rajini https://www.91mobiles.com/tamil Wed, 23 Aug 2023 14:21:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் https://www.91mobiles.com/tamil/best-rajinikanth-movies-in-ott/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-rajinikanth-movies-in-ott Thu, 24 Aug 2023 04:30:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10309   1975 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி வைத்த ரஜினிக்காந்த் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார். பின் தனக்கென ஒரு ஸ்டைலை (பாணி) பின்பற்றி ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அதையே தன் படங்களில் வழங்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் சில கதையம்சமுள்ள படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தினார். பின் அதிலிருந்து மாறி தனி கதாநாயகன் ஆனதும் முழுவதும் பொழுதுபோக்குப் படங்களையே […]

The post OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் first appeared on .

]]>

 

1975 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி வைத்த ரஜினிக்காந்த் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார். பின் தனக்கென ஒரு ஸ்டைலை (பாணி) பின்பற்றி ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அதையே தன் படங்களில் வழங்க ஆரம்பித்தார்.

ஆரம்ப காலத்தில் சில கதையம்சமுள்ள படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தினார். பின் அதிலிருந்து மாறி தனி கதாநாயகன் ஆனதும் முழுவதும் பொழுதுபோக்குப் படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என அழைக்க ஆரம்பித்தனர். ரஜினிகாந்த், தமிழ் தவிர்த்து, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் ஆங்கில படங்களில் கூட நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் கதாநாயகனாகவே நடிப்பது மட்டுமின்றி வசூலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் சில OTTயில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இவரது பெரும்பாலான படங்களை அமேசான் ப்ரைம் வீடியோவிலும், சன் நெக்ஸ்ட் OTTயிலும் பார்க்க முடிகிறது. ரஜியின் முக்கிய படங்களான பில்லா, பாட்ஷா, படையப்பா போன்ற சிலபடங்களின் தமிழ் பதிப்பு எந்த OTTயிலும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்போது OTT தளத்தில் இருக்கும் படங்களில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

 

அமேசான் ப்ரைம் OTT

 

  • அபூர்வ ராகங்கள்
  • தளபதி
  • முள்ளும் மலரும்
  • சிவாஜி
  • 2.0
  • காலா
  • தர்பார்
  • குசேலன்
  • லிங்கா
  • 16 வயதினிலே
  • முரட்டுக்காளை
  • படிக்காதவன்
  • ப்ரியா
  • மன்னன்
  • பாயும்புலி
  • HUM
  • நான் அடிமை இல்லை
  • ராஜா சின்ன ரோஜா

மற்றும் பல..

அபூர்வ ராகங்கள்

இதுவே ரஜினியின் அறிமுகப்படம் ஆகும். இதில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கமல்ஹாசன். பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அதுவே அவரது அடுத்தடுத்த படங்களுக்கு காரணமாய் இருந்தது. இதில் கதாநாயகியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். அதிசய ராகம், ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே.. என  இதன் பாடல்கள் இன்றும் பிரபலம். MS விஸ்வநாதன் இதற்கு இசையமைத்து இருந்தார்.

 

முள்ளும் மலரும்

தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று முள்ளும் மலரும். ரஜினியின்  படங்களில் அவருக்கே பிடித்தமான படங்களில் ஒன்றும் இதுதான். இதை மகேந்திரன் இயக்கியிருந்தார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் வெளியான இப்படம் அண்ணன் – தங்கை உறவைப் பற்றி பேசியது. இதில் ரஜினியின் தங்கையாக ஷோபா நடித்திருந்தார். கல்கி இதழில் தொடர்கதையாக வெளியான உமா சந்திரனின் நாவலே இப்படமாக உருமாறியது. இந்த படம் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதையும், ரஜினிக்கு தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றுத் தந்தது.

 

தளபதி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே திரைப்படம் தளபதி. இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். அரவிந்த்சாமி இந்த படத்தில் தான் அறிமுகமானார். மகாபாரத கதாபாத்திரமான கர்ணனின் கதை தான் இந்த தளபதி. இது அப்போது ரஜினி நடித்த மற்ற படங்களில் இருந்து அவரை முற்றிலும் வேறு மாதிரி காட்டியது. இதன் பாடல்கள் & வசனங்கள் இன்றளவும் பிரபலம். இளையராஜா இசையில் இந்த படம் வெளியானது.

 

சிவாஜி

மிகப்பெரிய, பழைய சினிமா தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம். பின்னாளில் 3D தொழிற்நுட்பத்திற்குகூட மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது. 3 மணிநேரம் ஓடும் இந்த படத்தினை படத்தின் நீளம் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் படத்தின் திரைக்கதையும், எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன. இசை AR ரஹ்மான்.

 

சன் நெக்ஸ்ட் OTT

  • எந்திரன்
  • சந்திரமுகி
  • அண்ணாத்த
  • பேட்ட
  • கபாலி
  • முத்து
  • மாப்பிள்ளை

 

முத்து

இயக்குநர் KS ரவிக்குமார் இயக்கத்தில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் வெளியான இந்த படம் மலையாளப்படமான ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படத்தின் ரீ-மேக் ஆகும். ஆனால், ரவிக்குமார் ரஜினிக்காக நிறைய மாற்றங்களைச் செய்து ஒரு முழுமையான ‘ரஜினி படம்’ ஆக மாற்றி இருப்பார். இதற்கு இசையமைத்தவர்  AR ரஹ்மான்.

 

எந்திரன்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படம் முதலில் கமல்ஹாசனுக்காக எழுதப்பட்டது. பின் ஷாருக்கானுக்கு மாறி கடைசியாக ரஜினிக்கு வந்து சேர்ந்தது. சயின்ஸ்-பிக்ஷன் படமான இதிலும் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு பெரியது. கூடவே இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக இருக்கும். இதற்கும் இசை AR ரஹ்மான்.

 

 

The post OTTயில் சில சிறந்த ரஜினிக்காந்த் படங்கள் first appeared on .

]]>
ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! https://www.91mobiles.com/tamil/jaibhim-movie-director-happy-for-commit-in-rajini-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jaibhim-movie-director-happy-for-commit-in-rajini-movie Thu, 02 Mar 2023 13:25:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6195 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்பீம் ஜெய்பீம் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் […]

The post ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! first appeared on .

]]>

Highlights

  • நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
  • லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்பீம் ஜெய்பீம் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியோடு இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகிழ்வான தருணம்.. புதிய பயணம் இனிதே ஆரம்பம்.. என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதன்படி இப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வலைத்தளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! first appeared on .

]]>
ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-kamal-s-vikram-2-will-be-postponed-due-to-the-rajini-lokesh-alliance Fri, 17 Feb 2023 10:47:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5903 லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.   ரஜினியின் கடைசி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் […]

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>

Highlights

  • சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
  • தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

ரஜினியின் கடைசி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிக்கு கேமியோ ரோல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்பது தான்.

 

ரஜினியின் விருப்பம்

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தலைவர் 171 என்ற டைட்டிலில் அப்டேட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை, தசெ ஞானவேல் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 171 கடைசிப் படமாக இருக்கும்பட்சத்தில் அதனை லோகேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது. ரஜினி கடைசியாக ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதனால் தான் லோகேஷிடம் அதுகுறித்து பேசியதாக தெரிகிறது.

 

விட்டுக் கொடுப்பாரா கமல்?

தற்போது விஜய்யின் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என அவரே கூறியுள்ளார். அதன்பிறகு விக்ரம் 2 படத்தை இயக்க லோகேஷ் பிளான் போட்டுள்ளார். அதேநேரம் ரஜினியை இயக்க தன்னை தேடிவந்த வாய்ப்பை விட்டுவிடவும் லோகேஷுக்கு மனம் இல்லையாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்றால், அது கமல் எடுக்கும் முடிவில் தான் உள்ளதாம்.

 

லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை

ரஜினியின் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 2வை தொடங்கலாமா என லோகேஷ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் விக்ரம் இரண்டாம் பாகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கமலிடம் பேசி வருகிறாராம் லோகேஷ். தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சீக்கிரமே ரஜினி – லோகேஷ் படத்தின் அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்தால், அதுவும் எல்சியூ கான்செப்ட்டில் இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், இதுகுறித்து ரஜினி, லோகேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

 

The post ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்? first appeared on .

]]>
ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! https://www.91mobiles.com/tamil/rajinikanth-s-next-moviewith-jaibhim-direcor-tj-gnanvel/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rajinikanth-s-next-moviewith-jaibhim-direcor-tj-gnanvel Wed, 08 Feb 2023 12:26:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5671 இரண்டு தோல்விகள் தர்பார் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். குடும்ப உறவுகள் தொடர்பாக சிவா எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் ரஜினியுடன் அவர் இணைந்த அண்ணாத்த படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்ததில் அதிக ட்ரோல்களை […]

The post ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! first appeared on .

]]>

Highlights

  • ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
  • ஜெய்பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் த.செ. ஞானவேலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

இரண்டு தோல்விகள்

தர்பார் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். குடும்ப உறவுகள் தொடர்பாக சிவா எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் ரஜினியுடன் அவர் இணைந்த அண்ணாத்த படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்ததில் அதிக ட்ரோல்களை சந்தித்ததும் அண்ணாத்த படம்தான். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அதிகமாகவே அப்செட்டாகினர்.

 

ரஜினி அப்செட்

ரஜினி ரஜினிகாந்த்தும் அண்ணாத்த படத்தின் ரிசல்ட்டால் கொஞ்சம் அப்செட்டானார் என்றே கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. தர்பார், அண்ணாத்த என்ற இரண்டு படங்களின் தோல்வியை அடுத்து உடனடியாக ரஜினிக்கு ஒரு ஹிட் தேவை என்ற சூழல் உருவானது. இதனால் இளம் இயக்குநருடன் இணைய அவர் முடிவெடுத்தார். அதன்படி டாக்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார் ரஜினியின் அடுத்த படத்துக்கு இயக்குநராக கமிட் செய்யப்பட்டார்.

குழப்பம்

ஆனால் அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியடைந்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. ட்ரோல்களையும், விமர்சனத்தையும் கண்ட ரஜினி தரப்பு அவசரப்பட்டு நெல்சனை கமிட் செய்துவிட்டோமோ என்று யோசிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. அதன் வெளிப்பாடாக ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார். இல்லை இல்லை நெல்சன் இயக்கும் படத்தின் கதை இலாகாவில் கே.எஸ்.ரவிக்குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இருப்பினும் ஒருவழியாக ரஜினியின் படத்தை நெல்சனே இயக்குகிறார் என்று ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உறுதியானது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படி பல நட்சத்திரங்கள் நடிப்பதால் ஜெயிலர் படத்தின் மீது பலரது கவனமும் திரும்பியிருக்கிறது. பீஸ்ட் படம் கொடுத்த மோசமான அனுபவத்தை நெல்சன் இந்தப் படம் மூலம் போக்கிக்கொள்வாரா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஜெய்பீம் இயக்குநருடன்

ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி உருவாக ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவிவருகிறது.

 

முஸ்லீம் போலீஸாக நடிக்கிறாரா ரஜினி?

இந்தப் படமானது உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருப்பதாகவும், படத்துக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உண்மை கதையை மையமாக வைத்துதான் ஜெய்பீம் படத்தை இயக்கினார் ஞானவேல். தற்போது ரஜினியை வைத்து எடுக்கப்போகும் படமும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருக்கிறது என சொல்லப்படுவதால் இந்தப் படமும் பெரும் விவாதத்தை கிளப்பலாம். அதுமட்டுமின்றி உண்மைக் கதையில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒத்துக்கொண்டிருப்பது நிச்சயம் ஆரோக்கியமான மற்றும் ஆச்சரியமான விஷயமே என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

 

 

The post ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! first appeared on .

]]>
மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! https://www.91mobiles.com/tamil/actor-rajini-role-in-laal-salaam-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actor-rajini-role-in-laal-salaam-movie Thu, 10 Nov 2022 05:57:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3519 ஜெயிலர் படத்தைத் தெடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகின்றது. மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி. கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய […]

The post மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! first appeared on .

]]>

ஜெயிலர் படத்தைத் தெடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகின்றது. மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி.

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி ரஜினி இப்படத்தில் மும்பையை சார்ந்த டானாக நடிப்பதாகவும், அவர் 30 நிமிடங்கள் லால் சலாம் படத்தில் வருவார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் பாட்ஷா படத்தை போன்று ரஜினியின் கதாபாத்திரம் லால் சலாம் படத்தில் செம மாஸாக இருக்கும் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாளை (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய அமீரகம் இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்து இருக்கிறது. ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post மும்பையின் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி! first appeared on .

]]>
ரஜினியோடு இணையும் தமன்னா! https://www.91mobiles.com/tamil/tamannaah-to-pair-up-with-superstar-rajinikanth/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamannaah-to-pair-up-with-superstar-rajinikanth Tue, 16 Aug 2022 10:32:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1638 முதன் முறையாக ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணைகிறார் தமன்னா. ரஜினியுடன் முதன் முறையாக நடிப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா. அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டனர். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இது ரஜினிக்கு 169-வது படம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் முக்கிய […]

The post ரஜினியோடு இணையும் தமன்னா! first appeared on .

]]>

  • முதன் முறையாக ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணைகிறார் தமன்னா.
  • ரஜினியுடன் முதன் முறையாக நடிப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா.

அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டனர். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இது ரஜினிக்கு 169-வது படம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. படப்பிடிப்பை அடுத்த சில தினங்களில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 15 அல்லது 22 ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் வேறு படங்களில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ரஜினி ஜோடியாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபலியில் நடித்து பேசப்பட்டார். தற்போது 3 இந்தி படங்களும் 2 தெலுங்கு படங்களும் கைவசம் வைத்து நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் இன்னொரு நாயகியாக வருகிறார். ரஜினியுடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து 1999-ல் வெளியான படையப்பா படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிக்கு வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தமன்னா உள்ளார். இந்தியில் அவர் நடித்த குலாபோ சிதாபோ, ஹிம்மத்வாலா உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தமிழில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. 2005-ம் ஆண்டில் இருந்து தமன்னா திரைத்துறையில் இருந்து வருகிறார். இந்தியில் தற்போது பப்ளி பவுன்சர், போலே சுதியான், ப்ளான் ஏ ப்ளான் பி படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக விஷால் நடித்திருந்த ஆக்சன் படத்தில் இடம்பெற்றிருந்தார் தமன்னா. சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருப்பதால் தமன்னாவின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது.

The post ரஜினியோடு இணையும் தமன்னா! first appeared on .

]]>
பார்த்திபனை பாராட்டி ரஜினி கைப்பட எழுதிய கடிதம் https://www.91mobiles.com/tamil/tamil-cinema-director-parthiban-met-actor-rajinikanth/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-cinema-director-parthiban-met-actor-rajinikanth Thu, 21 Jul 2022 11:59:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1014 இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. இத்திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘இரவின் நிழல்’ ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பார்த்திபன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். […]

The post பார்த்திபனை பாராட்டி ரஜினி கைப்பட எழுதிய கடிதம் first appeared on .

]]>

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. இத்திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘இரவின் நிழல்’ ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பார்த்திபன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது ரஜினிகாந்த் இரவின் நிழல் படத்தையும் பார்த்திபனையும் பாராட்டியுள்ளார். அதில், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்.. அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும்.. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்..! என்று வாழ்த்தி கடிதம் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார்.

The post பார்த்திபனை பாராட்டி ரஜினி கைப்பட எழுதிய கடிதம் first appeared on .

]]>