பேந்தம் சீரிஸில் இரண்டு ப்ரீமியம் போன்களை வெளியிட்டது டெக்னோ!

குறைந்த விலை போன்களுக்கு புகழ்பெற்ற டெக்னோ நிறுவனத்தில் இருந்து எக்கச்சக்கமான வசதிகளுடன் ஒன்றல்ல.. இரண்டு ப்ரீமியம் ரக போன்கள் இன்று (சற்று நேரத்திற்கு முன்பு) வெளியாகி இருக்கின்றன. இது பேந்தம் எக்ஸ்2 (Phantom X2) மற்றும் பேந்தம் எக்ஸ்2 ப்ரோ (Phantom X2 Pro) என்ற பெயர்களில் வெளியாகி இருக்கிறது.

டிஸ்ப்ளே

டெக்னோ Phantom X2 போனில் 6.8 அங்குல FHD+ curved Flexible AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 120Hz Refresh rate-ஐ கொண்டுள்ளது. 360Hz Touch Sampling rateஐயும் கொண்டு இருக்கிறது. 1080×2400 பிக்ஸல் அடர்த்தியுடன் 93.5% Screen to Body Ratioவையும் கொண்டுள்ளது. Unibody double-curved டிசைனில், மிலிட்டரி கிரேடு Anti-Glare கிளாஸோடு வந்திருக்கும் இந்த மொபைல் Corning Gorilla Glass Victus பாதுகாப்பையும் பெற்றுள்ளது.

கேமரா

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனின் பின்பக்கத்தில் 64MP RGBW முதன்மை கேமராவும், இதனோடு 13MP மற்றும் 2MP கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. இதோடு Quad Flashlight ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical image stabilization) இருப்பது கூடுதல் சிறப்பு. இதனால் நடுக்கமில்லாத தெளிவான புகைப்படங்களையும், வீடியோவையும் எடுக்கலாம். முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 80.6டிகிரி ஆங்கிள் வியூவை கொண்டுள்ளது. இதோடு அட்ஜஸபிள் ஃப்ளாஷ்லைட்டும் இருக்கிறது. இதில் இருக்கும் கேமராக்களில் 4K வீடியோ, 10X zoom, AI Portrait| Super Night, Wide Selfie, HDR, Burst Shot, AI Scene Detection , Video Ultra Steady, Video Bokeh, Time-lapse, Slow Motion போன்ற வசதிகளும் இருக்கின்றன.

இயங்குதளம்

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போன் ஆண்ட்ராய்டு 12ன் மேல் HiOS 12 Skin கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது.

ப்ராஸசர்

இது ஒரு இரட்டை சிம் மொபைல் ஆகும். TSMC 4nm MediaTek Dimensity 9000 5G SoC சிப்செட் முதல் முதலாக இந்த போனிலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த 5ஜி ப்ராஸசர் 3.05GHz Arm Cortex X2 Ultra-core ப்ராஸசர் ஆகும். இது Arm Mali-G710 MC10 GPU-வைக் கொண்டுள்ளது. இது 11 5ஜி பேண்டுகளை support செய்கிறது. இதன் அந்துது (AnTuTu) ஸ்கோர் 10 லட்சம் ஆகும்.

மெமரி

இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனில் 8 ஜிபி பிசிகல் ரேம், 5 ஜிபி மெமரி ப்யூஷன் ரேம் என மொத்தம் 13ஜிபி ரேம் இருக்கிறது. இவை LPDDR5 வகையைச் சார்ந்தது. மேலும் 128ஜிபி சேமிப்புத்திறனும் இருக்கிறது. இந்து UFS3.1 வகையைச் சேர்ந்தது. இது முந்தைய மாடலை விட மூன்று மடங்கு வேகமாக இருக்கும்.

கனெக்டிவிட்டி

இதில் இன் –டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் இருக்கிறது. மேலும் Wi-Fi 2.4G, Wi-F- 6, ப்ளூடூத் 5.3, OTG, GPS, NFC, Vapor Chamber Cooling System போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகள் இந்த இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

இந்த போனில் 5160mAhபேட்டரி வழங்கப்படு இருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய 45W Quick அடாப்டர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போனை 20 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

விலை

இந்த இந்த டெக்னோ பேந்தம் எக்ஸ்2 போன் ‘மூன்லைட் சில்வர் (Moonlight Silver), ஸ்டார்டஸ்ட் க்ரே (Stardust Grey) என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை சவுதி அரேபியா பணத்திற்கு 2699 ரியாலாக இருக்கிறது. இந்திய மதிப்புக்கு ஏறத்தாழ ரூ59,000 வருகிறது.