ரெட்மியில் இருந்து 3 பட்ஜெட் போன்கள்!

எனது கவனம் எல்லாம் ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்களின் மீது மட்டுமே இருக்கும்!” என்று கூறும் அளவிற்கு Redmi போனை விரும்பும் ஆளா? ஆம் என்றால், உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. இதில் புதிதாக வர இருக்கும் 3 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளோம்.

அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? விரிவாக பார்க்கலாம்!

ரெட்மி ஏ1 (Redmi A1) மற்றும் ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ரெட்மி ஏ1 5G (Redmi A1 5G)

Redmi A1+ ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது 220733SFG என்கிற மாடல் நம்பர் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இது Redmi A1 ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் மாடலாக இருக்கும் என்பதையும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகலாம் என்று தெரிகிறது.

சிப்செட்

ரெட்மி A1 ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் பல வகையான சான்றிதழ் மற்றும் தரப்படுத்தல் தளங்களில் காணப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், ரெட்மி ஏ1 மாடல் ஆனது அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தரவுத்தளத்திலும் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது. யுஎஸ் எஃப்சிசி பட்டியலைப் பகிர்ந்து கொண்ட ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Redmi A1 ஆனது MediaTek Helio A22 SoC மூலம் இயக்கப்படும்.

ரெட்மி A1 பட்ஜெட் ஸ்மார்ட்போன்-ஆ? இல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்-ஆ?

மீடியாடெக் ஹீலியோ A22 SoC-ஐ தவிர்த்து Redmi A1 ஆனது அளவீட்டில் 164.67மிமீ (நீளம்) மற்றும் 76.56மிமீ (அகலம்) கொண்டதாக இருக்கலாம் என்றும் US FCC பட்டியல் தெரிவிக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் 2.4GHz வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்புக்கான ஆதரவுடனும் வரலாம் என்று கூறுகிறது. ஆகமொத்தம் Redmi A1 ஸ்மார்ட்போன் ஆனது (கண்டிப்பாக) ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் Redmi 11A ஸ்மார்ட்போனும் ரெடியாகிறது. ரெட்மி ஏ1 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, சியோமி நிறுவனம் Redmi 11A என்கிற ஸ்மார்ட்போனிலும் வேலை செய்து வருகிறது. இது ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆக வரும் எனத் தெரிகிறது. அதாவது ரெட்மி 11ஏ ஸ்மார்ட்போன் ஆனது Redmi 10A மாடலின் மேம்பட்ட பதிப்பாக இருக்கும். ரெட்மி 10ஏ ஆனது 4G கனெக்டிவிட்டியை மட்டுமே கொண்டு இருக்கிறது.

Redmi 11A ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரெட்மி 11A ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்பதை பற்றி போதுமான விவரங்கள் இல்லை. ஆனால் 3C சான்றிதழ் தளம் வழியாக இதன் 5G ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் காணப்பட்ட மீடியாடெக்கின் ஹீலியோ சிப்செட் ஆனது 11ஏ மாடலில் Dimensity SoC ஆக அல்லது ஒரு Snapdragon சிப்செட் உடன் மாற்றப்படலாம். ஆக இதுவும் “பட்ஜெட் விலை” 5ஜி ஸ்மார்ட்போனாகவே வரும்.