POVA https://www.91mobiles.com/tamil Wed, 19 Jul 2023 06:27:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பின்பக்க பேனலில் LED ஸ்ட்ரிப்களுடன் வெளிவரும் Tecnoவின் POVA போன் https://www.91mobiles.com/tamil/tecno-to-launch-new-smartphone-with-led-lights-notifications-in-pova-series-arc-interface/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-to-launch-new-smartphone-with-led-lights-notifications-in-pova-series-arc-interface Wed, 19 Jul 2023 06:27:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9489   தொழில்நுட்ப பிராண்ட் டெக்னோ தொடர்ந்து பெரிய மொபைல் நிறுவனங்களை தொந்தரவு செய்யும் ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. சிறிது காலத்திற்கு முன்பு, நிறுவனம் சாம்சங் மற்றும் மோட்டோரோலாவுக்கு நேரடியாக சவால் விடுத்து, Phantom V Fold ஐக் கொண்டு வந்தது. இந்நிலையில், இப்போது நிறுவனம் புதிதாய் ஒரு மொபைல் போனைக் கொண்டுவருகிறது. அதன் பின் பேனலில் LED நோட்டிஃபிகேஷன் விளக்கு இருக்கும். இதன் மூலம் இது நத்திங் ஃபோனுடன் போட்டியிடும் POVA சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும். லெட் […]

The post பின்பக்க பேனலில் LED ஸ்ட்ரிப்களுடன் வெளிவரும் Tecnoவின் POVA போன் first appeared on .

]]>

 

தொழில்நுட்ப பிராண்ட் டெக்னோ தொடர்ந்து பெரிய மொபைல் நிறுவனங்களை தொந்தரவு செய்யும் ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. சிறிது காலத்திற்கு முன்பு, நிறுவனம் சாம்சங் மற்றும் மோட்டோரோலாவுக்கு நேரடியாக சவால் விடுத்து, Phantom V Fold ஐக் கொண்டு வந்தது. இந்நிலையில், இப்போது நிறுவனம் புதிதாய் ஒரு மொபைல் போனைக் கொண்டுவருகிறது. அதன் பின் பேனலில் LED நோட்டிஃபிகேஷன் விளக்கு இருக்கும். இதன் மூலம் இது நத்திங் ஃபோனுடன் போட்டியிடும் POVA சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

லெட் ஒளியுடன் கூடிய டெக்னோ போன்

LED விளக்கு பொருத்தப்பட்ட புதிய டெக்னோ போன் குறித்த தகவல் டிப்ஸ்டர் இஷான் அகர்வால் மூலம் தெரிய வந்துள்ளது. இஷான் தனது ட்விட்டர் ஹேண்டில் மூலம் வரவிருக்கும் டெக்னோ போனின் ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் போனின் பின் பேனல் மற்றும் அதில் உள்ள விளக்குகளையும் தெளிவாகக் காணலாம். இந்த போன் டெக்னோ போவாவின் கீழ் கொண்டுவரப்பட்டது என்று டிப்ஸ்டர் தெளிவுபடுத்தியுள்ளார். இது விரைவில் இந்தியாவில் வெளியாகலாம்.

 

Tecno POVA ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் LED லைட் அறிவிப்புகள் தொழில்நுட்பம், ‘ஆர்க் இன்டர்ஃபேஸ்’ என இஷானால் பெயரிடப்பட்டுள்ளது. மேலே உள்ள gif இல், மொபைலின் பின்புற பேனலில் கண்ணாடி மற்றும் மறுபுறம் ஸ்கின் இருப்பதை நீங்கள் காணலாம். மேலும் இவை இரண்டிற்கும் இடையில் LED துண்டு வைக்கப்பட்டுள்ளது. அது ஒளிரும். மொபைல் அழைப்பு, செய்தி மற்றும் பிற அறிவிப்புகள் இருக்கும்போது இந்த விளக்கு ஒளிரும்.

Tecno POVA 5

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டெக்னோ போவா 5 பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Garena Battle Royale game தயாரிப்பாளருடன் இணைந்து உருவாக்கப்பட்ட அதன் Free fire சிறப்பு பதிப்பும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஃபோன் Turbo Mecha வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • டிஸ்ப்ளே : போனின் விவரக்குறிப்பு பற்றி பேசுகையில், டெக்னோ போவா 5 ஆனது 6.78 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 120Hz புதுப்பிப்பு வீதம், 1080×24460 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 240Hz தொடு மாதிரி வீதம் கிடைக்கும்.
  • சிப்செட் : இந்த மொபைலில் MediaTek Helio G99 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயலி 6mm ஃபேப்ரிகேஷனை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த செயல்திறனுக்காக Z Access லீனியர் அதிர்வு மோட்டாரும் உள்ளது.
  • சேமிப்பகம் : சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 8 ஜிபி வரை ரேம் கொண்டுள்ளது. உள் சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, 256 ஜிபி வரை ஆதரவு உள்ளது.
  • பேட்டரி : பேட்டரியைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் திறன்மிக்க 6000mAh பேட்டரி மற்றும் 45V ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் வெறும் 21 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இது மட்டுமல்லாமல், 10W வரையிலான ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் மொபைலில் கிடைக்கிறது.
  • கேமரா : கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மொபைல் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 8 மெகாபிக்சல் முன் கேமரா லென்ஸ் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு கிடைக்கிறது.

 

The post பின்பக்க பேனலில் LED ஸ்ட்ரிப்களுடன் வெளிவரும் Tecnoவின் POVA போன் first appeared on .

]]>
ரூ.15,000 விலையில் கிடைக்கும் 6000mAh பேட்டரி கொண்ட மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/list-of-mobiles-with-6000mah-battery-under-rs-15500/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-mobiles-with-6000mah-battery-under-rs-15500 Tue, 04 Apr 2023 04:30:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7286   தற்போது வெளியாகும் மொபைல்கள் அளவில் பெரியதாகவும், அதிக திறன் வாய்ந்ததாகவும் இருக்கின்றன. பெரும்பாலான மொபைல்கள் 5ஜி மொபைலாகவும் வெளிவருகின்றன. இதனால் இந்த மொபைல்களுக்கு அதிக அளவிலான சக்தியும் தேவைப்படுகிறது. எனவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரியோடு மொபைலை வெளியிடுகின்றன. அதிக திறன் இருப்பதால் அவை விலை உயர்ந்த மொபைலில் தான் இடம்பெறும் என்பதும் சமீபத்தில் பொய்த்துப் போய் இருக்கிறது. வெறும் ரூ.7,500 விலைக்கு வெளியாகும் Infinix Smart 7 போன்ற பட்ஜெட் […]

The post ரூ.15,000 விலையில் கிடைக்கும் 6000mAh பேட்டரி கொண்ட மொபைல்கள்! first appeared on .

]]>

Highlights

  • தற்போது வெளியாகும் மொபைல்கள் அதிக பேட்டரி திறனோடு வெளிவருகின்றன
  •  Samsung, Infinix, Tecno நிறுவனங்கள் இவ்வகை மொபைலை அதிகம் வெளியிடுகின்றன
  • 6000mAh பேட்டரி கொண்ட மொபைல்கள் ரூ.7500 முதல் கிடைக்கின்றன.

 

தற்போது வெளியாகும் மொபைல்கள் அளவில் பெரியதாகவும், அதிக திறன் வாய்ந்ததாகவும் இருக்கின்றன. பெரும்பாலான மொபைல்கள் 5ஜி மொபைலாகவும் வெளிவருகின்றன. இதனால் இந்த மொபைல்களுக்கு அதிக அளவிலான சக்தியும் தேவைப்படுகிறது. எனவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரியோடு மொபைலை வெளியிடுகின்றன. அதிக திறன் இருப்பதால் அவை விலை உயர்ந்த மொபைலில் தான் இடம்பெறும் என்பதும் சமீபத்தில் பொய்த்துப் போய் இருக்கிறது. வெறும் ரூ.7,500 விலைக்கு வெளியாகும் Infinix Smart 7 போன்ற பட்ஜெட் மொபைலில் கூட 6000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இப்படி ரூ 7,500 முதல் வெளியாகும் மொபைல்களையும் அதன் வசதிகளையும் இப்போது பார்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் மாற்றங்கள் இருக்கலாம்.

 

6000mAh பேட்டரியோடு வரும் மொபைல்களின் பட்டியல்

  • Samsung Galaxy M32 Prime Edition
  • Tecno Pova Neo 5G
  • Samsung Galaxy M33 5G
  • Samsung Galaxy M13
  • Tecno Pova 4
  • Samsung Galaxy F13
  • Infinix Hot 20 Play
  • Infinix Smart 7

 

Samsung Galaxy M32 Prime Edition

https://www.91mobiles.com/samsung-galaxy-m32-prime-edition-128gb-price-in-india

இந்த மொபைலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 ப்ராஸசர் இருக்கிறது. இதில் 6ஜிபி ரேம், 64MP உட்பட 4 பின்பக்க கேமராக்கள், 20MP முன்பக்க கேமரா ஆகியவை உள்ளன. 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.4 அங்குல Super AMOLED டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. 4ஜி மொபைலான இதில் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைல் ரூ.15,499க்கு கிடைக்கிறது

Tecno Pova Neo 5G

https://www.91mobiles.com/tecno-pova-neo-5g-price-in-india

இண்டஹ் மொபைல் மீடியாடெக் டைமெண்சிட்டி 810 சிப்செட்டில் இயங்குகிறது. 50MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமராவோடு வெளியாகும் இந்த மொபைலில் 4ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 5ஜி மொபைலான இந்த போவா நியோ 5ஜி ஆண்ட்ராய்டு 12ல்  இயங்குகிறது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.8 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.15,499க்கு விற்பனையாகிறது.

Samsung Galaxy M33 5G

https://www.91mobiles.com/samsung-galaxy-m33-5g-price-in-india

ஆண்ட்ராய்டு 12ல் வெளியாகும் இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 14 வரைக்கான அப்டேட்கள் இலவசமாகக் கிடைக்கும். சாம்சங்கின் Exynos 1280 சிப்செட்டில் உருவான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா உட்பட பின்பக்கத்தில் 4 கேமராக்களும் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.6 அங்குல TFT டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது.  6ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ள இந்த 5ஜி மொபைல் ரூ.15,499க்கு கிடைக்கிறது.

Samsung Galaxy M13

https://www.91mobiles.com/samsung-galaxy-m13-128gb-price-in-india

சாம்சங்கின் Exynos 850 சிப்செட்டில் வெளியான இந்த 4ஜி மொபைல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 6.6 அங்குல PLS LCD டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த மொபைல் 50MP முதன்மை கேமராவோடு கூடிய 3 பின்பக்க கேமராக்களையும், 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.  இந்த மொபைல் ரூ.12,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

Tecno Pova 4

https://www.91mobiles.com/tecno-pova-4-price-in-india

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் இருக்கும் இந்த 4ஜி மொபைலில் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.  90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.82 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டு இருக்கிறது. 50MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமராவோடு வரும் இந்த மொபைல் ரூ.11,999 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

Samsung Galaxy F13

https://www.91mobiles.com/samsung-galaxy-f13-price-in-india

சாம்சங்கின் Exynos 850 சிப்செட்டில் வெளியான இந்த 4ஜி மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 6.6 அங்குல PLS LCD டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த மொபைல் 50MP முதன்மை கேமராவோடு கூடிய 3 பின்பக்க கேமராக்களையும், 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.  இந்த மொபைல் ரூ.9,699 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

Infinix Hot 20 Play

https://www.91mobiles.com/infinix-hot-20-play-price-in-india

மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்டில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் உருவாகி இருக்கும் இந்த மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது. 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.82 அங்குல IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த மொபைல், 13MP முதன்மை கேமராவையும், 8MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் ரூ8,499க்கு விற்பனையாகிறது.

Infinix Smart 7

https://www.91mobiles.com/infinix-smart-7-price-in-india

6000mAh பேட்டரியோடு வெளியாகும் விலை குறைந்த மொபைல் இதுவாகும். இதில் Unisoc SC9863A என்ற சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 4ஜிபி ரேம், 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் வெளியாகும் இந்த 4ஜி மொபைல் 13MP முதன்மை கேமராவையும், 5MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. 6.6 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவோடு ரூ.7,499 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

The post ரூ.15,000 விலையில் கிடைக்கும் 6000mAh பேட்டரி கொண்ட மொபைல்கள்! first appeared on .

]]>