reno 8 series https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:53:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! https://www.91mobiles.com/tamil/oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications Tue, 31 Jan 2023 04:32:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5370 அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ […]

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>

Highlights

  • ஒப்போ நிறுவனம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இது, இந்த ரெனோ 8 சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8) ஆகும். ஆக ஒப்போ ரெனோ 8டி மாடல், இந்த சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

என்ன விலை?

கிடைக்கப்பெற்ற லீக் தகவலின் அடிப்படையில், ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தோராயமாக ரூ.28,500 ஆக இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் விலை ஆகும்; அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல. ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடல், ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது!

வெளியாகி இருக்கும் பல்வேறு லீக்-களைக் கொண்டு ஒப்போ ரெனோ 8டி 5ஜி: என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிசைன் உடனான 6.43 அங்குல AMOLED டிஸ்ப்ளே பேனல் இடம் பெறலாம். மேலும் இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும், ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 100எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மைக்ரோ சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி செப்ஃபி கேமரா இருக்கலாம்.

 

ப்ராசஸர்

கீக்பெஞ்ச் வழியாக கிடைத்த தகவலின்படி, ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பேக் செய்யப்படலாம். அது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அனுப்பப்படலாம்.

கனெக்டிவிட்டி

ப்ளூடூத் எஸ்இஜி லிஸ்டிங் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் மற்றும் கலர்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்படும். பேட்டரியை பொறுத்தவரை, எவ்வளவு எம்ஏஎச் திறனை பேக் செய்யும் என்பது பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் 33W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்பது போல் தெரிகிறது.

அறிமுகத் தேதி

ஒப்போவின் புதிய ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது; ஆனால் பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 8 அன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>
இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 8 சீரிஸ் https://www.91mobiles.com/tamil/oppo-reno-8-series-international-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno-8-series-international-launch Tue, 19 Jul 2022 12:00:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=966 ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை […]

The post இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 8 சீரிஸ் first appeared on .

]]>

ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டிருந்து. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

வசதிகளைப் பொருத்தவரை ரெனோ 8 மாடல் 120Hz refresh rate உடன் கூடிய 6.43-அங்குல முழு HD+ AMOLED திரையையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.7 அங்குல திரையையும் கொண்டுள்ளது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் Octocore MedaiTek Dimensity 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ Octocore MedaiTek Dimensity 8100 மேக்ஸ் SoC புராசஸரையும் கொண்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மூன்று கேமரா செட் அப் உடன் வருகிறது.
இந்த மொபைல்கள் 80W fast charging support உடன் கூடிய 4500mAh பேட்டரியை கொண்டிருக்கின்றன. ரெனோ 8 மாடலின் 8GB + 128GB சேமிப்புத்திறன் கொண்ட போன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 GB + 256 GB சேமிப்புத்திறன் கொண்ட போன் விலை ரூ.45,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் ஷிம்மர் ப்ளாக் (shimmer black) மற்றும் ஷிம்மர் கோல்டு (shimmer gold) நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடல் கிளேசுடு பிளாக் (Glazed Black) மற்றும் கிளேஸ்டு கிரீன் (Glazed green) ஆகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 8 சீரிஸ் first appeared on .

]]>