realme GT Neo 5 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:11:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 240W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 9ஆம் தேதி வெளியாகிறது Realme GT Neo 5 https://www.91mobiles.com/tamil/realme-gt-neo-5-confirmed-with-240w-fast-charging-gets-ready-to-launch-on-february-9th/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-gt-neo-5-confirmed-with-240w-fast-charging-gets-ready-to-launch-on-february-9th Thu, 02 Feb 2023 05:58:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5484 ரியல்மி நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் புதிய அம்சங்களுடன் புதிய மொபைல் ஒன்றை வெளியிட இருக்கிறது. ஷாவ்மி ரெட்மி டிஸ்கவரி எடிஷன் (Xiaomi Redmi Note 12 Discovery Edition)  210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்தது. அதே நேரத்தில் OnePlus மற்றும் Oppo ஆகிய 2 பிராண்ட்களும் தங்களின் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தின. இப்போது, Realme நிறுவனம் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதன் வரவிருக்கும் Realme GT Neo […]

The post 240W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 9ஆம் தேதி வெளியாகிறது Realme GT Neo 5 first appeared on .

]]>

Highlights

  • Realme GT Neo 5 மொபைலின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து இருக்கிறது ரியல்மி
  • இந்த மொபைல் வரும் 9ஆம் தேதி பகல் 2 மணிக்கு வெளியாக இருக்கிறது
  • இந்த ரியல்மி ஜிடி நியோ 5 மொபைல் 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளிவர இருக்கிறது.

ரியல்மி நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் புதிய அம்சங்களுடன் புதிய மொபைல் ஒன்றை வெளியிட இருக்கிறது. ஷாவ்மி ரெட்மி டிஸ்கவரி எடிஷன் (Xiaomi Redmi Note 12 Discovery Edition)  210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்தது. அதே நேரத்தில் OnePlus மற்றும் Oppo ஆகிய 2 பிராண்ட்களும் தங்களின் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தின. இப்போது, Realme நிறுவனம் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதன் வரவிருக்கும் Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் மூலம் மற்ற பிராண்ட்களை ஆச்சரியப்பட செய்துவிட்டது. காரணம் என்னவென்றால், ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் ‘240W ஃபாஸ்ட் சார்ஜிங்’ ஆதரவைக் கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

அறிமுகம்

முதலில் இந்த மொபைல், பிப்ரவரி 27 அல்லது மார்ச் 2 ஆம் தேதிக்கு இடையில் பார்சிலோனாவில் திட்டமிடப்பட்ட MWC 2023 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில், வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9ம் தேதி 2 மணி அளவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

இரண்டு வகை சார்ஜிங்

இந்த டீசரில் நிறுவனம் அதன் Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அறிமுகம் செய்வதும் உறுதியாகியுள்ளது. இதைத் தவிர வேறெந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், டெக் வட்டார தகவலின் படி, Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் 240W மற்றும் 150W என்று இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரேட்டிங்

இதைத் தவிர, இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் உடன் 16GB ரேம் கொண்ட மாடலாக வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மொபைல் Android 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் மூலம் இயங்குவதாக TEENA தகவல் குறிப்பிடுகிறது. Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள்-கோர் சோதனையில் 1279 புள்ளிகளையும், மல்டி-கோர் சுற்றில் 3902 புள்ளிகளையும் பெற முடிந்தது என்று சமீபத்திய ரேட்டிங் தகவல்கள் குறிப்பிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதியில் இந்த போனிற்கு நிகரான பாஸ்ட் சார்ஜிங் வசதி எந்த போனிலும் இல்லை.

 

Realme GT Neo 5 சிறப்பம்சங்கள்

 

  • ரேம்                                  –               6 GB
  • பராசஸர்                          –               Qualcomm Snapdragon 8 Plus Gen 1
  • பின்பக்க கேமரா             –               50 MP + 8 MP + 2 MP
  • முன்பக்க கேமரா            –               16 MP
  • பேட்டரி                           –               5000 mAh
  • திரை                               –               6.7 inches (17.02 cm)
  • இயங்குதளம்                   –               Android v13
  • UI                                     –               Realme UI
  • சேமிப்புத்திறன்               –               128 ஜிபி
  • 5G ஆதரவு                       –               இல்லை (இந்திய பதிப்பில்)

The post 240W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 9ஆம் தேதி வெளியாகிறது Realme GT Neo 5 first appeared on .

]]>
240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறதா ரியல்மி ஜிடி நியோ 5? https://www.91mobiles.com/tamil/realme-gt-neo-5-specs-leaked-ahead-of-launch-240w-ultra-fast-charging/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-gt-neo-5-specs-leaked-ahead-of-launch-240w-ultra-fast-charging Tue, 10 Jan 2023 06:50:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4837 Realme நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. உலகளவில் இதன் அறிமுகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனானது 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Realme GT Neo 5 தற்போது இந்த போன் சீன சான்றிதழ் தளமான TENAA இல் தோன்றியுள்ளது. RMX3706 என்ற மாதிரி எண் உடன் […]

The post 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறதா ரியல்மி ஜிடி நியோ 5? first appeared on .

]]>

Realme நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. உலகளவில் இதன் அறிமுகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனானது 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme GT Neo 5

தற்போது இந்த போன் சீன சான்றிதழ் தளமான TENAA இல் தோன்றியுள்ளது. RMX3706 என்ற மாதிரி எண் உடன் தோன்றி இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 இன் வாரிசாக இந்த Realme GT Neo 5 மொபைல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 2,772 x 1,240-பிக்சல் அடர்த்தி கொண்ட 6.7 அங்குல 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா

அதேபோல் புதிய ரியல்மி போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என்றும் இதில் ஒன்று OIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி முதன்மை கேமரா சென்சாரைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

240 வாட்ஸ் சார்ஜிங்

ஆதரவு TENAA சான்றிதழ் தளம் சார்ஜ் செய்யும் நேரம் குறித்த தகவலை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகிறது. இதுவரை வெளியான போன்களில் ஐக்யூ 10 ப்ரோவில் மட்டும் தான் 200 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் 5000 எம்ஏஎச் பேட்டரியை 10 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதை வைத்து பார்க்கும் போது 240 வாட்ஸ் சார்ஜர் மூலம் ஸ்மார்ட்போனை 10 நிமிடத்திற்குள் சார்ஜ் செய்யலாம்.

பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 2425mAh திறன் கொண்ட இரண்டு செல்களும், 2,225mAh திறன் கொண்ட இரண்டு செல்களும் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 4,850mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

சிப்செட்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

சிறப்பம்சங்கள்

  • Qualcomm Snapdragon 8 Plus Gen 1 | 6 GB Processor
  • 6.7 inches (17.02 cm) டிஸ்ப்ளே
  • 50 MP + 12 MP + 5 MP முன்பக்க கேமராக்கள்
  • 16 MP செல்ஃபி கேமரா
  • 5000 mAh பேட்டரி
  • 240W பாஸ்ட் சார்ஜிங்

The post 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறதா ரியல்மி ஜிடி நியோ 5? first appeared on .

]]>
240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் ரியல்மி போன்! https://www.91mobiles.com/tamil/realme-gt-neo5-smartphone-to-launch-in-india-soon-with-240w-fast-charging-support/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-gt-neo5-smartphone-to-launch-in-india-soon-with-240w-fast-charging-support Tue, 06 Dec 2022 11:26:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4121 ரியல்மி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி ஜிடி நியோ5 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதேசமயம் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக […]

The post 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் ரியல்மி போன்! first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி ஜிடி நியோ5 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதேசமயம் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

பேட்டரி

இணையதளத்தில் வெளியான தகவலின்படி, ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-செல் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இதில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் கண்மூடி திறக்கும் நேரத்தில் ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிடும். இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். இந்த போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிராசஸர்

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் ஒரு 5ஜி போன் ஆகும். இது மீடியாடெக் Dimensity 9-series பிராசஸர் வசதியைக் கொண்டு இருக்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இருக்கும்.

The post 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் ரியல்மி போன்! first appeared on .

]]>