pixel phone 7 https://www.91mobiles.com/tamil Thu, 15 Sep 2022 05:06:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மினி பிக்சல் போனை உருவாக்குகிறதா கூகுள்? https://www.91mobiles.com/tamil/google-pixel-mini-in-the-works-reports/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-mini-in-the-works-reports Thu, 15 Sep 2022 05:06:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2324 கூகுள் நிறுவனம் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி “மேட் பை கூகுள்” என்ற பெயரில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் […]

The post மினி பிக்சல் போனை உருவாக்குகிறதா கூகுள்? first appeared on .

]]>

கூகுள் நிறுவனம் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி “மேட் பை கூகுள்” என்ற பெயரில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இரு சாதனங்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றையும் தற்போது கூகுள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர பிக்சல் சீரிசில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் மினி பிக்சல் போன் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

புதிய பிக்சல் போன்கள் வெளியாக இருக்கும் நிலையில் முந்தைய மாடலான பிக்சல் 6A மொபைலுக்கு அதிகப்படியான விலைக்குறைப்பை செய்ய இருக்கிறது கூகுள். இந்த விலைகுறைப்பு விரைவில் வர இருக்கும் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் நிகழ இருக்கிறது.

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக இருக்கும் நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ரூ.34,199 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.27,699 என்ற விலையில் வாங்கலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த விற்பனைகள் நேரலைக்கு வர இருக்கிறது. இந்த தினங்களில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

ரூ.43,999க்கு விற்கப்படும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ரூ.34,199 என வாங்கலாம் என்பது போக, கூடுதலாக ப்ரீபெய்ட் கட்டண விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.3500 தள்ளுபடி கிடைக்கும் என்றும், அதேபோல் ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மினி பிக்சல் போனை உருவாக்குகிறதா கூகுள்? first appeared on .

]]>
அக்டோபர் 6ல் வெளியாகிறது பிக்சல் போன் 7 சீரிஸ் https://www.91mobiles.com/tamil/made-by-google-event-2022-pixel-7-pixel-7-pro-pixel-watch-launch-date-announced/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=made-by-google-event-2022-pixel-7-pixel-7-pro-pixel-watch-launch-date-announced Wed, 07 Sep 2022 13:09:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2123 கூகுளின் அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராகி உள்ளன! கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த Google I/O-இல் கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவின் வாரிசுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் டீஸ் செய்து இருந்தது. தற்போது அந்த அறிமுகம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே […]

The post அக்டோபர் 6ல் வெளியாகிறது பிக்சல் போன் 7 சீரிஸ் first appeared on .

]]>

கூகுளின் அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு தயாராகி உள்ளன! கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த Google I/O-இல் கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவின் வாரிசுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் டீஸ் செய்து இருந்தது. தற்போது அந்த அறிமுகம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன்களை மட்டுமே டீஸ் செய்யவில்லை. இன்னொரு தயாரிப்பையும் சேர்த்தே டீஸ் செய்தது. அது கூகுள் பிக்சல் வாட்ச் ஆகும். இதுவும் வரவிருக்கும் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வில் அறிமுகமாகும்.

Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro-வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள் Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் ஆனது (கடந்த Google I/O-இல் அறிமுகமான) நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டென்சர் SoC-களால் இயக்கப்படும் மற்றும் Android 13 ஓஎஸ் இல் இயங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கூகுளின் புதிய சிப்செட் ஆனது புகைப்படங்கள், வீடியோக்கள், செக்யூரிட்டி மற்றும் ஸ்பீச் ரிகக்னைசேஷன் போன்றவைகளின் மீதான பெர்சனலைஸ்டு அம்சங்களை வழங்கும் என்றும் கூகுள் கூறுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, Gadgetfull BD வழியாக பிக்சல் 7 ப்ரோவின் அன்பாக்சிங் வீடியோ ஒன்றும் வெளியானது. அதன் வழியாக பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் பேக், கூகுள் I/O 2022-இல் டீஸ் செய்யப்பட்ட அதே வைசர் டிசைன், அந்த வைசர் டிசைனில் 2 மெட்டல் கட்அவுட்கள் உள்ளன. முதல் கட்அவுட்டில் இரண்டு கேமராக்கள் உள்ளன, இரண்டாவது கட்அவுட்டில் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro விலை

வெணிலா வேரியண்ட் ஆன கூகுள் பிக்சல் 7 ஆனது ரூ.51,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில் ப்ரோ மாடலான பிக்சல் 7 ப்ரோ ஆனது சுமார் ரூ.70,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த இரண்டுமே எதிர்பார்க்கப்படும் விலை மட்டுமே; அசல் விலைகள் மாறுபடலாம்.

Google-இன் முதல் ஸ்மார்ட் வாட்ச்

அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் கூகுள் பிக்சல் வாட்ச், அதாவது கூகுள் நிறுவனத்தால், வடிவமைத்து கட்டமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து வகையான பிக்சல் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் மற்றும் நிறுவனத்தின் புதிய WearOS-இன் கீழ் இயங்கும்.

Made by Google நிகழ்வில் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள் நிறுவனத்தின் US ஸ்டோர் வழியாக கிடைத்த தகவலின்படி, மேட் பை கூகுள் வெளியீட்டு நிகழ்வானது வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். அந்நிகழ்வில் புதிய கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ போன்கள் கூகுள் பிக்சல் வாட்ச் ஆகியவற்றுடன் சேர்த்து கூகுள் அதன் புதிய நெஸ்ட் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளையும் அறிவிக்க இருக்கிறது.

The post அக்டோபர் 6ல் வெளியாகிறது பிக்சல் போன் 7 சீரிஸ் first appeared on .

]]>