Redmi note 12 pro plus https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 09:00:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-5-mobiles-that-charge-100-percent-in-25-minutes Mon, 13 Mar 2023 07:29:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6791   சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக […]

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>

Highlights

  • இப்போது வரும் மொபைல்கள் பெரும்பாலும் வேகமான சார்ஜிங் திறனைக் கொண்டு வெளிவருகின்றன.
  • குறிப்பாக சில மொபைல்கள் 25 நிமிடங்களுக்குள் 100% முழுவதுமாக சார்ஜ் ஆகும் திறனைப் பெற்றுள்ளன.

 

சமூக வலைதளங்களைப் பார்வையிடுவது, வீடியோ பார்ப்பது, கேம்கள் விளையாடுவது, இசைக் கேட்பது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு என்பது அதிகரித்துவிட்டது. மேலும் இப்போது வெளியாகும் மொபைல்கள் 5ஜி ஆதரவைக் கொண்டு இருப்பதால், பெரிய பேட்டரியின் தேவை முன்பை விட முக்கியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும் என்பதே. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஐக்யூ 11, ஒன்ப்ளஸ் 11ஆர், ஷாவ்மி 12 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் உள்ளன.

ஐக்கூ 11

ஐக்கூ 11 5G  (IQOO 11 5G) என்பது  ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78 அங்குல அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது.

ஒன்பிளஸ் 11ஆர்

ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது இந்த மொபைலை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த மொபைல் 50 எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே, இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் 19 நிமிடங்களில் இந்த மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.16 அங்குல OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.

ஷாவ்மி 12 ப்ரோ

ஷாவ்மி 12 ப்ரோ (Xiaomi 12 pro) ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகிறது. மேலும், இந்த மொபைலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

ஷாவ்மி 13 ப்ரோ

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மி 13 ப்ரோ மொபைல் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் ஆகும் திறனை கொண்டவை. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.

The post 25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள் first appeared on .

]]>
வேற லெவல் கேமராக்களோடு வெளியாகிறது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ்! https://www.91mobiles.com/tamil/redmi-note-12-pro-plus-release-on-5th-jan/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-pro-plus-release-on-5th-jan Tue, 13 Dec 2022 10:32:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4270 ரெட்மி நிறுவனம் வரும் ஜனவரி 5-ம் தேதி ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய் இருக்கிறது. அதாவது வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த மொபைல் அறிமுகம் ஆக இருக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது 200எம்பி கேமராவுடன் வெளிவரும். எனவே இந்த பொங்கல் பண்டிகைக்கு நமது கிராமங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு விழாக்களை இந்த ரெட்மி நோட் […]

The post வேற லெவல் கேமராக்களோடு வெளியாகிறது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ்! first appeared on .

]]>

ரெட்மி நிறுவனம் வரும் ஜனவரி 5-ம் தேதி ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய் இருக்கிறது. அதாவது வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த மொபைல் அறிமுகம் ஆக இருக்கிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ்

இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது 200எம்பி கேமராவுடன் வெளிவரும். எனவே இந்த பொங்கல் பண்டிகைக்கு நமது கிராமங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு விழாக்களை இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸமார்ட்போன் கேமராவின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுக்க முடியும். மேலும் இந்த மொபைலின் மற்றொரு முக்கிய அம்சமாக 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

5ஜி ஆதரவு

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவருகிறது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த போன் மிக அருமையாக உதவும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டால்பி விஷன்

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். இதுமட்டுமின்றி இந்த மொபைல் 900nits வெளிச்சத்தன்மையையும், 10Bits கலரையும் கொண்டு இருக்கிறது. கூடவே டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதனால் டிஸ்ப்ளேவைப் பொருத்தவரை இந்த மொபைல் அட்டகாசமாக இருக்கும்.

சிப்செட்

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த சிப்செட் சிறந்த செயல்திறனை வழங்கும். மேலும் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தி உதவுகிறது இந்த Dimensity 1080 சிப்செட்.

கேமரா

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் 200 மெகாபிக்சல் முதன்மை கேமராவில் 1/1.4 அங்குல ISOCELL HPX சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால் புகைப்படங்களும் வீடியோவும் தரமானதாக இருக்கும். அதேபோல் இதன் அல்ட்ரா வைடு கேமரா 119 டிகிரி வரையிலான பரப்பை படம் பிடிக்கக்கூடியது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவும் வழங்கப்பட இருக்கிறது. இதில் IOS எனப்படும் இமேஜ் ஆப்டிகல் ஸ்டேபிலேசெஷன் இருக்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.

மெமரி நீட்டிப்பு

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் மிட்ரேஞ் விலையில் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

The post வேற லெவல் கேமராக்களோடு வெளியாகிறது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ்! first appeared on .

]]>
200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்? https://www.91mobiles.com/tamil/redmi-note-12-pro-plus-with-200-mp-camera-coming-soon-to-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-pro-plus-with-200-mp-camera-coming-soon-to-india Thu, 08 Dec 2022 09:44:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4173 இப்போது வெளியாகும் மொபைல்கள் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒரு பக்கம ரியல்மி 120MP கேமராவோடு இரண்டு மொபைல்களை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து விரைவில் ஷாவ்மி 200MP கேமராவோடு ஒரு மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. சமீபத்தில் ஷாவ்மிக்கு (Xiaomi) சொந்தமான ரெட்மி (Redmi) நிறுவனம் சீனாவில் Redmi Note 12 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பின்னர், Xiaomi சமீபத்திய Redmi Note தொடர் வரிசையில் – Redmi Note 12, Redmi […]

The post 200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்? first appeared on .

]]>

இப்போது வெளியாகும் மொபைல்கள் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒரு பக்கம ரியல்மி 120MP கேமராவோடு இரண்டு மொபைல்களை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து விரைவில் ஷாவ்மி 200MP கேமராவோடு ஒரு மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

சமீபத்தில் ஷாவ்மிக்கு (Xiaomi) சொந்தமான ரெட்மி (Redmi) நிறுவனம் சீனாவில் Redmi Note 12 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பின்னர், Xiaomi சமீபத்திய Redmi Note தொடர் வரிசையில் – Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Redmi Note 12 Pro+ அறிமுகமாக இருக்கிறது.

டிப்ஸ்டர் முகுல் சர்மா, தனது சமீபத்திய ட்வீட்டில், “Redmi Note 12 தொடர் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம். Redmi Note 12 Pro+ இன் இந்திய வேரியண்ட் மாடல் 200MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும்.” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த போனின் விலை மற்றும் மற்ற சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 12 5ஜி சிறப்பம்சம்

சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) போன் 6.67 அங்குல பிளாட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முழு-HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் கூடிய பஞ்ச்-ஹோல் AMOLED பேனல் உடன் வருகிறது. இது 48MP பிரைமரி லென்ஸ் மற்றும் 2MP டெப்த் யூனிட்டுடன் பின்புறத்தில் டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 8எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்

இது புதிய Snapdragon 4 Gen 1 SoC குவால்காம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையின் அடிப்படையில் ஆக்டா-கோர் சிப்செட் ஆகும். இந்த மொபைல் வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, மேலும் 8GB + 256GB வேரியண்ட் உடன் வருகிறது.

பேட்டரி

சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சார்ஜ் ஆகும் பெரிய சைஸ் பேட்டரி.! சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சார்ஜ் ஆகும் பெரிய சைஸ் பேட்டரி.! இந்த சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது மற்றும் 33W வேகமான சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தையும் இது ஆதரிக்கிறது. இது சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் மற்றும் இசை கேட்பதற்கு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்கை கொண்டுள்ளது. இது சாதராண ப்ரோ வேரியண்ட் மாடலின் விபரங்கள் ஆகும்.

Redmi Note 12 Pro+ 5G சிறப்பம்சங்கள்

Redmi Note 12 Pro+ 5G போன் 6.67 அங்குல பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் வீதம் கொண்ட OLED பேனல் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த பேனல் 10-பிட் கலர் டெப்த் மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. இது டால்பி விஷன் ஆதரவையும் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கேமரா

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200MP ISOCELL HPX ப்ரைமரி லென்ஸ் உடன் வரும். இது தவிர, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் உள்ள முக்கிய லென்ஸ் 1/1.4 அங்குல சென்சார் ஆகும். மூன்றும் நடுக்கமில்லாத, தெளிவான வீடியோ பதிவுக்கான OIS ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தில் இந்த போன் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.

விலை

Redmi Note 12 Pro+ 5G ஆனது 8GB+12GB RAM வேரியண்டுகளில் கிடைக்கும். இந்தியாவில் இந்த போன் சுமார் ரூ. 25,000 என்ற விலை வரம்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்? first appeared on .

]]>
இந்தியாவில் ஷாவ்மி 12ஐ ஹைபர்சார்ஜ் என்ற பெயரில் அறிமுகமாகிறதா ரெட்மி நோட் 12ப்ரோ ப்ளஸ்? https://www.91mobiles.com/tamil/redmi-note-12-pro-5g-said-to-launch-in-india-as-xiaomi-12i-hypercharge-smartphone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-12-pro-5g-said-to-launch-in-india-as-xiaomi-12i-hypercharge-smartphone Tue, 01 Nov 2022 10:00:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3334 Xiaomi சமீபத்தில் சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸில் நான்கு போன்களை அறிமுகப்படுத்தியது. இது ரெட்மி நோட் 12 5G , ரெட்மி நோட் 12 ப்ரோ 5G, ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5G மற்றும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஆகிய மாடல்களை கொண்டிருந்தது. ரெட்மி நோட் 12 சீரிஸின் இந்திய வேரியண்ட்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. Xiaomi சீன ரெட்மி நோட் 12 […]

The post இந்தியாவில் ஷாவ்மி 12ஐ ஹைபர்சார்ஜ் என்ற பெயரில் அறிமுகமாகிறதா ரெட்மி நோட் 12ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>

Highlights

  • ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5G ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் ஷாவ்மி 12i ஹைப்பர்சார்ஜ் ஆக அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
  • ஷாவ்மியின் ஹைப்பர்சார்ஜ் தொடர் அதிவேக சார்ஜிங் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

Xiaomi சமீபத்தில் சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸில் நான்கு போன்களை அறிமுகப்படுத்தியது. இது ரெட்மி நோட் 12 5G , ரெட்மி நோட் 12 ப்ரோ 5G, ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5G மற்றும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஆகிய மாடல்களை கொண்டிருந்தது. ரெட்மி நோட் 12 சீரிஸின் இந்திய வேரியண்ட்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. Xiaomi சீன ரெட்மி நோட் 12 போன்களில் ஒன்றை வேறு பெயரில் இந்தியாவிற்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Xiaomi 12i HyperCharge

Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இதற்கு முன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5ஜி இந்தியாவிற்கு வந்தாலும் வேறு பெயரில் வந்தால், அது 120W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Redmi Note 12 Pro+ 5G பெயர் மாற்றப்பட்டு Xiaomi 12i HyperCharge ஆக இந்தியாவிற்கு வருவதைப் பற்றிய தகவலை MIUI சோதனையாளர் Kacper Skrzypek பகிர்ந்துள்ளார்.

எத்தனை போன்கள்?

இவர் MIUI குறியீட்டில் சாதனங்களின் குறிப்பைக் கண்டறிந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ரெட்மி Note 12 Pro 5G இந்தியாவில் வெண்ணிலா Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ் ஆக வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. இருப்பினும், 11i தொடரில் இரண்டு மொபைல்கள் உள்ளதால், 12i தொடரிலும் இதையே நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் 12i சீரிஸ் அறிமுகம் குறித்த எந்த விவரங்களையும் Xiaomi உறுதிப்படுத்தவில்லை.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இருப்பினும், நிறுவனம் தனது புதிய ஹைப்பர்சார்ஜ் தொடர் ஃபோன்களை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ், அதாவது Redmi Note 12 Pro+ 5G இன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Xiaomi 12i HyperCharge ஆனது சீனாவின் Redmi Note 12 Pro+ 5G இல் காணப்படும் அதே அம்சங்களைக் கொண்டிருக்கும். இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீத ஆதரவுடன் 6.67 அங்குல முழு HD+ OLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் மேல் மையத்தில் பஞ்ச் ஹோல் கட் அவுட்டையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6nm MediaTek Dimensity 1080 சிப்செட் இலிருந்து சக்தியைப் பெறுகிறது.

200MP சாம்சங் HPX கேமரா

இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். பின்புறத்தில், மூன்று கேமராக்கள் இருக்கும். இந்த சாதனம் புதிய 200MP சாம்சங் HPX பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்பிற்கு 16MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளன. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்குகிறது.

விலை

இது இந்தியாவில் 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் விருப்பங்களுடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்படலாம். சீனாவில், Redmi Note 12 Pro+ 5G அடிப்படை மாடலின் விலை CNY 2199 ஆக இருக்கிறது. இதன் விலை இந்தியாவில் தோராயமாக ரூ. 25,100 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் விருப்பத்தின் விலை CNY 2399 ஆகும். இது தோராயமாக ரூ. 27,400 விலையாகும். எனவே, 8ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் ரூ.30,000க்குள் இருக்கலாம்.

The post இந்தியாவில் ஷாவ்மி 12ஐ ஹைபர்சார்ஜ் என்ற பெயரில் அறிமுகமாகிறதா ரெட்மி நோட் 12ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>