smartphone https://www.91mobiles.com/tamil Mon, 22 Aug 2022 06:55:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஆபத்தான 36 ஆப்கள்! https://www.91mobiles.com/tamil/list-of-dangerous-malware-apps-which-change-name-icon-steal-user-data-silently/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-dangerous-malware-apps-which-change-name-icon-steal-user-data-silently Mon, 22 Aug 2022 06:55:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1729 பலவகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் கூட, கூகுள் நிறுவனத்தால் பிளே ஸ்டோருக்குள் நுழையும் மால்வேர் செயலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. அந்த வரிசையில் புதிதாக 35 மால்வேர் செயலிகள் சேர்ந்துள்ளன! பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Bitdefender-இன் கூற்றுப்படி, புதிதாக கண்டறியப்பட்டுள்ள 35 மால்வேர் செயலிகளை இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த மால்வேர்கள் வழக்கம் போல பலரின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சிக்கின்றன மற்றும் தேவையற்ற விளம்பரங்களை காட்டுகின்றன. என்ன செய்யும் […]

The post ஆபத்தான 36 ஆப்கள்! first appeared on .

]]>

பலவகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் கூட, கூகுள் நிறுவனத்தால் பிளே ஸ்டோருக்குள் நுழையும் மால்வேர் செயலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. அந்த வரிசையில் புதிதாக 35 மால்வேர் செயலிகள் சேர்ந்துள்ளன! பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Bitdefender-இன் கூற்றுப்படி, புதிதாக கண்டறியப்பட்டுள்ள 35 மால்வேர் செயலிகளை இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த மால்வேர்கள் வழக்கம் போல பலரின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சிக்கின்றன மற்றும் தேவையற்ற விளம்பரங்களை காட்டுகின்றன.

என்ன செய்யும் இந்த மால்வேர்?

Bitdefender-இன் பிளாக் போஸ்டின் படி, இந்த செயலிகள் தத்தம் பெயர்களையும், ஐகான்களையும் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்மார்ட்போனில் தன் இருப்பை மறைத்து கொள்கின்றன, பின்னர் ஆக்கிரமிப்பு மிகுந்த கட்டயாமான விளம்பரங்களை வழங்க தொடங்குகின்றன”. எடுத்துக்காட்டுக்கு GPS Location என்கிற ஆப் ஆனது இன்ஸ்டால் செய்யப்பட்டதும், அதன் பெயரை “Settings” என மாற்றுகிறது. அதாவது நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளின் பட்டியலில் இதுபோன்ற மால்வேர் ஆப்களின் பெயர் காட்டப்படாது, இதனால் அவை இயங்குவதை உங்களால் அறிந்துகொள்ள முடியாமல் போகலாம்!

எந்த Category-களில் பரவிக் கிடக்கின்றன!

ஆபத்தான மால்வேர் ஆப்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த செயலிகள் ஜிபிஎஸ், போட்டோ பில்டர்ஸ், வால்பேப்பர்ஸ் என மிகவும் பிரபலமான Categories-களில் பரவி உள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான டவுன்லோட்களை பெற்று இருக்கின்றன. ஆண்ட்ராய்டு ஆப்களில் விளம்பரங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும் கூட, இந்த குறிப்பிட்ட மால்வேர் ஆப்கள் அவற்றின் சொந்த Framework-ஐ பயன்படுத்துகின்றன. இதனால் அதை இன்ஸ்டால் செய்திருக்கும் ஸ்மார்ட்போனுக்கு தீங்கு தரும் வேலையைச் செய்கின்றன.

அந்த மால்வேர்களின் பட்டியல்!

1. Walls light – Wallpapers Pack
2. Big Emoji – Keyboard
3. Grad Wallpapers – 3D Backdrops
4. Engine Wallpapers – Live & 3D
5. Stock Wallpapers – 4K & HD
6. EffectMania – Photo Editor
7. Art Filter – Deep Photoeffect
8. Fast Emoji Keyboard
9. Create Sticker for Whatsapp
10. Math Solver – Camera Helper
11. Photopix Effects – Art Filter
12. Led Theme – Colorful Keyboard
13. Keyboard – Fun Emoji, Sticker
14. Smart Wifi
15. My GPS Location
16. Image Warp
17. Camera Art
18. Girls Wallpaper HD
19. Cat Simulator
20. Smart QR Creator
21. Colorize Old Photo
22. GPS Location Finder
23. Girls Art Wallpaper
24. Smart QR Scanner
25. GPS Location Maps
26. Volume Control
27. Secret Horoscope
28. Smart GPS Location
29. Animated Sticker
30. Master Personality Charging Show
31. Sleep Sounds
32. QR Creator
33. Media Volume Slider
34. Secret Astrology
35. Colorize Photos
36. Phi 4K Wallpaper – Anime HD

மேற்குறிப்பிட்ட 36 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும் கூட, அதை உடனே அன்இன்ஸ்டால் அல்லது டெலிட் செய்யவும்.

மால்வேரின் நுழைவை தவிர்ப்பது எப்படி?

மால்வேர் செயலிகளால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் எந்தவொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பும், அந்த செயலிக்கு அதிக எண்ணிக்கையிலான டவுன்லோடுகள் மற்றும் விமர்சனங்கள் இல்லை எனில் அதைத் தவிர்த்து விடவும்! – எக்கச்சக்கமான அனுமதிகளை கேட்கிறதா? – அதை இன்ஸ்டால் செய்வதை தவிர்த்து விடவும் (ஏனெனில் பிற ஆப்களை ஈர்க்கும் திறன் கொண்ட மால்வேர் ஆப்கள் தான் எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கும்) – கூகுள் பிளே ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான இடம் தான். ஆனாலும், நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

The post ஆபத்தான 36 ஆப்கள்! first appeared on .

]]>
உங்கள் போனில் எத்தனை GB RAM இருக்கணும்? https://www.91mobiles.com/tamil/how-much-ram-does-a-smartphone-need-and-how-much-ram-is-need-for-better-performance/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-much-ram-does-a-smartphone-need-and-how-much-ram-is-need-for-better-performance Wed, 03 Aug 2022 05:02:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1314 கடந்த சில வருடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள ரேமின் அளவு நம்பமுடியாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 2 ஜிபி ரேம் முதல் துவங்கி ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு 12 ஜிபி வரை ரேம்களின் அளவு அதிகரித்துள்ளது. இது அனைவரிடமும் சில பொதுவான கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையில் ஒரு ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை? எவ்வளவு ரேம் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக செயல்படும்? அதிகபட்ச ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகப் பணம் கொடுத்து வாங்குவது தேவை தானா? […]

The post உங்கள் போனில் எத்தனை GB RAM இருக்கணும்? first appeared on .

]]>

கடந்த சில வருடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள ரேமின் அளவு நம்பமுடியாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 2 ஜிபி ரேம் முதல் துவங்கி ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு 12 ஜிபி வரை ரேம்களின் அளவு அதிகரித்துள்ளது. இது அனைவரிடமும் சில பொதுவான கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • உண்மையில் ஒரு ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை?
  • எவ்வளவு ரேம் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் சூப்பராக செயல்படும்?
  • அதிகபட்ச ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகப் பணம் கொடுத்து வாங்குவது தேவை தானா?
    இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதிக ரேம் தேவையா அல்லது எது சிறந்தது என்று ஆராய்வதற்கு முன், ரேம் ஏன் ஒரு ஸ்மார்ட்போனில் முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ரேண்டம் அக்சஸ் மெமரி (ரேம் – RAM) என்பது ஒரு பொதுவான கணினி வன்பொருளாகும். உங்கள் டெஸ்க்டாப் கணினி, மடிக்கணினிகள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள் அடிக்கடி அணுகப்படும் தகவல்களைச் சேமிக்க தற்காலிக நினைவகமாக RAM பயன்படுத்துகின்றது. ரேம் சாதனங்கள் முழுவதும் வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் ரேம் அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரியான செயல்பாட்டையே கொண்டுள்ளது.

உங்களுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை? இந்தக் கேள்விக்கான பதில் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. சில ஸ்மார்ட்போன் பயனர்கள் குறைவான பிரௌசிங், குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்பு மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவைக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு அதிக ரேம் என்பது தேவையில்லை. ஆனால், சிலர் மொபைல் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றைச் செய்கிறார்கள், இவர்களைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக அதிக ரேம் தேவைப்படும்.

எவ்வளவு ரேம் தேவை என்பதைக் கண்டறிய, நாம் ஸ்மார்ட்ஃபோன்களில் செய்யும் சில பொதுவான செயல்பாடுகளைப் பார்ப்போம். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகள் பயன்பாட்டைப் பொறுத்து 100 முதல் 300 எம்பி வரை ரேம் எடுக்கும். குரோம் மற்றும் யூடியூப் போன்ற உலாவிகள் மற்றும் வீடியோ பிளேயர்கள் முறையே, எத்தனை டேப்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் நீங்கள் பார்க்கும் வீடியோவின் தரத்தைப் பொறுத்து சுமார் 500 எம்பி பயன்படுத்துகிறது.

மொபைல் கேம்கள் அவற்றின் கிராஃபிக் தரம் மற்றும் நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விளையாடுகிறீர்களா என்பதைப் பொறுத்து பெரிதும் மாறுபடும். ஆண்ட்ராய்டில் FIFA Soccer போன்ற கேம்கள் இயங்கும் போது 1 GB RAM விட அதிகமாகப் பயன்படுத்தலாம். உங்கள் இயக்க முறைமையால் பயன்படுத்தப்படும் ரேமையும் நீங்கள் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. சில மொபைல் நிறுவனங்கள் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி நினைவகத்தை வழங்குகின்றன என்பதை இங்கிருந்து நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் தற்போது எவ்வளவு நினைவகத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் போனின் Settings செல்லவும். பின் அதில் Device Care or Device Maintenance என்பதைத் தட்டவும். அதில் Memory என்பதைத் தட்டவும். இங்கிருந்து, உங்கள் மொபைலின் மொத்த RAM அளவு, தற்போது இயங்கும் ஆப்ஸ் மற்றும் சேவைகளால் தற்போது எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அதிக ரேம் வைத்திருப்பதன் முக்கிய நன்மை என்னவென்றால், இது உங்களுடைய ஸ்மார்ட்போனை மெதுவாகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேவேளையில், மூட வேண்டிய கட்டாயத்தில் இல்லாமல் ஒரே நேரத்தில் அதிக பயன்பாடுகளை இயக்க இது அனுமதிக்கிறது. அதிக கிராஃபிக்ஸ் உள்ள கேம்களை விளையாடுவதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வைத்திருப்பது அவசியம். மற்ற நேரத்தில் உங்களுக்கு வெறும் 4 ஜிபி ரேம் அல்லது அதற்கும் குறைவான ரேம் இருந்தால் கூட போதுமானது தான்.

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போனை பயன்படுதுபவர் என்றால், வீடியோக்களை பார்ப்பதை விட அதிகமாக சில வேலைகளை செய்ய விரும்பினால் 2ஜிபி ரேம் பொறுமையைச் சோதிக்கலாம். வழக்கமான தினசரி பணிகளை மேற்கொள்ளும்போது OS தொடர்பான மந்தநிலையை சந்திக்கலாம். ஆண்ட்ராய்டு 10 அல்லது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் போன்களில் குறைந்தபட்சம் 2ஜிபி ரேம் இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கூகுள் அறிவித்தது கவனிக்கத்தக்கது. பொதுவான பயன்பாடுகளை இயக்கும் போது உங்கள் ஃபோன் வேகம் குறைவதாக உணர்ந்தால், உங்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்று பொருள். ஆகவே அதிக ரேம் கொண்ட மொபைலை வாங்குவது பற்றி நீங்கள் பரிசீலிப்பது நல்லது. உங்கள் தேவைக்கேற்ப 2ஜிபி அல்லது 12ஜிபி வரை நீங்கள் ரேமை பயன்படுத்தலாம். கூடுதல் ரேம் இருக்கும் மொபைலை வாங்குவது அடுத்த பெரிய அப்டேட் வந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போன் நன்றாக இயங்குவதை உறுதி செய்யும்.

The post உங்கள் போனில் எத்தனை GB RAM இருக்கணும்? first appeared on .

]]>