oppo a17 https://www.91mobiles.com/tamil Tue, 04 Oct 2022 13:06:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ஏ17 https://www.91mobiles.com/tamil/new-budget-oppo-a17-launched-in-india-specifications-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-budget-oppo-a17-launched-in-india-specifications-price Wed, 05 Oct 2022 05:05:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2788 ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ17 (Oppo A17) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. விலை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். டிஸ்பிளே ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதோடு 60ஹெர்ட்ஸ் […]

The post இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ஏ17 first appeared on .

]]>

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ17 (Oppo A17) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.

டிஸ்பிளே

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதோடு 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. இந்த போனில் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்து இருக்கிறது. இந்த போன் சன்லைட் ஆரஞ்ச் (sunlight orange), மிட்நைட் ப்ளாக் (Midnight black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த போன் லெதர் பினிஷ் உடன் வருகிறது. இது போனுக்கு ப்ரீமியம் லுக்கைக் கொடுக்கிறது.

ஸ்டோரேஜ்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு மைக்ரோ SD மெமரி கார்டை பயன்படுத்தி இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். அதேபோல் இதன் ரேம் மெமரியையும் ‘RAM Extention’ வசதி மூலம் இன்னும் 4ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

கேமரா

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாடல், வீடியோ, ரிங்டோன், நோட்டிபிகேஷன், அலாரம் என அனைத்தின் சத்தத்தையும் 200% வரை அதிகரித்துக் கொள்ளும் ‘Ultra-Volume Mode’ வசதியும் இந்த மொபைலில் இருக்கிறது.

பேட்டரி

புதிய ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ17.

குறை

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. தற்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 5ஜி போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

The post இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ஏ17 first appeared on .

]]>
லெதர் பேனலோடு வெளியான பட்ஜெட் போன்! https://www.91mobiles.com/tamil/oppo-a17-launched-with-50mp-primary-camera-leather-back-panel-and-more-price-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-a17-launched-with-50mp-primary-camera-leather-back-panel-and-more-price-details Tue, 27 Sep 2022 07:41:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2620 Oppo நிறுவனம் சமீபத்தில் Oppo A17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A16 ஸ்மார்ட்போனின் வாரிசாக Oppo A17 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமரா, விர்ச்சுவல் ரேம் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை விரிவாக பார்க்கலாம். டிஸ்ப்ளே Oppo A17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் தனித்துவமான கேமரா வடிவமைப்போடு வெளியாகி […]

The post லெதர் பேனலோடு வெளியான பட்ஜெட் போன்! first appeared on .

]]>

Oppo நிறுவனம் சமீபத்தில் Oppo A17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A16 ஸ்மார்ட்போனின் வாரிசாக Oppo A17 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமரா, விர்ச்சுவல் ரேம் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

Oppo A17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் தனித்துவமான கேமரா வடிவமைப்போடு வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது லெதர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ்-ஐக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது. இந்த மொபைலில் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சிப்செட்

Oppo A17 ஸ்மார்ட்போனாது ஒப்போ ஏ16 போன்றே ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஒப்போ ஏ17 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் இதன் சேமிப்பித்திறனை 1டிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.

கேமரா

Oppo A17 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 5 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. இந்த மொபைலில் IPX4 ஸ்பிளாஸ் எதிர்ப்பு, AI போர்ட்ரெய்ட், அல்ட்ரா-வால்யூம் மோட் மற்றும் மைக்ரோ USB போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1.1 ஆதரவு இதில் இருக்கிறது.

விலை

Oppo A17 ஸ்மார்ட்போன் தற்போது மலேசிய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A17 ஸ்மார்ட்போன் மலேசியாவில் RM599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.10,611 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை மலேசியாவின் ஒப்போவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்கலாம். இது லேக் ப்ளூ (lake blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight black) வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுகம் குறித்த அறிவிப்பை ஒப்போ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Microlens ஆதரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ எஃப்21எஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. Microlens ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக Oppo F21s Pro Series வெளியாகி இருக்கிறது. Oppo F21s Pro தொடரில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. Oppo F21s Pro ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது. 15x மற்றும் 30x மேக்னிஃபிகேஷன் திறன் கொண்ட மைக்ரோ லென்ஸ் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோலென்ஸ் ஆதரவோடு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

The post லெதர் பேனலோடு வெளியான பட்ஜெட் போன்! first appeared on .

]]>