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஐக்யூ 11, ஒன்ப்ளஸ் 11ஆர், ஷாவ்மி 12 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் உள்ளன.

ஐக்கூ 11

ஐக்கூ 11 5G  (IQOO 11 5G) என்பது  ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78 அங்குல அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது.

ஒன்பிளஸ் 11ஆர்

ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது இந்த மொபைலை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த மொபைல் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே, இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் 19 நிமிடங்களில் இந்த மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.16 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.

ஷாவ்மி 12 ப்ரோ

ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 pro) ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகிறது. மேலும், இந்த மொபைலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

ஷாவ்மி 13 ப்ரோ

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மி 13 ப்ரோ மொபைல் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் ஆகும் திறனை கொண்டவை. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>
ஃப்ளாக்‌ஷிப் போனின் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் அறிமுகமான ஒன்ப்ளஸ் 11R! https://www.91mobiles.com/tamil/oneplus-11r-prices-in-india-rs-39999-rs-44999-sale-availability-specifications-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11r-prices-in-india-rs-39999-rs-44999-sale-availability-specifications-features Wed, 08 Feb 2023 05:31:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5638 ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நிகழ்வில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பின், நிறுவனம் அதன் புதிய சாதனமான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனத்தை அறிமுகம் செய்தது. முதல் முறையாக நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசையில், இதுதவிர மேக்னெட்டிக் கீபோர்ட் (OnePlus Magnetic Keyboard) மற்றும் ஒன்பிளஸ் ஸ்டைலோ (OnePlus Stylo) போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, OnePlus 11R களமிறக்கப்பட்டது. இதை பட்ஜெட் […]

The post ஃப்ளாக்‌ஷிப் போனின் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் அறிமுகமான ஒன்ப்ளஸ் 11R! first appeared on .

]]>

Highlights

  • ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம்,  நியூ டெல்லியில் நடந்த OnePlus Cloud 11 Event நிகழ்வில், புதிய ஒன்பிளஸ் 11R பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
  • இதனை ஒன்பிளஸ் நிறுவனம் ‘ஷேப் ஆஃப் பவர்’ என்று குறிப்பிட்டு அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நிகழ்வில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பின், நிறுவனம் அதன் புதிய சாதனமான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனத்தை அறிமுகம் செய்தது. முதல் முறையாக நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசையில், இதுதவிர மேக்னெட்டிக் கீபோர்ட் (OnePlus Magnetic Keyboard) மற்றும் ஒன்பிளஸ் ஸ்டைலோ (OnePlus Stylo) போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, OnePlus 11R களமிறக்கப்பட்டது. இதை பட்ஜெட் பிரியர்களுக்காக ஒன்ப்ளஸ் அறிமுகம் செய்துள்ளது.

 

திரை

OnePlus 11R ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் 6.7 அங்குல சூப்பர் ஃபிலியூட் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஸ்மூத் டிஸ்பிளே அனுபவம் கிடைக்கிறது.

 

சிப்செட்

இந்த மொபைல் Qualcomm Snapdragon 8+ Gen1 சிப்செட் உடன் வருகிறது. இந்த OnePlus 11R ஸ்மார்ட்போன் டிவைஸ் ஆனது Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மெமரி

இந்த மொபைல் 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பம் கிடையாது. OnePlus 11R ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Oxygen OS 13 ஸ்கின் உடன் இயங்குகிறது. பட்ஜெட் விலையில் உங்களுக்கு சிறந்த OS பயன்பாட்டை இந்த போன் வழங்குகிறது.

 

கேமரா

இந்த புதிய OnePlus 11R, அதன் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளன. இவை தவிர, இந்த போனின் முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் அம்சத்திற்காக 16MP செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் & பேட்டரி

OnePlus 11R ஆனது 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. OnePlus நிறுவனம் அறிமுகம் செய்த பிரீமியம் ஒன்பிளஸ் 11 5G மாடலிலும் இதே அம்சம் இருப்பது கவனிக்கத்தக்கது. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் OnePlus 11R ஸ்மார்ட்போனிலும் வழங்கியுள்ளது சிறப்பான விஷயமாகும்.

 

கனெக்டிவிட்டி

OnePlus 11R ஸ்மார்ட்போன் Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB Type-C போர்ட் போன்ற இதர அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அளவு 163.1×74.1×8.53 மிமீ மற்றும் 205 கிராம் எடை கொண்டது. இதில் சூப்பர் பாதுகாப்பிற்கான இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸ் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் பட்டனுடன் வழங்கப்பட்டுள்ளது.

 

விலை & முன்பதிவு

இது Sonic Black மற்றும் Galactic Silver ஆகிய 2 நிறங்களில் வருகிறது. இந்த OnePlus 11R ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மாடலின் விலை ரூ.39,999 மட்டுமே. இதன் 16GB + 256GB மாடலின் விலை ரூ. 44,999 மட்டுமே. OnePlus 11R ஸ்மார்ட்போனின் முன்பதிவு வரும் பிப்ரவரி 21, 2023 முதல் துவங்குகிறது. இதன் முதல் அறிமுகம் விற்பனை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28, 2023 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். பட்ஜெட் விலையில், பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் அம்சங்களுடன் மிகவும் நெருக்கமாக OnePlus 11R பயணிக்கிறது. உண்மையில் பட்ஜெட் விலையில் இந்த ஆண்டில் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக இந்த OnePlus 11R ஸ்மார்ட்போன் இருக்கும்.

The post ஃப்ளாக்‌ஷிப் போனின் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் அறிமுகமான ஒன்ப்ளஸ் 11R! first appeared on .

]]>
இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R https://www.91mobiles.com/tamil/oneplus-11r-specifications-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11r-specifications-leaked Tue, 03 Jan 2023 13:34:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4670   ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் – ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 11R அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் […]

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R first appeared on .

]]>

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் – ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 11R அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் சாதனம் என்றும் இது CPH2487 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மற்றொரு ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

ஒன்பிளஸ் 11R மாடலின் அண்டர்கிலாக் வெர்ஷன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ், ஹானர் 80 ப்ரோ, ஹானர் 80 GT மற்றும் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் போன்ற ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 11R மாடலில் 6.67 அங்குல டிஸ்ப்ளே, 2727×1240 பிக்சல் ரெசல்யூஷன், பின்புறம் 50MP சோனி IMX766 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

சீனாவில் நடைபெற்ற ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வில் ஷாவ்மி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீடு எடிஷன் மாடலில் 6.67 அங்குல FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை & விற்பனை

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் என 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 210 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 710 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

அம்சங்கள்

  • 6.67 அங்குல FHD+ 1080×2400 OLED டிஸ்ப்ளே
  • 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் அட்ரினோ 642L GPU
  • 6 ஜிபி – 128 ஜிபி மெமரி
  • 8 ஜிபி ரேம் – 128 ஜிபி மெமரி
  • 12 ஜிபி ரேம் – 256 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 14
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 108MP + 8MP + 2MP கேமராக்கள்
  • 16MP செல்ஃபி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • டால்பி அட்மோஸ்
  • 5 ஜி & டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை
  • ப்ளூடூத் 5.2
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R first appeared on .

]]>