pixel fold https://www.91mobiles.com/tamil Tue, 18 Apr 2023 07:34:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. https://www.91mobiles.com/tamil/google-pixel-7a-fold-launch-date-price-tipped/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-7a-fold-launch-date-price-tipped Tue, 18 Apr 2023 07:34:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7605   மே 10 ஆம் தேதி I/O 2023 டெவலப்பர் மாநாட்டை Google திட்டமிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் Android 14 OS ஐ வெளியிடும். கூகுள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரே கட்டத்தில் மலிவு விலையில் Pixel 7a மற்றும் மிகவும் பிரபலமான Pixel Fold ஆகியவற்றை அப்போது அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி பல வதந்தி தகவல்கள ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. FrontPageTech இன் Jon Prosser, Pixel 7a மற்றும் Pixel Fold எப்போது முன்கூட்டிய […]

The post Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. first appeared on .

]]>

Highlights

  • கசிவின்படி, Google pixel fold-ஐ மே 10 முதல் ப்ரீ ஆர்டர் செய்து  ஜூன் 27 முதல் பெறலாம்
  • Pixel 7a மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Pixel 7a விலை $499 (தோராயமாக ரூ. 41,000 ) இருக்கும்.

 

மே 10 ஆம் தேதி I/O 2023 டெவலப்பர் மாநாட்டை Google திட்டமிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் Android 14 OS ஐ வெளியிடும். கூகுள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரே கட்டத்தில் மலிவு விலையில் Pixel 7a மற்றும் மிகவும் பிரபலமான Pixel Fold ஆகியவற்றை அப்போது அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி பல வதந்தி தகவல்கள ஆன்லைனில் வெளியாகி வருகின்றன.

FrontPageTech இன் Jon Prosser, Pixel 7a மற்றும் Pixel Fold எப்போது முன்கூட்டிய ஆர்டர்கள் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் . தனித்தனியாக, தெரிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை Pixel 7a இன் விலை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

Google Pixel 7a மற்றும் Pixel Fold – எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி

Prosser இன் கூற்றுப்படி, Google Pixel Fold மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் Google Store இலிருந்து ப்ரீ ஆடரும் செய்ய முடியும். மே 10 ஆம் தேதி மற்றும் மே 30 ஆம் தேதி விற்பனை பார்ட்னர்கள் மற்றும் கடைகள் மூலம் தொடங்கும். போல்டபிள் போன் ஜூன் 27 முதல் விற்பனைக்கு வரும்.

 

மே 10 ஆம் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே Pixel 7a கிடைக்கும் என்றும், Charcoal, Snow, Sea, and Coral ஆகிய நிறங்களில் (Google Store மட்டும்)வெளிவரும் என்றும் ஜான் கூறுகிறார். Pixel 7a வெளியீட்டிற்குப் பிறகு Google Pixel 6a ஐ நிறுத்தாது என்றும் அறிக்கை கூறுகிறது.

Google Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விலை

Pixel 7a விலையைப் பொறுத்தவரை, 9to5Google அறிக்கையானது ஃபோனின் விலை $499 (தோராயமாக ரூ. 41,000) என்று கூறுகிறது. இது Pixel 6a இல் இருந்து $50 அதிகமாகும். ஹார்டுவேர்களில் செய்துள்ல அப்டேட்டை கருத்தில் கொள்ளும் போது இந்த விலை நியாயமானதாகவேத் தெரிகிறது.

 

Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

கூகுள் பிக்சல் 7a ஆனது 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், சமச்சீர் பெசல்கள் மற்றும் மேல் மையத்தில் அமைந்துள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்பகத்துடன் டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டுஇருக்கும்.

Pixel 7a ஆனது 64MP Sony IMX787 சென்சார் மற்றும் 13MP செகண்டரி சென்சார் உடன் வரும். செல்ஃபிக்களுக்காக இந்த போனின் முன்பக்கத்தில் 10.8MP ஸ்னாப்பரை வழங்கலாம். மொபைலின் மீதமுள்ள விவரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் மேலும் பல விவரங்கள் தெரியவரும்.

பிக்சல் ஃபோல்ட் விவரக்குறிப்புகள், அம்சங்கள் (வதந்தி)

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 7.57 அங்குல மடிக்கக்கூடிய மெயின் டிஸ்ப்ளேவுடன் வரும். வெளிப்புறத் டிஸ்ப்ளே  5.78 அங்குல பேனலாக இருக்கும். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வெளியாகலாம். டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டு இருக்கும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இந்த மொபைல் வெளியாகும்.

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

 

Google Pixel 7A முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Google Tensor G2
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.1 அங்குலம் (15.49 செமீ)
  • பின் கேமரா – 64 எம்.பி + 12 எம்.பி
  • செல்ஃபி கேமரா – 8 எம்.பி
  • பேட்டரி – 4410 mAh

The post Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது. first appeared on .

]]>
மடிக்கக்கூடிய பிக்ஸல் ஃபோல்டு போனின் ரெண்டர் வெளியானது! https://www.91mobiles.com/tamil/google-pixel-fold-leaked-in-render-form/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-fold-leaked-in-render-form Fri, 09 Dec 2022 08:18:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4211 கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது. புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது. அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த […]

The post மடிக்கக்கூடிய பிக்ஸல் ஃபோல்டு போனின் ரெண்டர் வெளியானது! first appeared on .

]]>

கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.

புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.

அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 அங்குல அளவில் உள்ளது. இதன் உட்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 அங்குல கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

பிராசஸர்

பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள்.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1 லட்சத்து 48,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒப்போ ஃபைன்ட்

மடிக்கக்கூடிய மொபைலை வெளியிட இருக்கும் இன்னொரு நிறுவனமான ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய ஒப்போ ஃபைண்ட் N2 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் ஃப்ளிப் போனை ஒப்போ அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோவை ஒப்போ வெளியிட்டு இருக்கிறது.

அம்சங்கள்

அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

எடை

ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது. ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது. இதன் எடை 233 கிராம் மட்டுமே.

The post மடிக்கக்கூடிய பிக்ஸல் ஃபோல்டு போனின் ரெண்டர் வெளியானது! first appeared on .

]]>