redmi note 12 4G https://www.91mobiles.com/tamil Thu, 30 Mar 2023 11:05:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியானது Redmi Note 12. https://www.91mobiles.com/tamil/redmi-note-12-cameout-with-snapdragon-685-chipset-and-120hz-amoled-display/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-cameout-with-snapdragon-685-chipset-and-120hz-amoled-display Thu, 30 Mar 2023 06:30:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7172   Redmi Note 12, புதிய ஆக்டாகோர் ப்ராசஸ்சரான Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் மிட்ரேஞ்ச் ஸ்மார்போனாக வெளியாகி இருக்கிறது. இதில் 50MP கேமரா, 11ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 33W ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஃபாஸ்ட் சார்ஜரும் இதனோடு வருகிறது. மேலும் இது இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவோம் என்ற நிறுவனத்தின் […]

The post Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியானது Redmi Note 12. first appeared on .

]]>

Highlights

  • இந்த மொபைலில் 11GB வரையிலான விர்சுவல் ரேம் வசதி உள்ளது.
  • 33W ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி இதில் இருக்கிறது
  • இந்த மொபைலுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும்

 

Redmi Note 12, புதிய ஆக்டாகோர் ப்ராசஸ்சரான Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் மிட்ரேஞ்ச் ஸ்மார்போனாக வெளியாகி இருக்கிறது. இதில் 50MP கேமரா, 11ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 33W ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஃபாஸ்ட் சார்ஜரும் இதனோடு வருகிறது. மேலும் இது இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவோம் என்ற நிறுவனத்தின் வாக்குறுதியோடு வெளியாகி இருக்கிறது.

 

டிஸ்ப்ளே

இந்த Redmi Note 12  120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச ப்ரைட்னஸ் 1200 nits ஆகும். மேலும் இது 394PPI அடர்த்தியுடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மொபைல் Corning Gorilla Glass பாதுகாப்பு மற்றும் தூசு, நீரில் இருந்து பாதுகாக்கும் IP53 ரேட்டிங் உடன் வெளியாகி இருக்கிறது.

கேமரா

இதில் f1.8 அப்பசருடன் கூடிய 50MP முதன்மை கேமரா, 8MP வைடு ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளன. கூடவே ஒரு LED ஃப்ளாஷ் லைட்டும் உள்ளது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை எடுக்க முடியும். முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 13MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் 1080p வீடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் ப்ரோ மோட், டைம் லேப்ஸ், பனோரமா, போர்ட்ரேட் மோட், வாய்ஸ் ஷட்டர் போன்ற பலவிதமான மோடுகளையும் , பில்டர்களையும் கொண்டுள்ளன.

 

சிப்செட்

இந்த மொபைல் ஒரு 4ஜி மொபைல் ஆகும். அதற்கென இதில் லேட்டஸ்ட் சிப்செட்டான Snapdragon 685 என்ற சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 6nmல் தயாரான சிறந்த திறன் கொண்ட ஆக்டா கோர் ப்ராஸசர் ஆகும்.

 

மெமரி

இந்த Redmi Note 12 மொபைலில் 6GB LPDDR4X  ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மொபைலில் 11GB வரையிலான விர்சுவல் ரேம் வசதியும் உள்ளது. கண்டிப்பாக இது சிறந்த வசதியாகும். அதேவேளையில் இந்த மொபைல், 64GB, 128GB என இரண்டு விதமான சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. இது UFS 2.2 வகை மெமரியைச் சேர்ந்தது. மேலும் இதன சேமிப்புத்திறனை மைக்ரோ SD கார்டு மூலம் 1 TB வரை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு Micro SD Slot ஒன்றும் வழங்கப்படுள்ளது.

பேட்டரி

Redmi Note 12 மொபைலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh லித்தியம்  பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு 33W சார்ஜரும் மொபைலோடு வருகிறது. இந்த மொபைல் 165.66mm X 75.96 X 7.85mm என்ற அளவில்,  86 கிராம்  எடையில் வெளியாகி இருக்கிறது.

 

இயங்குதளம்

சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 மேல் ரெட்மியின் MIUI 14 ஸ்கின் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட இயங்குதளத்துடன் வெளியாகி இருக்கிறது Redmi Note 12.  இந்த மொபைலுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என ரியல்மி தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

இரட்டை சிம் மொபைலான Redmi Note 12 மொபைல் லூனார் ப்ளாக் (Lunar Black), சன்ரைஸ் கோல்டு (Sunrise Gold), ஐஸ் ப்ளூ (Ice Blue) என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதில், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இதுதவிர  ப்ளூடூத் 5, Wi-Fi, GPS, OTG, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன.

 

விலை

இந்த Redmi Note 12 மொபைல் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அவை கீழ்கண்ட விலைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது.

6GB RAM + 64GB சேமிப்புத்திறன் = ரூ.13,999

6GB RAM + 128GB சேமிப்புத்திறன் = ரூ.15,999

 

 

The post Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியானது Redmi Note 12. first appeared on .

]]>
ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் பயன்படுத்தப்பட்ட முதல் போனாக உலக சந்தையில் அறிமுகமானது Redmi Note 12 4G https://www.91mobiles.com/tamil/redmi-note-12-4g-launched-as-the-first-snapdragon-685-phone-in-global-market/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-4g-launched-as-the-first-snapdragon-685-phone-in-global-market Fri, 24 Mar 2023 07:12:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7050   Redmi Note 12 5G, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ 5G உடன் கூடிய ரெட்மி நோட் 12 சீரிஸ் உலகச் சந்தையில் வெளியானது. ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டைக் கொண்ட முதல் சாதனம் நோட் 12 ஆகும். தொடரில் உள்ள மற்ற ஃபோன்கள் 5G இணைப்பைக் கொண்டிருக்கும் போது, ​​Note 12 ஆனது 4G இணைப்பை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் இது 50MP முதன்மை கேமரா உட்பட் பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் […]

The post ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் பயன்படுத்தப்பட்ட முதல் போனாக உலக சந்தையில் அறிமுகமானது Redmi Note 12 4G first appeared on .

]]>

Highlights

  • ரெட்மி நோட் 12 சீரிஸ் உலக சந்தையில் வெளியிடப்பட்டது.
  • இந்த Note 12 சீரிஸ் ஆனது 4G நெட்வொர்க்கை மட்டுமே கொண்டுள்ளது
  • ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டை பயன்படுத்திய முதல் போன் இதுவாகும்

 

Redmi Note 12 5G, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ 5G உடன் கூடிய ரெட்மி நோட் 12 சீரிஸ் உலகச் சந்தையில் வெளியானது. ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டைக் கொண்ட முதல் சாதனம் நோட் 12 ஆகும். தொடரில் உள்ள மற்ற ஃபோன்கள் 5G இணைப்பைக் கொண்டிருக்கும் போது, ​​Note 12 ஆனது 4G இணைப்பை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் இது 50MP முதன்மை கேமரா உட்பட் பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுள்ள 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

 

Redmi Note 12 அம்சங்கள் மற்றும் அம்சங்கள்

டிஸ்ப்ளே

Redmi Note 12 4G ஆனது தொடரின் மற்ற மொபைல்களில் இருக்கக்கூடிய அதே 6.67 அங்குல AMOLED FHD+ 120Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரையானது 1,200 nits இன் உச்ச பிரகாசம், DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 4,500:000:1 என்ற மாறுபட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இது ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது ஒரு 6nm ப்ராஸசர் ஆகும். இந்த சிப்செட் தற்போதுள்ள ஸ்னாப்டிராகன் 680 இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பாகும்.

மெமரி

Redmi Note 12 4G ஆனது 4 GB / 6 GB / 8 GB LPDDR4x ரேம் மற்றும் 128 GB / 256 GB UFS 2.2 சேமிப்பகத்துடன் வந்துள்ளது. கூடுதல் சேமிப்புத்திறனுக்காக, மொபைலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 இல் இயங்குகிறது.

 

கேமரா

இது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட, அல்ட்ரா வைடு, மேக்ரோ என  பின்பக்கத்தில் 3 கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு LED ஃப்ளாஷ் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி & கேமரா

நோட் 12 சீரிஸ் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. பின் பேனலில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் யூனிட் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைலின் வலது பக்கத்தில் அமைந்துள்ள பவர் பட்ட்டன், கைரேகை ஸ்கேனருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ரெட்மி நோட் 12 4ஜியின் அடிப்படை மாடலின் விலை 199 யூரோக்கள். ஓனிக்ஸ் கிரே (Onix gray), ஐஸ் ப்ளூ (Ice blue) மற்றும் புதினா பச்சை (Mint green) ஆகிய மூன்று வண்ணங்களில் இதை வாங்கலாம். இது மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது .

 

உலக சந்தையில் கிடைக்கும் Redmi Note 12 5G, Note 12 Pro 5G மற்றும் Note 12 Pro+ 5G ஆகிய மாடல்களே இந்தியாவிலும் வெளியாக இருக்கின்றன.. இந்த மாடல்கள் முறையே 299 யூரோக்கள், 399 யூரோக்கள் மற்றும் 499 யூரோக்கள் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

The post ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் பயன்படுத்தப்பட்ட முதல் போனாக உலக சந்தையில் அறிமுகமானது Redmi Note 12 4G first appeared on .

]]>
குறைந்த விலையில் வெளியாகிறது ரெட்மி நோட் 12 4ஜி https://www.91mobiles.com/tamil/redmi-note-12-4g-smartphone-with-android-13-os-will-be-launched-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-4g-smartphone-with-android-13-os-will-be-launched-soon Thu, 19 Jan 2023 09:58:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5196 ரெட்மி நோட் 12 4ஜி போன்        ஏற்கனவே ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் போன்களான ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன. ஆனால் ரெட்மி நோட் 12 4ஜி போன் ஆனது குறைந்த விலையில் அறிமுகமாகும்.   ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இணையத்தில் […]

The post குறைந்த விலையில் வெளியாகிறது ரெட்மி நோட் 12 4ஜி first appeared on .

]]>

Highlights

  • ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகமாகும்

ரெட்மி நோட் 12 4ஜி போன்       

ஏற்கனவே ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் போன்களான ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன. ஆனால் ரெட்மி நோட் 12 4ஜி போன் ஆனது குறைந்த விலையில் அறிமுகமாகும்.

 

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி

இணையத்தில் கசிந்த தகவலின்படி ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். மேலும், 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இருக்கும். தற்போது இந்த புதிய போனின் இயங்குதளம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி விவரங்கள் மட்டும் தெரியவந்துள்ளது. விரைவில் இந்த ரெட்மி நோட் 12 4ஜி முழு விவரங்களையும் ரெட்மி நிறுவனம் வெளியிடும்.

 

ரெட்மி நோட் 12 5ஜி

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். 6.67 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 5ஜி ஸ்மார்ட்போன்.

 

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதி

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 5ஜி போன். ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

 

48எம்பி பிரைமரி கேமரா

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

 

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, வைஃபை, ப்ளூடூத் வி5.1, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ், மோனோ ஸ்பீக்கர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 5ஜி ஸ்மார்ட்போன். இதன் ஆரம்ப விலை ரூ.16,499-ஆக உள்ளது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post குறைந்த விலையில் வெளியாகிறது ரெட்மி நோட் 12 4ஜி first appeared on .

]]>