redmi A1 Plus https://www.91mobiles.com/tamil Fri, 14 Oct 2022 12:19:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது ஷாவ்மியின் பட்ஜெட்போன் Redmi A1plus https://www.91mobiles.com/tamil/xiaomi-launches-redmi-a1-plus-under-rs-8000-in-india-price-discount-specifications-and-availability/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-launches-redmi-a1-plus-under-rs-8000-in-india-price-discount-specifications-and-availability Fri, 14 Oct 2022 12:19:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3045 ஷாவ்மி தரப்பில் இருந்து ரெட்மி ஏ1 ப்ளஸ் என்ற மொபைல் இன்று இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த Redmi A1 plus ஒரு பட்ஜெட் போன் ஆகும். இது லைட் ப்ளூ (light blue), லைட் க்ரீன் (light green), ப்ளாக் (black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் பின்பக்கத்தில் லெதர் போன்ற ப்னிஷிங் வழங்கப்பட்டுள்ளது. சிப்செட் & இயங்குதளம் இது MediaTek Helio A22 சிப்செட் மற்றும் க்ளீன் ஆண்ட்ராய்டு 12 (Go Edition) […]

The post அறிமுகமானது ஷாவ்மியின் பட்ஜெட்போன் Redmi A1plus first appeared on .

]]>

ஷாவ்மி தரப்பில் இருந்து ரெட்மி ஏ1 ப்ளஸ் என்ற மொபைல் இன்று இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த Redmi A1 plus ஒரு பட்ஜெட் போன் ஆகும். இது லைட் ப்ளூ (light blue), லைட் க்ரீன் (light green), ப்ளாக் (black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் பின்பக்கத்தில் லெதர் போன்ற ப்னிஷிங் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட் & இயங்குதளம்

இது MediaTek Helio A22 சிப்செட் மற்றும் க்ளீன் ஆண்ட்ராய்டு 12 (Go Edition) இயங்குதளத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் இது 20க்கும் அதிகமான மொழி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனின் எடை 192 கிராம்.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.52 அங்குல HD+ டிஸ்ப்ளே, 120Hz touch sampling rate உடன் வந்துள்ளது. இதில் கேமராவுக்கென ‘டாட் ட்ராப்’ வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1600×720 பிக்சல் அடர்த்தியுடன் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷ்யோவைக் கொண்டுள்ளது.

ரேம் & சேமிப்புத்திறன்

இந்த போன் 2ஜிபி + 32ஜிபி மற்றும் 3ஜிபி + 32ஜிபி என இரண்டு ரேம் வேரியண்டுகளில் வெளியாகி இருக்கிறது. இதில் LPDDR4X ரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் சேமிப்புத்திறனை 1 TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதற்கென மைக்ரோ SD ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

இதன் பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080p பிக்சல் வீடியோகளை எடுக்க முடியும். செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் Full HD வீடியோ எடுக்கலாம்.

பேட்டரி

இந்த ரெட்மி ஏ1 ப்ளஸ் மொபைலில் 5000mAh பேட்டரி 10W fast charging support உடன் வருகிறது. இதில் ஒரு நல்ல விஷயம் என்ன என்றால், இதற்கான 10W சார்ஜர் மொபைல் உடனேயே வழங்கப்படுகிறது. இது Micro USB பின் வகையைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

இது ஒரு இரட்டை சிம் வசதி கொண்ட போன் ஆகும். மேலும், இது ஒரு 4ஜி போன் ஆகும். இதன் பின்பக்கத்தில் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 2.4GHz Wi-Fi, Bluetooth 5.0, FM Radio, GPS, 3.5mm Audio jack போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

விலை & சலுகை

ரெட்மி ஏ1 ப்ளஸ் மொபைலின் 2ஜிபி + 32ஜிபி மாடல் ரூ7,499 என்ற விலைக்கும், 3ஜிபி + 32ஜிபி மாடல் ரூ8,499 என்ற விலைக்கும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாதம் 17ம் தேதி மதியம் 12 மணி முதல் flipkart.com, mi.com, mi Home மற்றும் கடைகளிலும் இந்த போனை வாங்க முடியும். பண்டிகை சலுகையாக இந்த மாதம் 31ம் தேதி வரை இந்த ரெட்மி ஏ1 ப்ளஸ் மொபைலின் 2ஜிபி + 32ஜிபி மாடலை ரூ500 விலை சலுகையில், ரூ 6,999க்கும், 3ஜிபி + 32ஜிபி மாடலை ரூ7,999 என்ற விலைக்கும் வாங்கலாம்.

The post அறிமுகமானது ஷாவ்மியின் பட்ஜெட்போன் Redmi A1plus first appeared on .

]]>
14ம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி A1 ப்ளஸ் https://www.91mobiles.com/tamil/redmi-a1-plus-india-launch-on-october-14th/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-a1-plus-india-launch-on-october-14th Wed, 12 Oct 2022 07:12:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2948 வருகிற அக்.14 ஆம் தேதியன்று அட்டகாசமான டிசைன், க்ளீன் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், பெரிய பேட்டரி போன்ற அம்சங்களுடன் – பிரபலமான நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? விரிவாக பார்க்கலாம். ரெட்மி ஏ1 பிளஸ் நீங்கள் ரெட்மி (Redmi) ரசிகர் என்றாலும் சரி, அல்லது பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவராக இருந்தாலும் சரி.. இந்த கட்டுரை உங்களுக்குத் தான். […]

The post 14ம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி A1 ப்ளஸ் first appeared on .

]]>

வருகிற அக்.14 ஆம் தேதியன்று அட்டகாசமான டிசைன், க்ளீன் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், பெரிய பேட்டரி போன்ற அம்சங்களுடன் – பிரபலமான நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி ஏ1 பிளஸ்

நீங்கள் ரெட்மி (Redmi) ரசிகர் என்றாலும் சரி, அல்லது பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவராக இருந்தாலும் சரி.. இந்த கட்டுரை உங்களுக்குத் தான்.

புதிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ள ஷாவ்மி நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனை விளம்பரம் செய்யவும் தொடங்கி உள்ளது. சமீபத்தில் தான் Xiaomi நிறுவனம் அதன் Redmi A1 மாடலை அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஏ1 பிளஸ் மாடல் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. கடந்த மாதம் அறிமுகமான ரெட்மி ஏ1 ஆனது 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 SoC மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு இருந்தது.

அம்சங்கள்

ஷாவ்மி நிறுவனம் அதன் ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்காக பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, Redmi A1+ ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.

நிறம்

ஷாவ்மி நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களின்படி, ரெட்மி A1+ ஸ்மார்ட்போன் ஆனது நீலம், பச்சை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வெளி வர இருக்கிறது. இருப்பினும், அந்தந்த நிறங்களின் துல்லியமான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுகுறித்த விவரங்கள் அறிமுகத்தின் போது தெரிய வரும்.

கேமரா

ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் செட்டப்பை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது பேனலில் லெதர் டெக்ஷர் ஃப்னிஷை (leather texture finish) கொண்டிருக்கும், மேலும் இது பிங்கர் ஃப்ரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

பேட்டரி & ஓஎஸ்!

ஷாவ்மி நிறுவனத்தின் மைக்ரோசைட்டின் படி, ரெட்மி ஏ1 பிளஸ் மாடல் ஆனது “க்ளீன்” ஆன ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் MIUI சாப்ட்வேர் ஸ்கின் இல்லாமல், முழுமையாக ஆண்ட்ராய்டு 12-இன் கீழ் மட்டுமே இயங்கும். மேலும் Redmi A1+ ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை

ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனாலும் இது ரூ.9,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி நிறுவனத்திடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்வதால், ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ரூ.10,000 க்குள் என்கிற விலைக்கே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ரூ.10,000 க்குள் அறிமுகமாகும் பட்சத்தில், இது 10கே பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்களின் பட்டியலில் கூட இடம்பெறலாம். விலையை மீறிய டிசைன், 5,000mAh பேட்டரி, டூயல் ரியர் கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்), வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் கொண்ட டிஸ்பிளே என ரூ.10,000க்கு.. இது மிகச் சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

The post 14ம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி A1 ப்ளஸ் first appeared on .

]]>
ரெட்மியில் இருந்து 3 பட்ஜெட் போன்கள்! https://www.91mobiles.com/tamil/upcoming-redmi-phones-launch-soon-including-redmi-a1-plus-redmi-11a-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=upcoming-redmi-phones-launch-soon-including-redmi-a1-plus-redmi-11a-5g Mon, 22 Aug 2022 07:36:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1733 எனது கவனம் எல்லாம் ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்களின் மீது மட்டுமே இருக்கும்!” என்று கூறும் அளவிற்கு Redmi போனை விரும்பும் ஆளா? ஆம் என்றால், உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. இதில் புதிதாக வர இருக்கும் 3 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளோம். அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? விரிவாக பார்க்கலாம்! ரெட்மி ஏ1 (Redmi A1) மற்றும் ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) […]

The post ரெட்மியில் இருந்து 3 பட்ஜெட் போன்கள்! first appeared on .

]]>

எனது கவனம் எல்லாம் ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்களின் மீது மட்டுமே இருக்கும்!” என்று கூறும் அளவிற்கு Redmi போனை விரும்பும் ஆளா? ஆம் என்றால், உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. இதில் புதிதாக வர இருக்கும் 3 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளோம்.

அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? விரிவாக பார்க்கலாம்!

ரெட்மி ஏ1 (Redmi A1) மற்றும் ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ரெட்மி ஏ1 5G (Redmi A1 5G)

Redmi A1+ ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது 220733SFG என்கிற மாடல் நம்பர் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இது Redmi A1 ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் மாடலாக இருக்கும் என்பதையும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகலாம் என்று தெரிகிறது.

சிப்செட்

ரெட்மி A1 ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் பல வகையான சான்றிதழ் மற்றும் தரப்படுத்தல் தளங்களில் காணப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், ரெட்மி ஏ1 மாடல் ஆனது அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தரவுத்தளத்திலும் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது. யுஎஸ் எஃப்சிசி பட்டியலைப் பகிர்ந்து கொண்ட ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Redmi A1 ஆனது MediaTek Helio A22 SoC மூலம் இயக்கப்படும்.

ரெட்மி A1 பட்ஜெட் ஸ்மார்ட்போன்-ஆ? இல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்-ஆ?

மீடியாடெக் ஹீலியோ A22 SoC-ஐ தவிர்த்து Redmi A1 ஆனது அளவீட்டில் 164.67மிமீ (நீளம்) மற்றும் 76.56மிமீ (அகலம்) கொண்டதாக இருக்கலாம் என்றும் US FCC பட்டியல் தெரிவிக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் 2.4GHz வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்புக்கான ஆதரவுடனும் வரலாம் என்று கூறுகிறது. ஆகமொத்தம் Redmi A1 ஸ்மார்ட்போன் ஆனது (கண்டிப்பாக) ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் Redmi 11A ஸ்மார்ட்போனும் ரெடியாகிறது. ரெட்மி ஏ1 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, சியோமி நிறுவனம் Redmi 11A என்கிற ஸ்மார்ட்போனிலும் வேலை செய்து வருகிறது. இது ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆக வரும் எனத் தெரிகிறது. அதாவது ரெட்மி 11ஏ ஸ்மார்ட்போன் ஆனது Redmi 10A மாடலின் மேம்பட்ட பதிப்பாக இருக்கும். ரெட்மி 10ஏ ஆனது 4G கனெக்டிவிட்டியை மட்டுமே கொண்டு இருக்கிறது.

Redmi 11A ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரெட்மி 11A ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்பதை பற்றி போதுமான விவரங்கள் இல்லை. ஆனால் 3C சான்றிதழ் தளம் வழியாக இதன் 5G ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் காணப்பட்ட மீடியாடெக்கின் ஹீலியோ சிப்செட் ஆனது 11ஏ மாடலில் Dimensity SoC ஆக அல்லது ஒரு Snapdragon சிப்செட் உடன் மாற்றப்படலாம். ஆக இதுவும் “பட்ஜெட் விலை” 5ஜி ஸ்மார்ட்போனாகவே வரும்.

The post ரெட்மியில் இருந்து 3 பட்ஜெட் போன்கள்! first appeared on .

]]>