PS 1 https://www.91mobiles.com/tamil Mon, 19 Sep 2022 10:42:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் https://www.91mobiles.com/tamil/director-maniratnam-talks-about-ponniyin-selvan-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=director-maniratnam-talks-about-ponniyin-selvan-movie Mon, 19 Sep 2022 10:33:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2436 தமிழ் திரையுலகில், பலரின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரின் நடிப்பில் அந்தத் திரைப்படத்தைத் தற்போது சாத்தியப்பத்தி இருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். படம் செப்டம்பர் 30ம் தேதி பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற் கட்டமாக இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நடிகர் கார்த்தி, […]

The post பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் first appeared on .

]]>

தமிழ் திரையுலகில், பலரின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரின் நடிப்பில் அந்தத் திரைப்படத்தைத் தற்போது சாத்தியப்பத்தி இருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். படம் செப்டம்பர் 30ம் தேதி பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற் கட்டமாக இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அன்கட் வெர்ஷன் டிஜிட்டலில் கிடைக்குமா?” என பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இயக்குனர் மணிரத்னம்,”அன்கட் வெர்ஷனுக்கு நீங்கள் புத்தகத்தை தான் படிக்க வேண்டும், ஷூட் செய்த அனைத்தும் படத்தில் வைத்துவிட்டேன்.”என நகைச்சுவையாக பதிலளித்தார்.

“இந்த திரைப்படத்தில் வைரமுத்து இடம்பெறாதது ஏன்?” என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,”வைரமுத்துவுடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம், பல புதிய திறமையாளர்கள் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறார்கள், அதனால் தான் இந்த முடிவு” என பதிலளித்தார்.

“இந்த புத்தகத்தை சிறு வயது முதல் பலமுறை படித்திருக்கிறேன். படிக்கும் போதெல்லாம் இது திரைப்படத்திற்கான நாவல் என்று தான் எண்ண வைக்கும். இந்த நாவலில் இடபெற்றிருக்கும் சாகசங்கள், கதாபத்திர வடிவமைப்புகள் தான் இது திரைப்படத்திற்கான நாவல் என எண்ண வைக்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் பட்டை, நாமம் என்ற விவாதத்தை ஒரு காட்சியை வைத்து முடிவு செய்யக் கூடாது. உங்களின் முடிவு எனக்கு புரிகிறது, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது, இந்த திரைப்படத்தில் சில மாற்றங்கள் இருக்கிறது, 5 பாகங்களைக் கொண்ட நாவலை அப்படியே படமாக்க முடியாது, அதை வெப் சீரியஸாகத் தான் பண்ண முடியும்,சினிமா என்பது ஒரு எக்னாமிக் மீடியம். ஆனால், உயிரோட்டம் கல்கி எழுதியது போல் தான் இருக்கும்.” என்றார்.

பார்த்திபன் குறித்து கேட்ட கேள்விக்கு,”பார்த்திபன் சார் இஸ் எ ஜெம், அவரே ஒரு இயக்குனர்.. அவருக்கு எது வேண்டும், எது வேண்டாம் எனத் தெரியும்.” என்றார்.”பொன்னியின் செல்வன் ட்ரைலரில் ஆழ்வார்கடியான் பாலத்திலிருந்து விழும் போது தமிழில் ,’அய்யோ’ என்கிற வசனம் வருகிறது, மற்ற மொழிகளில், ‘நாராயணா’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது, ஏன்?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நாராயணா, இந்த கேள்வியை கண்டுபிடித்ததற்கு. கவலைப்படாதீர்கள் படம் முழுவதும் நாராயணா என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கும்.” என நகைச்சுவையாகக் கூறினார் இயக்குனர் மணி ரத்னம்.

The post பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம் first appeared on .

]]>
பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு https://www.91mobiles.com/tamil/ponniyin-selvan-movie-foreign-release-business-has-done/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ponniyin-selvan-movie-foreign-release-business-has-done Mon, 12 Sep 2022 04:32:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2223 பொன்னியின் செல்வன் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொன்னின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வியாபார பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவார்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் படத்தின் முதல் […]

The post பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு first appeared on .

]]>

பொன்னியின் செல்வன் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொன்னின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வியாபார பணி வேகமாக நடைபெற்று வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவார்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அத்துடன் படத்தின் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதில் முதல் கட்டமாக வெளிநாட்டு வெளியீட்டிருக்கான வியாபாரங்களை லைகா நிறுவனம் முடித்துள்ளது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும், கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனமும், Night ED Films நிறுவனமும், ஐரோப்பாவில் Boleyn நிறுவனமும், மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும் வெளியிடுகின்றன.

அதேபோல் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. அதேபோல் சிங்கப்பூரில் Home Screen நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதனிடையே பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் தன் எழுத்துக்களால் கொண்டாடப்படுபவர், பல தலைமுறைகள் தாண்டியும் போற்றப்படுபவர், தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பவர், தமிழ் உள்ளவரை உயிர்த்திருப்பார் என புகழாரம் சுட்டியுள்ளனர். பிரபல எழுத்தாளரான கல்கி 1,899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பிறந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டுவிட்டு படிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார். அவர் கூறியதைக் கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்று கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பணி புரிந்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல சுவாரசியமான பின்னணியை கூறினார். இந்த திரைப்படத்திற்காக பாலிக்கு சென்று ஆய்வுகள் நடத்தி இசையமைத்தாக தெரிவித்தார். என்னுடைய தந்தையுடன் இருந்தபோது மனோகரா உள்ளிட்ட பலவற்றை கேள்விப்பட்டு உள்ளேன். அவற்றைக் கொண்டு முதலில் இசை அமைத்து கொடுத்தேன். ஆனால் அதை மணிரத்னம் நிராகரித்து விட்டார்.

அதன் பின்னே பாலி சென்றோம், நம் மன்னர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு நடத்திய ஆய்வை வைத்து இசையை உருவாக்கி மணிரத்னத்திற்கு காண்பித்தேன். நன்றாக இருப்பதாக கூறி தேர்வு செய்தார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

The post பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு first appeared on .

]]>