pixel 6A https://www.91mobiles.com/tamil Wed, 11 Jan 2023 06:31:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6A https://www.91mobiles.com/tamil/google-pixel-6a-and-nothing-phone-1-get-big-discounts-in-flipkart-big-billion-day-sale/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-6a-and-nothing-phone-1-get-big-discounts-in-flipkart-big-billion-day-sale Tue, 13 Sep 2022 09:41:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2268 பிக் பில்லியன் டே சேல் Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு Flipkart Big Billion Days விற்பனையில் பெரும் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் பெரும் விலைக்குறைப்புடன் கிடைக்கும் என நிறுவனத்தின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளது. கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் குறித்து பிளிப்கார்ட் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. அதில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை […]

The post ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6A first appeared on .

]]>

பிக் பில்லியன் டே சேல்

Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு Flipkart Big Billion Days விற்பனையில் பெரும் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் பெரும் விலைக்குறைப்புடன் கிடைக்கும் என நிறுவனத்தின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் குறித்து பிளிப்கார்ட் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. அதில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக இருக்கும் நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ரூ.34,199 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.27,699 என்ற விலையில் வாங்கலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த விற்பனைகள் நேரலைக்கு வர இருக்கிறது. இந்த தினங்களில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

ரூ.43,999க்கு விற்கப்படும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ரூ.34,199 என வாங்கலாம் என்பது போக, கூடுதலாக ப்ரீபெய்ட் கட்டண விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.3500 தள்ளுபடி கிடைக்கும் என்றும், அதேபோல் ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் சேல்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை நடக்கும் அதே நேரத்தில் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையும் நடக்க இருக்கிறது. இரண்டு முன்னணி ஆன்லைன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தள்ளுபடிகளை வழங்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இரண்டு நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் தள்ளுபடி தினங்களை அறிவிக்க இருக்கும் காரணத்தால் தள்ளுபடிகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6ஏ ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6ஏ இந்தநிலையில் பிளிப்கார்ட் முதல் தகவலை வெளியிட்டுள்ளது. அது கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கானது.

இதுமட்டு அல்லாது ஸ்மார்ட்போன் விலையை இன்னும் குறைக்க எக்ஸ்சேஞ்ச் சலுகையை மேற்கொள்ளலாம். இந்த தள்ளுபடி நிலையானது அல்ல. விற்பனை தினங்களில் இந்த விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட்போன் Out of Stock ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. எனவே பிக் பில்லியன் டேஸ் விற்பனை குறித்த நினைவூட்டல்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும் பிளிப்கார்ட்டில் உங்களது லாக் இன் ஐடியில் டெலிவரி முகவரி, வங்கி பரிவர்த்தனை விவரங்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிரத்யேச டென்சர் சிப்செட் பிரத்யேச டென்சர் சிப்செட் கூகுள் பிக்சல் 6A இந்த கோடையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிக்சல் போன் இதுவாகும். கூகுளின் சமீபத்திய மற்றும் பிரத்யேச டென்சர் சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

The post ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6A first appeared on .

]]>
பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக கூகுள் பிக்சல் போன்! https://www.91mobiles.com/tamil/google-pixel-6a-in-amazon-gets-cheaper-price-than-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-6a-in-amazon-gets-cheaper-price-than-flipkart Tue, 23 Aug 2022 03:48:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1759 சமீப காலமாக கூகுள் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய பிளிப்கார்ட்டுடன் கூட்டுச் சேர்ந்து இருக்கிறது. இதில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a) ஸ்மார்ட்போனும் அடங்கும். இந்த மாடலின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட கூகுள் பிக்சல் 6a இப்போது பிளிப்கார்ட்டில் ரூ. 43,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. அதேசமயம், இதே கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒரு புதிய […]

The post பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக கூகுள் பிக்சல் போன்! first appeared on .

]]>

சமீப காலமாக கூகுள் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய பிளிப்கார்ட்டுடன் கூட்டுச் சேர்ந்து இருக்கிறது. இதில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a) ஸ்மார்ட்போனும் அடங்கும். இந்த மாடலின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட கூகுள் பிக்சல் 6a இப்போது பிளிப்கார்ட்டில் ரூ. 43,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

அதேசமயம், இதே கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசானில் இன்னும் மலிவான விலையில் இந்த டிவைஸை இப்போது நீங்கள் வாங்க முடியும். கூகுள் பிக்சல் 6a போனை அமேசானில் இருந்து வெறும் ரூ. 37,710 விலையில் வாங்க முடியும். அதாவது, பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக.

இது எப்படி சாத்தியம்? இதை எப்படி நம்பி வாங்குவது? இதிலிருக்கும் ரிஸ்க் என்ன என்பதைப் புரிந்துகொண்ட பின் இந்த சலுகையில் புதிய கூகிள் பிக்சல் 6a போனை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அமேசானில் பல தர்ட் பார்ட்டி விற்பனையாளர்கள் இதே கூகுள் பிக்சல் 6a போனை ரூ. 37,000 அல்லது ரூ. 38,000 என்ற விலையில் விற்று வருகின்றனர். சரி, இப்போது இந்த சலுகையில் உள்ள பிடிப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

இது கூகுளின் பிரத்தியேக விற்பனை தளம் இல்லை என்பதால் அமேசானில் இந்த போனை வாங்கினால் கூகுளின் வாரண்ட்டி போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரிஜினலை விடக் குறைந்த விலைக்குக் கிடைப்பதால் உங்கள் கைக்கு வரும் பொருள் புதிதாக இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது புதுப்பிக்கப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த தகவல்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா என்று முடிவு செய்யுங்கள்.

ஒருவேளை ரிஸ்க் எடுப்பதெல்லாம் உங்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை என்றால் தாராளமாக இதை வாங்க செல்லலாம். குறிப்பாக கைக்குக் கிடைக்கும் போன் பழையதாக இருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அமேசானில் தாராளமாக வாங்கிக்கொள்ளலாம். இப்போது ரூ.43,000 போட்டு வாங்குவதற்கு இந்த கூகுள் பிக்சல் 6a மதிப்புள்ளது தானா என்பதையும் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 6a மொபைல் போன் கூகுளின் சிறந்த சிப் செட்டினால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதன் இரட்டை கேமரா செட்டப் இதை இன்னும் சிறப்பாக ஆக்குகிறது என்றே சொல்லலாம். 40,000 ரூபாய் மதிப்பில் இந்த அம்சம் இருப்பது மிகவும் சிறந்தது என்றே கூறலாம். கூகுள் பிக்சல் 6a தற்போது ஆண்ட்ராய்டு 13 OSயில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் குறைந்தது மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை இன்னும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இதன் 60Hz டிஸ்பிளே மற்றும் பிளாஸ்டிக் பாடி இதை ஒரு பிரீமியம் ஸ்மார்ட் போனாக உணரவைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
இந்த இரண்டு குறைகளை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால், கூகுள் பிக்சல் 6a ஸ்டாக் ஆண்ட்ராய்டு UI கொண்ட ஒரு சிறந்த ஸ்மார்ட் போன் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கட்டாயம் பல ஆண்டுகளுக்கு இது ஒரு நல்ல ஸ்மார்ட் போனாக உங்களுக்கு கம்பெனி கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இனி இறுதி முடிவு உங்களுடையது தான்.

The post பிளிப்கார்டை விட ரூ. 5000 குறைவாக கூகுள் பிக்சல் போன்! first appeared on .

]]>
Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு https://www.91mobiles.com/tamil/google-pixel-6as-fingerprint-scanner-has-a-security-bug/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-6as-fingerprint-scanner-has-a-security-bug Wed, 27 Jul 2022 04:44:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1088 கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6A ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. […]

The post Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு first appeared on .

]]>

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6A ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனமும் இதுவரை இதுபற்றி எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு first appeared on .

]]>
இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 6A https://www.91mobiles.com/tamil/google-pixel-6a-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-6a-launched-in-india Fri, 22 Jul 2022 10:01:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1021 கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஈவண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.1 அங்குல Full HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் கூகுள் டென்சர் புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், இதனுடன் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் […]

The post இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 6A first appeared on .

]]>

கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஈவண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.1 அங்குல Full HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் கூகுள் டென்சர் புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், இதனுடன் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி இதன் பின்புறம் 12.2 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒய்டு செகண்ட்ரி கேமராவும், முன்பக்கம் 8 மெகாபிக்சல் செப்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கிறது.

மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை (in-display fingerprint) சென்சார், 4410mAh பேட்டரி மற்றும் 18W fast charging தி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளன. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல் (Charcoal) மற்றும் சால்க் (Chalk) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கப்படுகிறது.

The post இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 6A first appeared on .

]]>