pixel 7 series https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 13:56:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! https://www.91mobiles.com/tamil/google-pixel-7a-design-ram-storage-details-leaked-live-images/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7a-design-ram-storage-details-leaked-live-images Mon, 13 Mar 2023 13:54:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6824 கூகுள் பிக்சல் 6ஏ மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக வெளிவர இருக்கும் பிக்சல் 7ஏ மொபைலானது மே 10ஆம் தேதி நடக்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் முக்கிய டிப்ஸ்டர்கள் தொடர்ந்து இந்த மொபைல் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டபடி உள்ளனர். அதன்படி தற்போது புதிதாக இந்த மொபைலின் உண்மையான போட்டோக்களை வெளியிட்டு உள்ளனர். இது ஸிங் நியூஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த […]

The post கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! first appeared on .

]]>

Highlights

  • அறிமுகத்திற்கு முன்னதாகவே கூகுள் பிக்சல் 7ஏ மொபைலின் லைவ் படங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன
  • இந்த படங்கள் முந்தைய மாடலான பிக்சல் 6ஏ மொபைலைப் போலவே பிக்சல் 7ஏ மாடலும் இருப்பதை காட்டுகிறது.
  • கூகுள் பிக்சல் 7ஏ போன் மே 10ஆம் தேதி நிகழும் கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூகுள் பிக்சல் 6ஏ மொபைலின் தொடர்ச்சியாக வெளியாக வெளிவர இருக்கும் பிக்சல் 7ஏ மொபைலானது மே 10ஆம் தேதி நடக்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் முக்கிய டிப்ஸ்டர்கள் தொடர்ந்து இந்த மொபைல் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டபடி உள்ளனர். அதன்படி தற்போது புதிதாக இந்த மொபைலின் உண்மையான போட்டோக்களை வெளியிட்டு உள்ளனர். இது ஸிங் நியூஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோக்களை பார்க்கும் போதே இது அப்படியே இதன் முந்தைய மாடலை ஒத்து இருப்பதைக் காண முடிகிறது.

மெமரி

இப்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இந்த பிக்சல் 7ஏ போன் கருப்பு நிறத்தில் இருந்தாலும், இது வெளியாகும் போது பிற நிறத் தேர்வுகளிலும் வெளியாகும். இந்த புகைப்படங்களின் வழியே இந்த போனானது 8 ஜிபி LPDDR5 சாம்சங் ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலுக்கு 6ஜிபி வேரியண்டும் வரலாம்.

வடிவமைப்பு

லீக் ஆன புகைப்படங்களைப் பார்க்கையில் இந்த பிக்சல் 7ஏ போனானது பிக்சல் 7 சீரிஸ் போன்களைப்போல கூர்மையான ஓரங்களையும், சதுர வடிவையும் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மொபைலின் மேல் பகுதியின் மத்தியில் பஞ்ச்-ஹோல் கட் அவுட்டில் செல்ஃபி கேமரா இருப்பது தெரிகிறது. பவர் பட்டனும், வால்யூம் பட்டனும் மொபைலின் வலது புறத்தில் உள்ளன. இதன் மேல் புறத்தில் நாய்ஸ் கேன்சலேசேஷனுக்காக ஒரு இரண்டாம் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் கீழ் புறத்தில் இரு பக்கமும் ஸ்பீக்கரும், நடுவில் டைப் சி ஸ்லாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்கம்

போனின் பின்பக்கத்தில் உள்ள கிடைமட்ட பட்டையில் இரண்டு கேமராக்கள் மற்றும் ப்ளாஷ் ஆகிய்வை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேனல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 7ஏ போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சமீபத்தில் வெளியான கசிவுச் செய்திகளின் படி கூகுள் பிக்சல் 7ஏ மொபைல் 90Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும். பிக்சல் 7 சீரிஸைப் போன்று இந்த போனானது டென்சார் ஜி2 சிப்செட்டுடன் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் இந்த போன் 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்புத்திறனை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வரும்.

கேமராவைப் பொருத்தவரை இந்த பிக்சல் 7ஏ போனில் 64மெகாபிக்சல் சோனி IMX787 சென்சார் முதன்மை கேமராவாகவும், 12 மெகாபிக்சல் கேமரா இரண்டாவது கேமராவாகவும் இருக்கும். வெளியான வதந்திகளின் படி பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மொபைல்களைப் போல இந்த போனிலும் 10.8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பிக்சல் 7ஏ போன் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • Google டென்சார் G2 Processor
  • 6 GB / 8GB ரேம்
  • 128ஜிபி சேமிப்புத்திறன்
  • 6.1 அங்குல (15.49 cm) திரை
  • 12.2 MP + 12 MP முன்பக்க கேமரா
  • 8 MP செல்ஃபி கேமரா
  • 4410 mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

 

 

The post கூகுள் பிக்சல் 7 சீரிஸின் தோற்றதிலேயே இருக்கிறது பிக்சல் 7ஏ. இணையத்தில் வெளியானது புகைப்படங்கள்! first appeared on .

]]>
வெளியானது கூகுள் பிக்சல் 7 சீரிஸ்! https://www.91mobiles.com/tamil/google-pixel-7-series-launched-in-india-with-amazing-look-and-specs-sale-date-and-offer-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7-series-launched-in-india-with-amazing-look-and-specs-sale-date-and-offer-details Fri, 07 Oct 2022 09:18:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2855 ஐபோன்கள் போன்று தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சலும் ஒன்று. கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி பல்வேறு கசிவுத் தகவல்கள் வெளியாகின. இது பிக்சல் விரும்பிகளிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்த நிலையில் தற்போது கூகுள் பிக்சல் 7 சீரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த பிக்சல் 7 சீரிஸ் விரும்பிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம். பிரத்யேக சிப்செட் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் […]

The post வெளியானது கூகுள் பிக்சல் 7 சீரிஸ்! first appeared on .

]]>

ஐபோன்கள் போன்று தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சலும் ஒன்று. கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி பல்வேறு கசிவுத் தகவல்கள் வெளியாகின. இது பிக்சல் விரும்பிகளிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்த நிலையில் தற்போது கூகுள் பிக்சல் 7 சீரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த பிக்சல் 7 சீரிஸ் விரும்பிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

பிரத்யேக சிப்செட்

கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 7 சீரிஸ் இல் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு மாடல்களிலும் கூகுளின் சொந்த தயாரிப்பான டென்சர் ஜி2 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது செகண்ட் ஜென் சிப்செட் ஆகும். இந்த சிப்செட் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், அதிவேக செயல்திறனையும் வழங்கும்.

கேமரா

பிக்சல் 7 மாடலில் டூயல் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா ஆகும். அதேசமயம் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அது 50 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 48 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் முன்புறத்தில் 10.8 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

5 வருட பாதுகாப்பு அப்டேட்

இந்த ஸ்மார்ட்போன்கள் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியைக் கொண்டுள்ளன. அந்த வகையில் IP68 மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை (Security update) பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை & சலுகை

Google Pixel 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆனது ஸ்னோ, அப்சிடியன் மற்றும் லெமன்கிராஸ் ஆகிய நிறத் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் பிக்சல் 7 ப்ரோ ஆனது ரூ.84,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹேசல் அப்சிடியன் மற்றும் ஸ்னோ நிறத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. பிக்சல் 7 மாடலுக்கு ரூ.6000 மற்றும் பிக்சல் 7 ப்ரோவிற்கு ரூ.8500 கேஷ்பேக் சலுகையும் உண்டு.

Google Pixel 7 சிறப்பம்சங்கள்

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்குகிறது. இதில் 6.32 அங்குல முழு எச்டி+ OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் ஆதரவுடனான ஆக்டோ கோர் டென்சர் ஜி2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர்

5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. பயோமெட்ரிக் ஆதரவுக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் இருக்கிறது. ஃபேஸ் அன்லாக் ஆதரவு வழங்கப்படவில்லை. பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதேபோல் கூகுளின் எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையில் முழுசார்ஜுக்கு 72 மணிநேரம் வரை இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Google Pixel 7 Pro சிறப்பம்சங்கள்

Google Pixel 7 Pro ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. பிக்சல் 7 மாடலில் இருக்கும் அதே டென்சர் ஜி2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலில் 12 ஜிபி ரேம் இருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.7 அங்குல குவாட்-எச்டி LTPO OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

கனெட்டிவிட்டி

5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. பயோமெட்ரிக் ஆதரவுக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. இதிலும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு வழங்கப்படவில்லை. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வேகமான வயர்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. அதே எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறை இதிலும் வழங்கப்பட்டுள்ளது.

வேறுபாடுகள்

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனிலும் ஒரே சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும் டிஸ்ப்ளே அளவு மாறுபட்டதாக இருக்கிறது. அதேபோல் கேமரா ஆதரவும் பிக்சல் 7ஐ விட 7 ப்ரோவில் மேம்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 மாடலில் டூயல் கேமராக்களும் பிக்சல் 7 ப்ரோவில் டிரிபிள் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ப்ரோ மாடலில் நிறுவனத்தின் புதிய மேக்ரோ ஃபோகஸ் ஆதரவுடன் பல்வேறு மேம்பட்ட கேமரா அம்சங்களை நிறுவனம் வழங்கி இருக்கிறது.

The post வெளியானது கூகுள் பிக்சல் 7 சீரிஸ்! first appeared on .

]]>