Phantom X2 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 06:04:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஃபாண்டம் X2 போனை முன்பதிவு செய்தால் X3 போன் இலவசம்! வெறித்தனமான சலுகை! https://www.91mobiles.com/tamil/pre-book-tecno-phantom-x2-smartphone-today-and-get-phantom-x3-for-free-next-time/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pre-book-tecno-phantom-x2-smartphone-today-and-get-phantom-x3-for-free-next-time Mon, 02 Jan 2023 15:41:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4634 ஃபாண்டம் X2 போனை இப்போது முன்பதிவு செய்து வாங்கினால் X3 போன் இலவசம் என்னும் இதுவரை யாரும் தராத ஒரு ஆச்சரியமான சலுகையை டெக்னோ நிறுவனம் வழங்கி இருக்கிறது. சீனாவை சேர்ந்த முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ தன்னுடைய Tecno Phantom சீரிஸை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இது, டெக்னோ ஃபாண்டம் X2 (Tecno Phantom X2) மற்றும் டெக்னோ ஃபாண்டம் X2 ப்ரோ (Tecno Phantom X2 Pro) என்ற இரண்டு […]

The post ஃபாண்டம் X2 போனை முன்பதிவு செய்தால் X3 போன் இலவசம்! வெறித்தனமான சலுகை! first appeared on .

]]>

ஃபாண்டம் X2 போனை இப்போது முன்பதிவு செய்து வாங்கினால் X3 போன் இலவசம் என்னும் இதுவரை யாரும் தராத ஒரு ஆச்சரியமான சலுகையை டெக்னோ நிறுவனம் வழங்கி இருக்கிறது.

சீனாவை சேர்ந்த முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ தன்னுடைய Tecno Phantom சீரிஸை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இது, டெக்னோ ஃபாண்டம் X2 (Tecno Phantom X2) மற்றும் டெக்னோ ஃபாண்டம் X2 ப்ரோ (Tecno Phantom X2 Pro) என்ற இரண்டு ஸ்மார்ட் போன் மாடல்களைக் கொண்டுள்ளது. இந்த சீரிஸிற்கான முன்பதிவு இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. Pre-Order-களுக்கான இந்த முன்பதிவை அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் பிரத்தியேகமாக செய்துகொள்ளலாம். இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த போனை இப்போது முன்பதிவு செய்தால், அடுத்த X சீரிஸ் மாடலை நீங்கள் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். இப்போது இந்த போனினுடைய விலை மற்றும் அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

டிஸ்பிளே (Display)

இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் Full HD+ வளைந்த 6.8 அங்குல AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு (Corning Gorilla Glass Victus Protection) கொண்ட 120 Hz ரெப்ஃரெஷ் ரேட் (Refresh Rate) என்று அனைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.

ப்ராசசர் (Processor)

4nm அளவு கொண்ட ஆக்டாகோர் (Octacore) மீடியா டெக் 9000 டைமென்சிடி ப்ராசசரால் (MediaTek 9000 Dimensity Processor) உருவாக்கப்பட்டுள்ளதால் சிறப்பான செயல்திறனை இந்த ஸ்மார்ட் போன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த டைமென்சிடி 9000 சிப்செட் மூலம் Mali G710 GPU, 8GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.1 ஆகிய வசதிகள் ஒன்றிணைந்து கிடைக்கும். மேலும், இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்டு 12-ன் கீழ் இயங்கும் HiOS 12 மூலம் இயக்கப்படுகிறது.



கேமரா (Camera)

இந்த ஃபாண்டம் சீரிஸில் வரும் ஸ்மார்ட் போன்கள் மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் இரட்டை LED ஃப்ளாஷ்களைக் (Dual LED Flash) கொண்ட ஒரு செல்ஃபி கேமராவுடன் வருகிறது. மூன்று பின்பக்க கேமராக்களில் ஒரு OIS கொண்ட 64MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் (Ultra-wide Lens) மற்றும் 2MP சென்சார் ஆகியவை அடக்கம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களைப் பேசுவதற்கு 32MP கொண்ட முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா திரையில் மேலே நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி (Battery) & பாஸ்ட் சார்ஜிங் (Fast charging)

45W அதிவேக சார்ஜிங் (Fast Charging) மற்றும் 5160 mAh கொண்ட வெளியே எடுக்க முடியாத லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் (Lithium Polymer Battery) இந்த ஃபாண்டம் X2 வருகிறது. சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக டைப் C ஸ்லாட் (Type C slot) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5mm ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கரும் (Stereo Speaker) கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்கள்

இந்த அசத்தாலான போனின் மற்ற அம்சங்கள் 164.6 x 72.7 x 8.9 mm பரப்பளவும் 210 கிராம் எடையும் கொண்டுள்ள இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் ஸ்டார் டஸ்ட் க்ரே (Stardust Grey) என்று இரண்டு கலர் வேரியண்டுகளாகப் பளபளப்பான வெளிப்புற தோற்றத்துடன் வருகிறது. மேலும் இதில் டுவல் சிம் (Dual-SIM), 5G, WiFi 6 802.11, Bluetooth 5.3, NFC, GPS, திரையின் உள்ளேயே கைரேகை ஸ்கானர் (inbuilt fingerprint scanner) ஆகிய அம்சங்களும் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் போனுடன் வீகன் லெதர் கேஸும் (Vegan Leather Case) கொடுக்கப்படவுள்ளது.

அடுத்த ஸ்மார்ட்போன் இலவசம்!

இந்த X2 ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பித்தது. இந்த டெக்னோ ஃபாண்டம் X2 போனை, இப்போது முன்பதிவு செய்தால் – ஃபாண்டம் X3 அறிமுகம் செய்யப்படும்போது, இந்த X2 போனை இலவசமாக X3-க்கு மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இதுவரை எந்த நிறுவனமும் வழங்காத சலுகை தான். இந்த சலுகை எப்போதுவரை இருக்கும் என்று குறிப்பிடவில்லை. அதனால் வாய்ப்பை பயன்படுத்த நினைப்பவர்கள் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

The post ஃபாண்டம் X2 போனை முன்பதிவு செய்தால் X3 போன் இலவசம்! வெறித்தனமான சலுகை! first appeared on .

]]>
பேந்தம் சீரிஸில் இரண்டு ப்ரீமியம் போன்களை வெளியிட்டது டெக்னோ! https://www.91mobiles.com/tamil/tecno-phantom-x2-released/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-phantom-x2-released Wed, 07 Dec 2022 14:19:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4157 குறைந்த விலை போன்களுக்கு புகழ்பெற்ற டெக்னோ நிறுவனத்தில் இருந்து எக்கச்சக்கமான வசதிகளுடன் ஒன்றல்ல.. இரண்டு ப்ரீமியம் ரக போன்கள் இன்று (சற்று நேரத்திற்கு முன்பு) வெளியாகி இருக்கின்றன. இது பேந்தம் எக்ஸ்2 (Phantom X2) மற்றும் பேந்தம் எக்ஸ்2 ப்ரோ (Phantom X2 Pro) என்ற பெயர்களில் வெளியாகி இருக்கிறது. டிஸ்ப்ளே டெக்னோ Phantom X2 போனில் 6.8 அங்குல FHD+ curved Flexible AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 120Hz Refresh rate-ஐ கொண்டுள்ளது. 360Hz […]

The post பேந்தம் சீரிஸில் இரண்டு ப்ரீமியம் போன்களை வெளியிட்டது டெக்னோ! first appeared on .

]]>

குறைந்த விலை போன்களுக்கு புகழ்பெற்ற டெக்னோ நிறுவனத்தில் இருந்து எக்கச்சக்கமான வசதிகளுடன் ஒன்றல்ல.. இரண்டு ப்ரீமியம் ரக போன்கள் இன்று (சற்று நேரத்திற்கு முன்பு) வெளியாகி இருக்கின்றன. இது பேந்தம் எக்ஸ்2 (Phantom X2) மற்றும் பேந்தம் எக்ஸ்2 ப்ரோ (Phantom X2 Pro) என்ற பெயர்களில் வெளியாகி இருக்கிறது.

டிஸ்ப்ளே

டெக்னோ Phantom X2 போனில் 6.8 அங்குல FHD+ curved Flexible AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 120Hz Refresh rate-ஐ கொண்டுள்ளது. 360Hz Touch Sampling rateஐயும் கொண்டு இருக்கிறது. 1080×2400 பிக்ஸல் அடர்த்தியுடன் 93.5% Screen to Body Ratioவையும் கொண்டுள்ளது. Unibody double-curved டிசைனில், மிலிட்டரி கிரேடு Anti-Glare கிளாஸோடு வந்திருக்கும் இந்த மொபைல் Corning Gorilla Glass Victus பாதுகாப்பையும் பெற்றுள்ளது.

கேமரா

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனின் பின்பக்கத்தில் 64MP RGBW முதன்மை கேமராவும், இதனோடு 13MP மற்றும் 2MP கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. இதோடு Quad Flashlight ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical image stabilization) இருப்பது கூடுதல் சிறப்பு. இதனால் நடுக்கமில்லாத தெளிவான புகைப்படங்களையும், வீடியோவையும் எடுக்கலாம். முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 80.6டிகிரி ஆங்கிள் வியூவை கொண்டுள்ளது. இதோடு அட்ஜஸபிள் ஃப்ளாஷ்லைட்டும் இருக்கிறது. இதில் இருக்கும் கேமராக்களில் 4K வீடியோ, 10X zoom, AI Portrait| Super Night, Wide Selfie, HDR, Burst Shot, AI Scene Detection , Video Ultra Steady, Video Bokeh, Time-lapse, Slow Motion போன்ற வசதிகளும் இருக்கின்றன.

இயங்குதளம்

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போன் ஆண்ட்ராய்டு 12ன் மேல் HiOS 12 Skin கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது.

ப்ராஸசர்

இது ஒரு இரட்டை சிம் மொபைல் ஆகும். TSMC 4nm MediaTek Dimensity 9000 5G SoC சிப்செட் முதல் முதலாக இந்த போனிலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த 5ஜி ப்ராஸசர் 3.05GHz Arm Cortex X2 Ultra-core ப்ராஸசர் ஆகும். இது Arm Mali-G710 MC10 GPU-வைக் கொண்டுள்ளது. இது 11 5ஜி பேண்டுகளை support செய்கிறது. இதன் அந்துது (AnTuTu) ஸ்கோர் 10 லட்சம் ஆகும்.

மெமரி

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனில் 8 ஜிபி பிசிகல் ரேம், 5 ஜிபி மெமரி ப்யூஷன் ரேம் என மொத்தம் 13ஜிபி ரேம் இருக்கிறது. இவை LPDDR5 வகையைச் சார்ந்தது. மேலும் 128ஜிபி சேமிப்புத்திறனும் இருக்கிறது. இந்து UFS3.1 வகையைச் சேர்ந்தது. இது முந்தைய மாடலை விட மூன்று மடங்கு வேகமாக இருக்கும்.

கனெக்டிவிட்டி

இதில் இன் –டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் இருக்கிறது. மேலும் Wi-Fi 2.4G, Wi-F- 6, ப்ளூடூத் 5.3, OTG, GPS, NFC, Vapor Chamber Cooling System போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகள் இந்த இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

இந்த போனில் 5160mAhபேட்டரி வழங்கப்படு இருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய 45W Quick அடாப்டர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போனை 20 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

விலை

இந்த இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போன் ‘மூன்லைட் சில்வர் (Moonlight Silver), ஸ்டார்டஸ்ட் க்ரே (Stardust Grey) என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை சவுதி அரேபியா பணத்திற்கு 2699 ரியாலாக இருக்கிறது. இந்திய மதிப்புக்கு ஏறத்தாழ ரூ59,000 வருகிறது.

The post பேந்தம் சீரிஸில் இரண்டு ப்ரீமியம் போன்களை வெளியிட்டது டெக்னோ! first appeared on .

]]>