
சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஐக்யூ 11, ஒன்ப்ளஸ் 11ஆர், ஷாவ்மி 12 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் உள்ளன.
ஐக்கூ 11
ஐக்கூ 11 5G (IQOO 11 5G) என்பது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78 அங்குல அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது.
ஒன்பிளஸ் 11ஆர்
ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது இந்த மொபைலை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த மொபைல் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே, இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் 19 நிமிடங்களில் இந்த மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.16 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.
ஷாவ்மி 12 ப்ரோ
ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 pro) ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகிறது. மேலும், இந்த மொபைலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

ஷாவ்மி 13 ப்ரோ
மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மி 13 ப்ரோ மொபைல் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் ஆகும் திறனை கொண்டவை. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.










